Published:Updated:

டாடா பவர் கம்பெனி லிமிடெட்!

டாடா பவர் கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
டாடா பவர் கம்பெனி

கம்பெனி பயோடேட்டா

டாடா பவர் கம்பெனி லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
டாடா பவர் கம்பெனி
பிரீமியம் ஸ்டோரி
டாடா பவர் கம்பெனி

பாரம்பர்யமிக்க டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பவர் கம்பெனி லிமிடெட் பற்றித்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிற டாடா பவர் நிறுவனம், தனக்குச் சொந்தமான மற்றும் பிற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து ஆண்டொன்றுக்குக் கிட்டத்தட்ட 13,515 அளவிலான மின் உற்பத்தித்திறனைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த உற்பத்தி அளவில் 34% அளவிலான மின்சாரம் புதுப் பிக்கத்தக்க அளவிலான மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத ரீதியிலான (clean energy) உற்பத்தி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது தனிச்சிறப்பான ஒரு விஷயமாகும்.

டாடா பவர் கம்பெனி லிமிடெட்!

இந்த நிறுவனம் செயல்படும் துறையில் இருக்கிற ஒவ்வொரு மதிப்புக்கூட்டுதல் பிரிவிலும் (உதாரணமாக, மேற்கூரையில் நிறுவப்படும் சூரிய ஒளியில் இருந்து மின்சார உற்பத்தி செய்யும் முறைக்கான உபகரணங்களை நிறுவுதல் போன்றவை – solar roof top) மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிற ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது.

1915-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்றைக்கு நவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதில் முன்னோடி யாகவும், மின் உற்பத்தி நிலையங்களை நிறுவும் புராஜெக்ட்டுகளை நிறுவுவதில் சிறந்த மேலாண்மைத் திறனைக் கொண்டும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கான முயற்சிகளை முன்னெடுத்தும், வாடிக்கை யாளர் சேவையில் பிரசித்திபெற்றும் திகழ்கிறது.

டெக்னாலஜி, பிராசஸ் மற்றும் பிளாட் ஃபார்ம் என்ற மூன்று முக்கிய விஷயங்களிலும் டாடா பவர் நிறுவனம் இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களின் மத்தியில் ஒரு முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்திய மின்சார உற்பத்தித் தொழில் பிரிவில் நூற்றுக்கும் மேலான ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 12 மில்லியன் வாடிக்கையாளர்களுடைய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

சோலார் ரூஃப் டாப் பிரிவில் பொறியியல் ரீதியாக வடிவமைத்தல், தேவையான கருவிகளைக் கொள்முதல் செய்தல் மற்றும் கட்டுமானம் செய்துதருதல் (இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன்) என்னும் ஒப்பந்த ரீதியான செயல்பாட்டில் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டு ரீதியாக முதலாவது நிலையில் இருக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த நிறுவனம் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் செயல்படும் ஒரு அமைப்பில் 16 மெகாவாட் அளவிலான சூரிய ஒளியா லான மின் உற்பத்தி வசதியை (single location – multi roof) நிறுவியுள்ளது. உலக அளவில் ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள அதிகபட்ச சூரிய ஒளியாலான மின் உற்பத்தி வசதிகளில் இதுவே மிகப்பெரியதாகும்.

டாடா பவர் கம்பெனி லிமிடெட்!

1.621 மில்லியன் சதுர அடி அளவிலான பரப்பில் 46,000-க்கும் மேற்பட்ட சோலார் பேனல்களைக் கொண்டு இந்த உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது. அதே போல, 820.8 கிலோவாட் பீக் (kwp) என்ற அளவிலான உற்பத்தி மையத்தை மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவின் விளை யாட்டு மைதானத்தில் நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங்கின் மேற்கூரையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி கொண்ட மையங்களில் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் 2.67 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் நிறுவியுள்ளது இந்த நிறுவனம். இந்தியாவிலேயே முதல்முறையாக மும்பையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவிய பெருமையும் இந்த நிறுவனத்துக்கே உண்டு.

1915-ம் ஆண்டில் 40 மெகாவாட் அளவிலான மின் உற்பத்தித்திறன் கொண்ட ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்சார உற்பத்தி மையத்தை கோபோலி எனும் இடத்தில் நிறுவி செயல்படுத்தியதன் மூலம் தன்னுடைய முதலாவது மின் உற்பத்தி மையத்தை ஆரம்பித்தது டாடா பவர் நிறுவனம். 1922-ம் ஆண்டில் பிவ்பூரியில் 40 மெகாவாட், 1927-ம் ஆண்டில் ஃப்ஹ்ரா எனும் இடத்தில் 90 மெகாவாட் என மூன்று ஹைட்ரோ எலெக்ட்ரிக் உற்பத்தி மையங்களை நிறுவியது இந்த நிறுவனம். 1965-ம் ஆண்டில் ட்ராம்பேயில் தன்னுடைய முதல் தெர்மல் மின்சார உற்பத்தி மையத்தை (150 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்டது) நிறுவியது இந்த நிறுவனம்.

