Published:Updated:

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ்

கம்பெனி பயோடேட்டா

கம்பெனி பயோடேட்டா பகுதியில் நாம் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம், வாகனங்களுக்கான ஸ்டீல் மற்றும் அலாய் சக்கரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் (steel Strips Wheels Limited).

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)

நிறுவனத்தின் வரலாறு...

1991-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் பஞ்சாபில் உள்ள சண்டிகருக்கு அருகில் மாருதி சுஸூகி நிறுவனத்துக்காக சக்கரங்கள் உற்பத்தி செய்யும் பணியைத் தொடங்கியது. 1997-ம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனமான ரிங் டெக்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப ரீதியிலான கூட்டணியை அமைத்தது. 2002-ம் ஆண்டில் டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். 2006-ம் ஆண்டில் இலகுரக கமர்ஷியல் வாகனங் களுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. 2007-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பி.எஸ்.ஏ ப்யூஜியாட் சிட்ரியன் நிறுவனம் உற்பத்தி செய்யும் கார்களுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. அதே ஆண்டில் ஹெவி கமர்ஷியல் வாகனங்களுக்கான சக்கரங் களையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2008-ம் ஆண்டில் சென்னையில் தன்னுடைய உற்பத்தி வசதியைத் தொடங்கியது இந்த நிறுவனம். 2010-ம் ஆண்டில் ஜாம்ஷெட்பூர் உற்பத்தி வசதியை நிறுவிய இந்நிறுவனம், 2016-ம் ஆண்டில் டாப்பர் உற்பத்தி வசதியில் யு.டி.இ எம்.ஏ.ஒய்.ஆர் ஸ்டீல் சர்வீஸ் சென்டரை நிறுவியது. இந்த ஸ்டீல் சர்வீஸ் சென்டரானது மாதமொன்றுக்கு 20,000 டன் அளவிலான ஸ்டீலை புராசஸ் செய்யும் திறனைக் கொண்டதாகும். 2017-ம் ஆண்டில் தன்னுடைய சென்னை உற்பத்தி வசதியில் டிரக்குகளுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். அதே ஆண்டில், குஜராத்தில் உள்ள மெஹசனா உற்பத்தி வசதியில் கார்களுக்கான அலாய் வீல்கள் உற்பத்தியை ஆரம்பித்தது. அதே ஆண்டில் சராய்கேலா உற்பத்தி வசதியில் ஸ்டீல் ஹாட் ரோலிங் மில் வசதியை நிறுவியது. இது ஒரு பின்னோக்கிய ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும். 2021-ம் ஆண்டில் மெஹ்சனா உற்பத்தி வசதியில் 2.50 மில்லியன் எண்ணிக்கை அளவிலான அலாய் வீல் உற்பத்திக்கான வசதி நிறுவப்பட்டது.

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)

தொழில் பிரிவுகள்...

ஸ்டீல் சக்கரங்கள், அலாய் சக்கரங்கள் மற்றும் ஹாட் ரோலிங் மில் என்ற மூன்று பெரும்பிரிவுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஸ்டீல் சக்கரங்கள் பிரிவில் பல்வேறு வகையிலான அகலம் மற்றும் நவீன வடிவமைப்புகளைக் (style) கொண்ட சக்கரங்களை நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க உற்பத்தி செய்துதருகிறது இந்த நிறுவனம். பல்வேறு வகையிலான கிரேடுகளைக் கொண்ட ஸ்டீல்கள், பல்வேறு வகையிலான வெளிப்புற தோற்றத்துக்கான பினிஷிங் (பவுடர் கோட்டிங், அக்ரிலிக் பவுடர் போன்ற பினிஷிங்), பலவித அதிநவீன சக்கர உற்பத்தி நடைமுறைகள் போன்றவற்றுக்கான வசதிகளைக் கொண்டு இயங்குவதால், வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க பல்வேறு ரகமான சக்கரங்களை ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் நிறுவனத் தால் உற்பத்தி செய்து தரமுடிகிறது.

ஸ்டீல் சக்கரங்கள் பிரிவில் ட்யூப்லெஸ், மல்ட்டி-பீஸ், ஹைவென்ட், செமி ஃபுல்பேஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட எடை அளவைக் கொண்ட சக்கரங்களை உற்பத்தி செய்து தருகிறது இந்த நிறுவனம். உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல் சக்கரங்கள் பல்வேறு தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டு (corner & radial fatigue test, impact test, bi-axial test உள்ளிட்ட பல) தரத்துக்கான உறுதி செய்யப்படுகிறது.

அலாய் வீல்கள் பிரிவில் பல்வேறு ஓ.இ.எம் வாகன உற்பத்தியாளர்களின் தேவைக்கு இணங்க சக்கரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறைந்த அழுத்தம் கொண்ட டை காஸ்ட் உற்பத்தி நடை முறையைக் கொண்டு குறைந்த எடையைக் கொண்ட பெயின்ட் அடிக்கப்பட்ட அதிக பளபளப்பும் சிறப்பான பினிஷிங்கும் கொண்ட டைமண்ட் கட் அலாய் வீல்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 13 முதல் 20 இன்ச் வரையிலான விட்டம் மற்றும் 3.5 முதல் 9.0 இன்ச் வரையிலான அகலம் கொண்ட அலாய் வீல்களையும் உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)

நிறுவனத்தின் சிறப்பு...

இந்த நிறுவனத்தின் சராய் கேலா உற்பத்தி வசதியில் உள்ள ஹாட் ரோலிங் மில் வசதி இந்த நிறுவனத்தின் உற்பத்தி ரீதியிலான பின்னோக்கிய ஒருங்கிணைப்பு (backward integration) வசதியை வழங்குகிறது. ஆண்டொன்றுக்கு 60,000 மெட்ரிக் டன் அளவிலான ஸ்டீலைக் கையாளுகிற திறனைக் கொண்டுள்ள இந்த உற்பத்தி வசதி தொழில்நுட்பரீதியாக மிகவும் அதிநவீனமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தப் பிரிவில் சைடு ரிங், லாக் ரிங், ப்ளாஞ்ச் ரிங், டீ மெளண்டபிள் ரிங், பார்ஸ் மற்றும் ப்ளாட்ஸ் போன்ற வகை ஸ்டீல் தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

தொழில்நுட்பரீதியாகத் தென் கொரியாவைச் சார்ந்த கல்நிக் கம்பெனி லிமிடெட், ஜப்பானைச் சார்ந்த நிப்பான் ஸ்டீல் & சுமிட்டோமோ மெட்டல் கார்ப்ப ரேஷன் மற்றும் இந்திய நிறுவன மான டாடா ஸ்டீல் லிமிடெட் போன்றவற்றுடன் கூட்டணியை அமைத்துள்ளது. இந்த நிறுவனங் கள் இந்த நிறுவனத்தில் முதலீடு களையும் செய்திருப்பது ஒரு சிறப்பாகக் கருதப்பட வேண்டிய ஒன்றாகும்.

கார் உற்பத்தியாளர்களில் மாருதி சுஸூகி, டாடா, மஹிந்திரா, எம்ஜி, ஹோண்டா, நிசான், ஹூண்டாய், கியா, ஜாகுவார், பீஜியோட், லேண்ட் ரோவர், ஃபோர்டு, ஸ்கோடா, ஃபோக்ஸ் வேகன், பி.எம்.டபிள்யூ, ரெனால்ட் உள்ளிட்ட பல முண்ணனி நிறுவனங்கள் ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் வாடிக்கை யாளராக உள்ளன. டிராக்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மஹிந்திரா, சொனாலிகா, எஸ்கார்ட், ஏசர், ஸ்வராஜ், ப்ரீட், குபோட்டா, கேப்டன் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கை யாளர்களாவார்கள். கமர்ஷியல் மற்றும் ஆஃப்ரோடு வாகன உற்பத்தியாளர்களில் டாடா, அசோக் லேலண்ட், டைம்லர், எஸ்கார்ட்ஸ், ஸ்வராஜ் மஸ்தா, மேன், வோல்வோ எய்ஷர், மஹிந்திரா எர்த் மாஸ்டர், லார்சன் அண்ட் டப்ரோ, ஜே.சி.பி, சி.என்.ஹெச் இண்டஸ்ட்ரியல் உள்ளிட்ட பல முன்னணி உற்பத்தி யாளர்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளனர்.

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஸ்டீல், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், வாடிக்கையாளர்களின் தேவைகளில் ஏற்படும் மாறுதல்கள், மாறும் தொழில்நுட்பம் போன்ற வையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும். மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்கும் வாகன உற்பத்தித் துறையானது பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் சார்ந்திருக்கும் துறை ஆகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியடையாது போனாலோ, தேக்க நிலையை சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கவே செய்யும்.

ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)
ஸ்டீல் ஸ்டிரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: BSE CODE: 513262)

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இதன் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!