Published:Updated:

டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா பகுதியில் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் நிறுவனம், டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Tega Industries Limited) என்னும் நிறுவனத் தினுடையது. 1975-ம் ஆண்டில் ஸ்வீடன் நிறுவனமான ஸ்கேகா ஏ.பி என்னும் நிறுவனத் துடன் இணைந்து இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது இந்த நிறுவனம். இன்றைக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் அகில உலக ரீதியாக 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிவருகிறது இந்த நிறுவனம். 2021-ம் ஆண்டில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்...

இந்த நிறுவனம் ஈடுபட்டுவரும் தொழில் பிரிவுகள் ரீதியாகப் பார்த்தால், கனிமங்களை அரைக்கப் பயன்படும் இயந்திரங்கள், கன்வேயர் காம்ப்போ னெட்டுகள், வாட்டர் ரெசிஸ்டென்ட் லைனர்கள், ஸ்க்ரீனிங்குகளுக் கான தீர்வுகள், ட்ரோமெல்கள், ஹைட்ரோக்ளோன்கள் மற்றும் கனிமக் குழம்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல உதவும் இயந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

இந்தியாவில் இந்த நிறுவனம் மூன்று உற்பத்தி மையங்களைக் கொண்டு இயங்கிவருகிறது. குஜராத்தில் உள்ள தஹிஜ் எனும் இடத்தில் இருக்கிற உற்பத்தி மையத்தில் மில் லைனர்கள், வியர் தயாரிப்புகள் மற்றும் ஸ்க்ரீன்ஸ் மற்றும் ட்ரோமெல்களை உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம். மேற்கு வங்கத்தில் உள்ள சொமெலி எனும் இடத்தில் செயல்பட்டு வருகிற உற்பத்தி மையத்தில் மில் லைனர்கள், வியர் தயாரிப்புகள், ஹைட்ரோ க்ளோன்கள், ஸ்க்ரீன்ஸ், ட்ரோமெல்கள் மற்றும் கன்வேயர்களுக்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணி எனும் இடத்தில் செயல்பட்டு வரும் மற்றும் ஓர் உற்பத்தி மையத்தில் மில் லைனர்கள், கன்வேயர் தயாரிப்புகள், சூட் லைனர்கள், பம்ப் லைனர்கள் போன்ற தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம். இது தவிர, அயல்நாடுகளில் மூன்று உற்பத்தி மையத்தையும் நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

சிலியில் உள்ள உற்பத்தி மையத்தில் மில் லைனர்கள், ட்ரொமெல்கள், சூட் லைனர்கள், ஸ்க்ரீன்கள், பைப்புகள் மற்றும் பைப்களை ரிப்பேர் செய்வதற்கான ஸ்பூல்கள் போன்றவற்றை உற்பத்தி செய்துவருகிறது இந்த நிறுவனம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள உற்பத்தி மையத்தில் மில் லைனர்கள், ஸ்க்ரீன் பேனல்கள் மற்றும் சூட் லைனர்களை உற்பத்தி செய்துவருகிறது. ஆஸ்திரே லியாவில் இந்த நிறுவனம் நிறுவியுள்ள உற்பத்தி மையத்தில் சூட்லைனர்கள் மற்றும் ட்ரோமெல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தான் செய்யும் தொழிலுக்கு தேவையான ஆராய்ச்சிகளைச் செய்வதற்கான தனிப்பட்ட ஆராய்ச்சி மையங்களையும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

வியாபார வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

இந்தியாவில் சுரங்கம் சார்ந்த தொழில் மிக முக்கியமான அடிப்படைத் தொழில்களில் ஒன்றாக இருக்கிறது. நிலக்கரி, லிக்னைட், பாக்சைட், குரோ மைட், தாமிரம் பிரித்தெடுப்பதற் கான தாதுப்பொருள்கள், இரும்புக்கான தாதுப் பொருள்கள், மாங்கனீசுக்கான தாதுப்பொருள்கள், சில்வர், வைரம், லைம் ஸ்டோன், பாஸ்போரைட் உள்ளிட்ட பல தாதுப்பொருள்களை சுரங்கம் தோண்டி எடுத்து ஏனைய தொழில்துறைக்கு தருவதில் இந்த நிறுவனங்கள் சிறப்பான செயல் பாட்டைக் கொண்டிருக்கின்றன.

ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுரங்கத் தொழில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய நிலக்கரிச் சுரங்கம் தோண்டி எடுத்து உபயோகிக்கிற மற்றும் இறக்குமதி செய்கிற நாடாக இருக்கிறது.