மும்பை நகரின் அத்தியாவசிய மின்சார உபயோகத்துக்குத் தேவைப்படும் அளவிலான மின்சார உற்பத்தியை செய்கிறது. இதற்காக 180 மெகாவாட் அளவிலான எரிவாயுவின் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் மையத்தையும் (combined cycle plant) நிறுவியது இந்த நிறுவனம்.

2002-ம் ஆண்டில் டெல்லி வித்யூத் போர்டு நிறுவனத்துடன் இணைந்து ஒரு பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப்பாக ’டாடா பவர் டெல்லி டிஸ்ட்ரி ப்யூஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததன் மூலம் வட இந்தியாவில் மின்சார விநியோகம் செய்யும் பணியைத் தொடங்கியது இந்த நிறுவனம். 2003-ம் ஆண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து (பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப்) பூடானில் இருந்து மின்சாரத்தை டெல்லிக் குக் கொண்டுவரும் பொருட்டு அதற்குத் தேவைப்படும் 1,500 கிலோ மீட்டர் அளவிலான மின் விநியோகத்துக்கு கேபிள்களை நிறுவும் பணியைச் செய்ய ஆரம்பித்தது.

2012-ம் ஆண்டில் தமோதர் வேலி கார்ப்பரேஷனுடன் இணைந்து (பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப்பில்) ஜார்க் கண்டில் உள்ள மைதான் எனும் இடத்தில் 1,050 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட மின் உற்பத்தி மையத்தை நிறுவியது. இந்த உற்பத்தி வசதியை நிறுவிய தன் மூலம் இந்த நிறுவனம் மின் உற்பத்தி, மின்சாரம் கடத்துதல் மற்றும் விநியோகம் என்ற மூன்று பிரிவிலும் பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப்பில் செயல்படும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது. மேலும், இதே ஆண்டில் குஜராத்தில் உள்ள மிதாபூர் எனும் இடத்தில் 25 ஐந்து மெகாவாட் அளவிலான உற்பத்தித்திறன் கொண்ட சூரிய ஒளியின்மூலம் மின் உற்பத்தி வசதியை நிறுவியது. 2013-ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள முந்த்ரா எனும் இடத்தில் 4,000 மெகாவாட் அளவிலான அல்ட்ரா மெகா பவர் புராஜெக்ட்டை (800 மெகாவாட் டெக்னாலஜியைப் பயன்படுத்தி) நிறுவியது.

டாடா பவர் கம்பெனி லிமிடெட்!
டாடா பவர் கம்பெனி லிமிடெட்!

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் வளத்தில் உரிமை கொண்டிருப்பது, எரிபொருள் களைக் கொண்டு செல்லும் லாஜிஸ்டிக் துறையில் இயங்குவது, மின் உற்பத்தி, மின்சாரத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்துதல், விநியோகம் மற்றும் வர்த்தகம் என்ற அனைத்துவிதமான மதிப்புக் கூட்டுதல் பிரிவிலும் இந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவைத் தாண்டி இந்தோ னேசியா (நிலக்கரி சுரங்கங்கள்), சிங்கப்பூர் (நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கான லாஜிஸ்டிக்ஸ் (கப்பல்கள்) நிறுவனம், பூடான் (ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின் உற்பத்தி வசதி). ஜார்ஜியா (187 மெகாவாட் அளவிலான ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின் உற்பத்தி வசதி), ஜாம்பியா (120 மெகாவாட் அளவிலான மின் உற்பத்தி வசதி – 50:50 கூட்டணியில் – BOOT எனும் Build- Own-Operate-Transfer என்ற வகையில்) போன்ற நாடுகளிலும் கால்பதித்துள்ளது இந்த நிறுவனம்.

டாடா பவர் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுதல் (டி.வி.எஸ் மோட்டார்ஸ், அப்போலோ டயர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து), சோலார் ரூஃப் டாப் மின் உற்பத்திக்கான உபகரணங்களை வர்த்தகம் செய்தல் மற்றும் சோலார் பம்புகள் உற்பத்தி போன்ற பல்வேறு பிரிவுகளிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,

ரிஸ்க்குகள் என்னென்ன?

மின் உற்பத்தித் துறையில் செயல்பட்டுவரும் நிறுவனங் களுக்கான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. எரிபொருள்களின் விலை உயர்வு, மின் உற்பத்திச் செலவில் ஆகும் அதிகரிப்புகள், நீண்ட கால அடிப்படை யிலான புராஜெக்ட்டுகள் என்பதால், நிறுவும்போது ஏற்படக்கூடிய செலவின அதிகரிப்புகள், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அரசின் கொள்கை முடிவுகள் போன்ற அனைத்தும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள் ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism