Published:Updated:

வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்!

வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ்

கம்பெனி பயோடேட்டா

வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ்

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது இந்தியாவின் மிகப் பெரிய வெர்ட்டிக்கல் இன்டெக்ரேஷன் செய்யப்பட்ட டெக்ஸ்ட்டைல் குழுமத்தின் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டுவரும் வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்.

நிறுவனத்தின் வரலாறு...

இந்த நிறுவனத்துக்கான ஆரம்பப்புள்ளி யானது 1962-ம் ஆண்டில் வெறும் 6,000 ஸ்பிண்டில்களுடன் பஞ்சாபிலுள்ள லூதியானாவில் வர்த்தமான் ஸ்பின்னிங் & ஜெனரல் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1973-ம் ஆண்டில் மகாவீர் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றைய வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் எனும் இந்தக் குழுமத்தின் முன்ணனி நிறுவனமாகத் திகழ்கிறது.

1976-ம் ஆண்டில் இந்த நிறுவனம் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் 25,000 ஸ்பிண்டில் களை நிறுவியது. 1978-ம் ஆண்டில் அரிஹந்த் ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனத்தை மலேர் கோட்லா என்னும் இடத்தில் நிறுவியது. 1981-ம் ஆண்டில் தன்னுடைய தொழிலில் டைவர்சிஃபி கேஷனாகத் தையலுக்கான நூலைத் தயாரிக்கும் பிரிவை பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் நிறுவியது. 1988-ம் ஆண்டில் மோஹ்தா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது இந்த நிறுவனம். இந்த இணைப்பின்போது மோஹ்தா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் லூதியானாவில் ஒரு மினி - ஸ்டீல் பிளாண்டைக் இணைத்துக் கொண்டது. பிறகு இந்த நிறுவனத்தின் பெயர் வர்த்தமான் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டது.

1989-ம் ஆண்டில் இமாசலப் பிரதேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்தில் ஆரோ ஸ்பின்னிங் மில்ஸ் என்ற பெயரில் 25,000 ஸ்பிண்டில்களை நிறுவியது. 1991-ம் ஆண்டில் இந்த உற்பத்தி வசதி செயல்பட ஆரம்பித்தது. 1990-91-ம் ஆண்டுகளில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மந்திதீப் எனும் இடத்தில் 100% ஏற்றுமதிக் காக 25,000 ஸ்பிண்டில்கள் கொண்ட உற்பத்தி மையத்தை அனந்த் ஸ்பின்னிங் மில்ஸ் என்ற பெயரில் நிறுவியது. 1992-ம் ஆண்டில் ஃபார்வர்டு இண்டெக்ரேஷன் செய்யும் வகையில் 72 லூம்களைக் கொண்ட நெசவு செய்யும் மையத்தை பட்டி எனும் இடத்தில் நிறுவியது இந்த நிறுவனம். 1993-ம் ஆண்டில் பட்டியில் சாயம் போடும் மையத்தையும் (நாளொன்றுக்கு 1.7 டன்கள் என்ற அளவில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏழு டன்கள் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டது).

1994-ம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள ஹோசியார்பூரில் மெர்சரைஸ் செய்யும் மையத்தையும் நிறுவியது. 1995-96-ம் ஆண்டில் வர்த்தமான் த்ரெட்ஸ் லிமிடெட் மற்றும் வர்த்தமான் அக்ரிலிக்ஸ் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களை ஆரம்பித்தது. 2004-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பெயர் வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட் என்று மாற்றியமைக்கப்பட்டது.

2011-ம் ஆண்டில் வர்த்தமான் ஸ்பெஷாலிட்டி ஸ்டீல்ஸ் நிறுவனம் வர்தமான் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் இருந்து டீமெர்ஜ் செய்யப்பட்டு தற்போது வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் முழுக்க முழுக்க நூலிழைகள் மற்றும் துணிவகைகளை உற்பத்தி செய்யும் நிறுவன மாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

47 ஆண்டுகளுக்கும் மேலான நேரிடையான தொழில்ரீதியான அனுபவம், 17 உற்பத்தி வசதிகள், 20,916-க்கும் மேற்பட்ட பணியாளர் கள், உலக அளவில் 61 நாடுகளில் வர்த்தகம், 11,29,000 ஸ்பிண்டில்கள், 1545 லூம்கள், நாளொன்றுக்கு 4.81 லட்சம் மீட்டர் ப்ராசஸ்டு பேப்ரிக் உற்பத்தி செய்யும் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையம் (2020-21 நிதியாண்டு இறுதி நிலவரப்படி) என்ற அனைத்தையும் தன்வசத்தே கொண்டு ஒரு பிரமாண்டமான நிறுவனமாக வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் இன்றைக்கு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்!

நிறுவனம் செய்துவரும் தொழில்கள்...

தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், நூல் உற்பத்தி மற்றும் துணி உற்பத்தி என்ற பெரும் பிரிவுகளில் வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நூல்கள் பிரிவில் ஸ்பெஷாலிட்டி யார்ன்ஸ், அக்ரிலிக், ஃபேன்ஸி மற்றும் ஹேண்ட் நிட்டிங் யார்ன்ஸ், சாயம் போடப்பட்ட நூலிழைகள் மற்றும் க்ரே யார்ன்ஸ் போன்ற பெரும் பிரிவுகளில் உள்ள நூலிழைகளைத் தயாரிக்கிறது.

நூல் உற்பத்தியில் இந்த நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி வசதிகளில் ஸ்பெஷலைஸ்டு கிரீஜ் (greige) மற்றும் சாயம் போடப்பட்ட பஞ்சு, அக்ரிலிக் மற்றும் பாலியஸ்டர் நூலிழைகள் மற்றும் பல்வேறு வகையான ப்ளென்டட் (blended) நூலிழைகளை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம். இது தவிர, பின்னலாடை தயாரிப்பில் உபயோகப்படுத்தப் படும் ஆர்கானிக் காட்டன், மிலேஞ், கோர் ஸ்பன் யார்ன்ஸ், அல்ட்ரா யார்ன்ஸ், காஸ்டு மெர்சரைஸ்டு, சூப்பர் பைன் யார்ன்ஸ், ஸ்லப், செல்லுலோஸ் யார்ன்ஸ் மற்றும் ஃபேன்ஸி யார்ன்ஸ் போன்றவற்றையும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

2020-21 நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 561 மெட்ரிக் டன் அளவிலான நூலிழைகளை உற்பத்தி செய்த இந்த நிறுவனம், தன்னுடைய உற்பத்தியில் 49% அளவிலான நூலிழைகளை ஏற்றுமதி செய்துள்ளது குறிப் பிடத்தக்கது.

நெய்யப்பட்ட துணிவகைகள் பிரிவிலும் இயங்கிவருகிற இந்த நிறுவனம் அகில இந்திய அளவில் செங்குத்தான அளவில் ஒருங்கிணைப்பு (Vertical Integration) செய்யப்பட்டு நெய்யப்படும் துணிவகைகள் உற்பத்தி செய்யும் ஒரு சில நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. நீண்ட அனுபவத்தை இந்தத் தொழில் பிரிவில் கொண்டிருப்பதால், தொடர்ந்து உற்பத்தி செய்யப் படும் துணிகளின் ரகங்கள் மற்றும் டிசைன்களில் வாடிக்கை யாளர்களின் ரசனை மற்றும் தேவைக்கேற்ப மாறுதல்களை இந்த நிறுவனத்தால் வெற்றிகர மாகச் செய்ய முடிகிறது.

மேலும், இந்த வித நீண்ட அனுபவத்தைக்கொண்டிருப்பது உற்பத்தி செலவைக் கணிச மாகக் குறைப்பதற்கும் உதவுகிறது. இதனாலேயே இந்த நிறுவனத்தின் துணிவகைகள் இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் செயல் பட்டுவரும் ரீடெயில் நிறுவனங் களால் விருப்பத்துடன் வாங்கப் படுகிறது.

நெய்யப்பட்ட துணிவகைகள் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண் களுக்கான டாப்ஸ், பாட்டம்ஸ் மற்றும் அவுட்டர் வியர் ஆடைகள், கேஷுவல், ஃபார்மல் மற்றும் ரெகுலர் ஆடைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவை யான துணிவகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். இந்தத் தொழில் பிரிவில் 2020-21 நிதியாண்டில் ஆண்டொன்றுக்கு 155.4 மில்லியன் மீட்டர் என்ற அளவில் உற்பத்தி செய்திருந்தது. இதே காலகட்டத் தில் ஆண்டொன்றுக்கு 100.2 மில்லியன் மீட்டர்கள் அளவிலான ப்ராசஸ்டு பேப்ரிக்கையும் உற்பத்தி செய்திருந்தது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் துணி வகைகளை ரேமண்ட், ஆலன் சோலி, ஆரோ, வேன்ஹுசன், வால்மார்ட், லூயிபிலிப், கால்வின் க்ளெய்ன், டாமி ஹில்பிகர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஆயத்த ஆடை உற்பத்திப்பிரிவில் பயன்படுத்து வதற்காக வாங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்!
வர்த்தமான் டெக்ஸ்டைல்ஸ் லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

நூல் மற்றும் துணிவகைகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து வகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். துணி மற்றும் ஜவுளி சார்ந்த துறை என்பது சைக்ளிக்கல் எனும் வகையைச் சார்ந்த துறையாகும்.

மேலும், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் இந்த நிறுவனம் மற்றும் அதனுடைய தயாரிப்புகளை உபயோகப்படுத்தி பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான டிமாண்ட் இருக்கும் என்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி அடையாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism