அறுபது வருடங்களுக்கு முன்னால் ஸ்விட்சர்லாந்து நிறுவனமான வோல்கார்ட் பிரதர்ஸ் எனும் நிறுவனம் இந்தியாவின் டாடா சன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நோக்கத்துடன் ஆரம்பிக் கப்பட்டதுதான் இன்றைய வோல்டாஸ் லிமிடெட் நிறுவனமாகும்.

ரீ இன்ஜினீயரிங் மற்றும் இன்னோ வேஷன் எனும் இரண்டு விஷயங்களில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம் 60 ஆண்டு களுக்குப் பின்னாலும் இந்த இரண்டு விஷயங்களிலும் முன்னோடியாகச் செயல்பட்டு ஒரு ஸ்மார்ட் இன்ஜினீயரிங் நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய ஏர்கண்டிஷனிங் நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இன்ஜினீயரிங் சொல்யூஷன்களை வழங்குவதிலும் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் துறையிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்

தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், கூலிங் & ரெப்ரிஜிரேஷன், வீட்டு உபயோகச் சாதனங்கள், டெக்ஸ்டைல் மெஷினரி, சுரங்கம் மற்றும் கட்டுமான உபகரணங்கள் போன்ற பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. புராஜெக்ட்டுகள் பிரிவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புராஜெட்களைச் செய்து வருகிறது வோல்டாஸ் நிறுவனம்.

கூலிங் பிரிவில் வோல்டாஸ் நிறுவனம் கடந்த 60 ஆண்டு களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு மிக அருகே இருக்கும் வண்ணம் தொடர்ந்து அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் அகில இந்திய ரீதியாக 15,000-க்கும் மேலான ரீடெயில் விற்பனை மையங்களை அதிகரித்துள்ளது. இது தவிர, விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதற்கான நெட்வொர்க்கையும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ஏர்கண்டிஷன் மெஷின்களில் முக்கியமானதொரு பிராண்டாக உருவெடுத்துள்ள இந்த நிறுவனம், கிட்டத்தட்ட 15,000-க்கும் மேலான டீலர்கள் வாயிலாக வாடிக்கை யாளர்களிடம் தன்னுடைய தயாரிப்பைக் கொண்டு சேர்க்கிறது. கூலிங் பிரிவில் ஏர் கண்டிஷனர்கள், ஏர் கூலர்கள், மற்றும் வணிகத்துக்குத் தேவைப்படும் கூலர்கள் மற்றும் டீப் ப்ரீசர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

வீட்டு உபயோகப் பொருள்கள் பிரிவில் ஃப்ரிட்ஜ்கள் (ரெஃப்ரெஜி ரேட்டர்ஸ்), வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் டிஷ்வாஷர்களை வோல்ட்-பேகோ என்ற பிராண்டில் உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. இவற்றை வோல்ட்பெக் ஹோம் அப்ளையன்சஸ் என்ற கூட்டுமுயற்சியிலான துணை நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி செய்து, விற்பனை செய்துவருகிறது.

நிறுவனத்தின் சிறப்புகள்...

டெக்னாலஜியை இன்ஜினீயரிங் தீர்வுகளுடன் இணைத்துத் தருவதில் சிறந்த அனுபவம் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், டெக்ஸ்டைல் மெஷினரிகளுக்கான தீர்வுகளை வழங்கிவருகிறது. மிகக் குறுகிய காலத்தில் வெகுவேகமாக மாறுதல் களைச் சந்திக்கும் டெக்ஸ்டைல் பிரிவில் தன்னுடைய இன்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி திறன் அனுகூலங்களைக்கொண்டு உலகளாவிய அளவில் உள்ள முக்கிய டெக்ஸ்டைல் மெஷினரி உற்பத்தி யாளர்களின் இயந்திரங்களுக்கான தீர்வுகளை வெற்றிகரமாக வழங்கி வருகிறது. இந்தத் தொழில்பிரிவில் இந்திய அளவில் 250 டெக்ஸ்டைல் துறை வல்லுநர்களுடன் 21 இடங் களில் தன்னுடைய கிளைகளைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல் பட்டு வருகிறது இந்நிறுவனம்.

ஸ்பின்னிங் மெஷினரி (கார்டிங் சிஸ்டம், கோம்பிங் சிஸ்டம், ரிங் ஸ்பின்னிங் சிஸ்டம், காம்பாக்ட் ஸ்பின்னிங்), ஸ்பின்னிங் ஆக்சஸரிஸ் (ரிங் & ஸ்பிண்டில்கள், உதிரிபாகங்கள், ரிங் டிராவலர்கள், லூப்ரிக்கன்ட்ஸ், கார்ட் ரூம் உதிரிபாங்கள், மின்சார மோட்டார்கள், பாபின் ஹோல்டர்கள்), ஸ்பின்னிங் மற்றும் ஏனைய மெஷின்கள் (ஸ்லப் மற்றும் பேன்சி யார்ன்கள், பேப்ரிக் பார்மிங் (சர்க்குலர் நிட்டிங், நிட்டிங் உதிரி பாகங்கள் மற்றும் லூப்ரிக்கன்ட்ஸ், ஷட்டில்லெஸ் லூம்ஸ், ப்ளாட் நிட்டிங் மற்றும் கார்மென்ட் கட்டிங்), ப்ராசெஸ்டு மற்றும் ஃபினிஷிங் (நூலுக்கு சாயமிடுதல், துணிக்குச் சாயமிடுதல் போன்ற பெரும் உள்பிரிவுகளில் உள்ள அனைத்து தேவைகளுக்குமே டெக்ஸ்டைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் சேவையையே விரும்பிப் பெறுகின்றன.

1954-ம் ஆண்டில் சுரங்கம் மற்றும் கட்டுமானத்துக்கான உபகரணங்கள் பிரிவை உருவாக்கியது இந்த நிறுவனம். இந்தப் பிரிவில் மைனிங் மற்றும் கட்டு மானத்துக்கான மெஷினரிகளை விநியோகம் செய்தல், பராமரித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது இந்த நிறுவனம். உலக அளவில் உள்ள 14 முக்கிய மைனிங் மற்றும் கட்டுமான ஹெவி மெஷினரிகள் உற்பத்தியாளர் களுக்கான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் இந்தப் பிரிவில் ரியர் மற்றும் பாட்டம் டம்ப் டிரக்குகள், புல்டோசர்கள், எலெக்ட்ரிக் பவர் ஷவல்கள், மோட்டார் கிரேடர்கள், செல்ஃப் பவர்ட் ஸ்க்ராப்பர்கள், டிராக் லைன்கள், கால்ம்ஷெல்கள் போன்ற ஹெவி மெஷினரி களுக்கான சே

வையை வழங்கி வருகிறது. மேலும், இந்தத் துறையில் உதவிகரமாக இருக்கும் ஏர் கம்ப்ரஸர்கள், ப்ளாஸ்ட் ஹோல் டிரில்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவற்றுக்கான சேவை களையும் செய்துவருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் மற்றொரு தொழில் பிரிவான புராஜெக்ட்டு களில் இண்டஸ்ட்ரீயல் ஏர்கண்டி ஷனிங் பிரிவில் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனம் என்ற பெருமையுடன் செயல்பட்டு வருகிறது.

எலெக்ட்ரோ மெக்கானிக்கல் பிரிவில் கட்டடங்கள் (buildings), கட்டுமானங்கள் (infrastructure) மற்றும் தொழில்துறைக்கான பல்வேறு தீர்வுகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக்கல் டிஸ்ட்ரிப்யூஷன் (மின் விநி யோகம்) மற்றும் நீர் சுத்திகரிப்பு என்ற இரண்டு பிரிவிலும் பெரிய அளவிலான திட்டங்களில் பங்களிப் பைக் கொண்டிருப்பதன் மூலம் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைத் தந்து வந்துள்ளது இந்த நிறுவனம்.

இன்ஜினீயரிங் பிரிவில் சீரிய அனுபவத்தையும் புராஜெக்ட் மேனெஜ்மென்ட் துறையில் நல்ல திறமையையும் கொண்டிருப்பதால், பல்வேறு தரப்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்டுள்ள திட்டங்களையும் வெகு சுலபமாக இந்த நிறுவனத்தால் நிர்வகித்து, சரியான நேரத்தில் பணிகளை நிறைவு செய்து தர முடியும்.

இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் 35-க்கும் மேலான நாடுகளில் தன்னுடைய இன்ஜினீயரிங் சேவைகளை 40 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் வழங்கி வருகிறது இந்த நிறுவனம்.

எலெக்ட்ரோ மெக்கானிக்கல் புராஜெக்ட்டுகள், பிளம்பிங், தீயணைப்புக்கான வசதிகள், ஸ்பெஷலைஸ்டு சிஸ்டம்களை நிறுவுதல், ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் சேவைகளை வழங்குதல், ரெட்ரோ ஃபிட் மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட் சேவை களை வழங்குதல், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரித்தலுக்கான சேவைகளை வழங்குதல் போன்ற பணிகளையும் வெளிநாடுகளில் இந்த நிறுவனம் வழங்கிவருகிறது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

ஏர்கண்டிஷனிங், இன்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி சேவைத் துறையில் செயல்படும் நிறுவனங் களுக்கு உண்டான ரிஸ்க்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு.

புதிய தொழில்நுட்பங்கள்/நவீன ரக தொழில்நுட்பங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப் படுதல், தொழில் ரீதியான போட்டி, மூலப்பொருள்கள் விலை உயர்வு, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கே உண்டான ரிஸ்க்குகள் ஆகும்.

மேலும், இந்த நிறுவனம் செயல் படும் துறைகள் அனைத்துமே பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே செழித்து வளரும் துறைகளாக இருப்பதால், ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையாதுபோனாலோ தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைப் பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத் துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தா லோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

பிட்ஸ்

கடந்த பிப்ரவரியில் யு.பி.ஐ (UPI) மூலம் 229 கோடி முறை பணப் பரிவர்த்தனை நடந்தது. இது கடந்த ஜனவரியில் நடந்த 230 கோடி முறையை விடக் கொஞ்சம் குறைவாகும். அதேபோல, பரிவர்த்தனை ஆன பணத்தின் மதிப்பும் கொஞ்சம் குறையவே செய்திருக் கிறது!