Published:Updated:

டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட்!

டீம்லீஸ் சர்வீசஸ்
பிரீமியம் ஸ்டோரி
டீம்லீஸ் சர்வீசஸ்

கம்பெனி பயோடேட்டா

டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
டீம்லீஸ் சர்வீசஸ்
பிரீமியம் ஸ்டோரி
டீம்லீஸ் சர்வீசஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது ‘டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட்’ என்கிற நிறுவனத்தை. ஆர்கனைஸ்டு ஸ்டாஃபிங் சேவைகளில் (ஒப்பந்தப் பணியாளர்களை வழங்கும் நிறுவனமாக) 5% சந்தைப் பங்களிப்பைக் கொண்டு இயங்கிவருகிற இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் இது.

நிறுவனத்தின் செயல்பாடுகள்...

நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களுடன் அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக இணைந்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், 60-க்கும் மேற்பட்ட தொழில்களில் தான் பெற்றிருக்கும் பணியாளர் தேர்வு குறித்த அனுபவத்தைப் பகிர்ந்து சிறப்பாகச் செயல் பட்டு வருகிறது.

இதன் நிறுவன ரீதியான வாடிக்கையாளர்கள் என்று பார்த்தால் பார்ச்சூன்-500-ல் பங்கேற்றுள்ள அளவில் இருக்கும் நிறுவனங்களில் ஆரம்பித்து அதிவேகமாக வளர்ந்துவரும் எஸ்.எம்.இ-க்கள் வரையிலான பல்வேறு தரப்பட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவில் 28 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

இன்றைக்கு 3,500-க்கும் மேற்பட்ட நிறுவனங் களுக்கு ஒப்பந்தப் பணியாளர்களை வழங்குதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், வளர்ந்துவரும் தேவைக்கேற்ப பணியாளர்களை விரிவாக்கம் செய்தல், பணியாளர்கள் சம்பளக் கணக்கீடு உள்ளிட்ட பல அவுட்சோர்சிங் சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்வுகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க வெற்றிகரமாக வழங்கி வருகிறது இந்த நிறுவனம். கடந்த 20 வருடங்களில் 18 லட்சத்துக்கும் மேலான பணியாளர்களைத் தேர்வு செய்து ஒப்பந்த ரீதியில் வழங்கும் பணியில் நிறுவன ரீதியான வாடிக்கையாளர் களுக்கான சேவைகளை வழங்கியுள்ளது.

டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட்!

நிறுவனத்தின் வரலாறு...

2002-ம் ஆண்டில் நான்கு அலுவலகங்கள், இருபது வாடிக்கையாளர்கள் மற்றும் 40 பணி யாளர்களுடன் பெங்களூருவைத் தலைமையக மாகக்கொண்டு தொடங்கப்பட்டது டீம் லீஸ் நிறுவனம். 2005-ம் ஆண்டில் டெக்னாலஜியின் துணையுடன் இந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாடுகளும் பெங்களூருவில் உள்ள தலைமையகத்தை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது.

2006-ம் ஆண்டில் 36,000-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் இந்த நிறுவனத்தில் பதிவு செய்வதன்மூலம் (அசோசியேட்) ஒப்பந்த ரீதியிலான பணிக்கான வாய்ப்புகளைப் பெற முயன்றது குறிப்பிடத்தக்கது. 2007-ல் பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், 2008-ம் ஆண்டில் இந்தியாவின் பல நகரங்களிலும் கால்பதித்தது. 2011-ம் ஆண்டில் பணியாளர்கள் தேடுதலை புரொஃபஷனலைஸ் செய்கிற நோக்கத்துடன் ‘இண்டியன் ஸ்டாபிங் ஃபெடரேஷன்’ எனும் அமைப்பை ஒரு சில நிறுவனங்களுடன் இணைந்து நிறுவியது. 2013-ம் ஆண்டில் ‘டீம் லீஸ் ஸ்கில்ஸ் யுனிவர் சிட்டி’ எனும் இந்தியாவின் முதல் வொகேஷனல் ஸ்கில்களுக்கான பல்கலைக் கழகம் குஜராத் பிரைவேட் யுனிவர்சிட்டிஸ் சட்டத் தின்கீழ் நிறுவப்பட்டது. 2014-ம் ஆண்டில் அப்ரன்டி ஷிப் எனும் நடைமுறையை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கத்துடன் ‘நேஷனல் எம்ப்ளாயபிலிட்டி த்ரு அப்ரன்டிஷிப்’ (NETAP) மையத்தை டீம் லீஸ் ஸ்கில்ஸ் யுனிவர் சிட்டி, ஸ்கூல்குரு, சி.ஐ.ஐ மற்றும் மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் போன்ற அமைப்புகளுடன் இணைந்து நிறுவியது.

ஐ.பி.ஓ-வுக்குப் பிறகு...

2016-ம் ஆண்டில் ஐ.பி.ஓ வெளியிட்டு தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். 2016-ம் ஆண்டில் ஏ.எஸ்.எ.பி இன்ஃபோ சிஸ்டம்ஸ் மற்றும் நிச் ப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனங்களைக் கையகப் படுத்தியதன் மூலம் ஐ.டி துறைக்கான ஸ்டாஃபிங் தீர்வுகளை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், பின்னர் டீம் லீஸ் டிஜிட்டல் பிரிவுடன் இவற்றை இணைத்துக்கொண்டது.