இந்தியாவில் நிலக்கரியின் பயன்பாடானது 3.1% என்ற அளவில் வளர்ச்சி அடைந்து, 2024-ம் ஆண்டுவாக்கில் 1.18 பில்லியன் டன்கள் என்ற அளவுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது (ஜி.டி.பி 7.4 என்ற அளவில் 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் சூழலில் இது நடைபெறுவதற் கான வாய்ப்புள்ளது).

2021-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 1,229 சுரங்கங்கள் செயல்பட்டு வரு கின்றன. இவற்றில் 545 சுரங்கங் கள் உலோகம் சார்ந்த மினரல் களைத் தோண்டி எடுக்கும் பணியிலும், உலோகம் அல்லாத பொருள்களைத் தோண்டி எடுக்கும் பணியில் 684 சுரங்கங் களும் ஈடுபட்டு வருகின்றன.

அதிகரித்துவரும் இன்ஃப்ராஸ் ட்ரக்சர் வசதிகள்/கட்டு மானங்கள், வாகன உற்பத்தி, மின் உற்பத்தி மற்றும் சிமென்ட் உற்பத்தி போன்றவை சுரங்கத் தொழிலின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கிற விஷயங் களாகும். இதனால் இந்தியாவில் மினரல்களின் உபயோகம் சீராக உயர்ந்துகொண்டேபோகும் என எதிர்பார்க்கலாம். வீடுகள் மற்றும் வணிகத்துக்கான கட்டு மானங்கள் அதிகரித்துக் கொண்டேபோவது ஸ்டீல் உற்பத்தி அதிகரிக்க முக்கியமான காரணமாகும்.

உலக அளவில் அதிகமாக ஸ்டீல் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் ஸ்டீலின் உற்பத்தியானது அதன் ஜி.டி.பி-யில் கிட்டத்தட்ட 1.5% என்ற அளவிலான பங்களிப்பை அளித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தத் துறை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கிறபடியால், 2021-22 நிதி ஆண்டில் கச்சா இரும்பு உற்பத்தி யானது 8% - 9% அளவு (112 -114 மில்லியன் டன் என்ற அளவில்) அதிகரித்திருந்தது.

கச்சா இரும்பு உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள்கள் அபரிமிதமாகக் கிடைப்பதாலும், குறைந்த சம்பளத்துக்குப் பணி யாளர்கள் கிடைப்பதாலும், கச்சா இரும்பு உற்பத்தியானது 2022-ம் ஆண்டு இறுதிவாக்கில் 18% அளவில் வளர்ச்சி அடைந்து. 140 மில்லியன் டன் என்ற அளவை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது. மின் உற்பத்தித் துறையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது பெரிய மின் உற்பத்தி செய்யும் நாடாகவும், மின்சாரத்தை பயன்படுத்துவதில் உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாகவும் திகழ்ந்து வருகிறது.

இதே போல், உலக அளவில் தாமிரம் (காப்பர்) என்பதன் உபயோகம் தனிநபர் என்கிற அளவீட்டில் கிட்டத்தட்ட 3.1 கிலோ கிராம் என்ற அளவில் இருக்கிறது. அதே சமயம், இந்தியாவிலோ இது 0.5 கிலோ என்ற அளவீட்டில் இருக்கிறது. இந்தியா நிகர அளவில் ரீபைன்ட் காப்பரை ஏற்றுமதி செய்துவருகிறது. இதனால் ரீபைன்ட் காப்பர் உற்பத்தியானது 2030 வரையிலான காலகட்டத்தில் 7% அளவில் வளர வாய்ப்புள்ளது. என்கின்றனர் துறை ரீதியான ஆய்வாளர்கள். இது தவிர, இந்தியாவில் தங்கத்தின் உபயோகமும் அதிக அளவிலாக இருக்கிறது.

டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!
டெகா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

சுரங்கத்துறை மற்றும் சுரங்கம் சார்ந்த துறையில் ஈடுபட்டுவருகிற நிறுவனங்கள் அனைத்துக்கும் இருக்கிற ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கு உண்டு. தொழில்நுட்ப மாறுதல்கள், கமாடிட்டிகளின் விலை மாறுதல், அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், போட்டி யாளர்கள் அறிமுகப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். சுரங்கத்தொழில் அரசாங்கங்களின் கட்டுப் பாட்டுக்குள் வருவதால், அரசாங்கத்தின் கொள்கை மாறுதல்களும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கவே செய்யும் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.