டெலிகாம் ஒப்பந்தப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் தீர்வுகளை வழங்கும் சேவைப் பிரிவை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இவால்வ் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தை 2017-ம் ஆண்டில் கையகப்படுத்தியது இந்த நிறுவனம். அதே ஆண்டில் ஆன்லைன் கல்வி கற்றலுக்கு உதவும் நிறுவனமான ஸ்கூல்குரு நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

2018-ம் ஆண்டில் அவந்திஸ் ரெஜ்டெக் எனும் சாஃப்ட்வேர் அஸ் ஏ சர்வீஸ் நிறுவனத்தில் 33.33% அளவிலான பங்குகளை வாங்கியது டீம் லீஸ் நிறுவனம். 2019-ம் ஆண்டில் இ-சென்ட்ரிக் நிறுவனத்தின் ஐ.டி பணியாளர்கள் தேர்வு செய்யும் பிரிவையும், ஐ.எம்.எஸ்.ஐ (ஐ.டி இன்ஃப்ரா) நிறுவனத்தையும் கையகப்படுத்தியது இந்த நிறுவனம்.

2020-ம் ஆண்டில் ப்ரெஷ் வேர்ல்டு.காம் நிறுவனத்தில் 100% பங்குகளைக் கையகப்படுத்தியது. அதே ஆண்டில் அவெந்திஸ் நிறுவனத்தில் 4.89% பங்குகளைக் கையகப்படுத்தியது. 2021-ம் ஆண்டில் அவெந்திஸ் நிறுவனத் தில் டீம் லீஸ், தன் முதலீட்டை 60% என்ற அளவுக்கு அதிகரித்துக் கொண்டது.

டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட்!
டீம்லீஸ் சர்வீசஸ் லிமிடெட்!

சேவைப் பிரிவுகள்...

இதன் சேவைப் பிரிவுகள் எனப் பார்த்தால், ஒப்பந்த ரீதியான பணியாளர்களை வழங்கும் பிரிவில் பொதுவான பணியாளர்கள், ஐ.டி பணி யாளர்கள், டெலிகாம் பணி யாளர்கள் போன்றவர்களைத் தேர்வு செய்து ஒப்பந்த ரீதியில் வழங்குதல், பொதுவான பணியாளர்கள் தேர்வுக்கான கன்சல்டன்ஸி சேவைகள், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களுக்கேற்ப நிறுவனங்கள் செயல்படவும் சம்பளப்பட்டியல் தரவு சார்ந்த தீர்வுகள், டிகிரி அப்ரென்டிஷிப், பணியாளர்கள் கல்வி, திறன் வளர்க்கும் பல்கலைகழகம் போன்ற சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய மனித வள முதலீட்டை நிர்வகிக்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. 3,000-க்கும் மேற்பட்ட நிறுவன ரீதியான வாடிக்கை யாளர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2.7 லட்சத்துக்கும் மேலான அசோசி யேட்டுகள் மற்றும் பயிற்சி பெறுபவர்களையும் கொண்டு இயங்குவதால், இந்த நிறுவனம் இந்தியாவிலேயே மிகப் பெரிய தனியார் பணி வழங்கும் நிறுவன மாக திகழ்கிறது.

குறிப்பாக, டெலிகாம் செக்டார் (மார்க்கெட்டிங், விளம்பரங்கள், பொதுமக்கள் தொடர்பு பிரிவுகள் உள்ளிட்டவை), பி.எஃப் எஸ்.ஐ (வங்கி, காப்பீடு மற்றும் ஏனைய ஃபைனான்ஷியல் சர்வீசஸ் உள்ளிட்டவை), கன்ஸ்யூமர் செக்டார் (கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், எஃப்.எம்.சி.ஜி, ஹெல்த்கேர், பாராமெடிக்கல் சேவைகள் உள்ளிட்டவை), இண்டஸ்ட்ரியல் செக்டார் (ஆட்டோமொபைல், இன்ஜி னீயரிங், புரக்யூர்மென்ட், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், யுட்டி லிட்டிஸ் சார்ந்த சேவைகள்), ரீடெயில் மற்றும் இ-காமர்ஸ் (ஹோட்டல், ரிசார்ட்ஸ், ரெஸ்டாரன்ட்ஸ், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள்), எமர்ஜிங் செக்டார் (விவசாயம், பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஃபெர்டிலைசர், பெயின்ட் மற்றும் கெமிக்கல்கள் உள்ளிட்ட துறைகளுக்கான), ஐ.டி செக்டார் (ஐ.டி.இ.எஸ், பி.பி.ஓ, கால்சென்டர், கே.பி.ஓ, மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் உள்ளிட்டவை) போன்ற துறைகளுக்கான ஒப்பந்த ரீதியிலான பணியாளர்களை வழங்கும் சேவையை டீம் லீஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

ரிஸ்க்குகள் என்னென்ன?

பணியாளர் தேர்வு, பயிற்சி, ஒப்பந்த பணியாளர்களை வழங்குதல் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான ரிஸ்க்குகள் கம்பெனி பயோடேட்டாஅனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. இந்த நிறுவனம் வழங்கும் சேவைகளில் பிரதான மானது ஒப்பந்தப் பணியாளர்களை அளிப்பது மற்றும் பணியாளர்கள் தேர்வு மற்றும் அவர்கள் சார்ந்த தரவுகளை நிர்வகிப்பதற்கான வேலைகளை அவுட்சோர்சிங் முறையில் வழங்குதல் ஆகும். இந்தவித சேவையின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வளர்வதாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாது போனாலோ அல்லது தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும். மேலும், அரசின் கொள்கைகள், வாடிக்கையாளர்களின் தேவையில் ஏற்படும் மாறுதல்கள், அதிகரிக்கும் ஆட்டோ மேஷன், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாறுதல் போன்றவற்றையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகள்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism