Published:Updated:

வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட்!

வெல்ஸ்பன் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்ஸ்பன் இந்தியா

கம்பெனி பயோடேட்டா

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட் நிறுவனம், வெல்ஸ்பன் குழுமத்தின் ஓர் அங்கமாகும். வெல்ஸ்பன் குழுமம், ஹோம் டெக்ஸ்டைல், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், வேர் ஹவுஸிங், ஸ்டீல், ஆயில் மற்றும் கேஸ், அட்வான்ஸ்டு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஃப்ளோரிங் சொல்யூஷன்கள் துறையில் இயங்கிவரும் ஒரு குழுமம் ஆகும்.

வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட்!

நிறுவனத்தின் வளர்ச்சி...

1985-ம் ஆண்டில் மும்பைக்கும் குஜராத் துக்கும் இடையே உள்ள பல்கார் எனும் இடத்தில் வெல்ஸ்பன் விநிலான் மில்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது இந்தக் குழுமத்தின் ஆரம்பப் புள்ளியாகும். சிறிய அளவில ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நாளடைவில் வேகமான வளர்ச்சியைக் கண்ட இந்த நிறுவனம், இன்றைக்கு அகில இந்திய அளவில் 26,000-க்கும் மேற்பட்ட பல்வேறு வகைப்பட்ட (மாநிலங்கள், கலாசாரம் போன்ற) ஹோம் டெக்ஸ்டைல் உற்பத்தி பணியில் ஈடுபடுபவர்களை இணைத்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மிகவும் வெற்றிகரமாகத் தன்னுடைய துறையில் செயல்பட்டுவருகிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோம் டெக்ஸ் டைல்ஸ் துறையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், உலக அளவில் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவைக்கொண்டு இயங்குவதன் மூலம் இந்தத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக இன்றைக்கு இருக்கிறது.

இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1991-ம் ஆண்டில் வெல்ஸ்பன் பாலியஸ்டர் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் ஐ.பி.ஓ வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். பின்னர் வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட்!

மூன்று பிரிவுகளில்...

இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்புகள் என்று பார்த்தால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆய்வுகளைச் செய்து அவர்களது தேவை மற்றும் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நவீன தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது வெல்ஸ்பன் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணியாக உள்ளது.

படுக்கையறை, குளியலறை மற்றும் தரை விரிப்புகள் பிரிவில் பல்வேறுவித வகையிலான தயாரிப்புகளைக் கொண்டிருப்பதால் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். இந்தியாவில் இருந்து ஹோம் டெக்ஸ்டைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் மத்தியில் மிகப் பெரிய நிறுவனமாகச் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், அமெரிக்கச் சந்தையில் உச்சபட்ச சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருப்பதும், யுகே மற்றும் இந்தியச் சந்தையில் பெரியதொரு அளவிலான சந்தைப்பங்களிப்பைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதொரு விஷயமாகக் கருதப்பட வேண்டும். மேலும், உலக அளவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய ரீடெயில் நிறுவனங்களுடன் ஸ்ட்ராட்டஜிக் கூட்டணியை அமைத்துச் செயல்பட்டு வருவதும், ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பொருள்களை விநியோகம் செய்யும் நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதும் இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்குக் காரணங்களாகும்.

விளைவிக்கப்படும் பஞ்சைக் கொள்முதல் செய்வதில் ஆரம்பித்து இறுதிவடிவ தயாரிப்புகள் விற்பனைக்கு கடையில் இருக்கும் நிலை வரையிலான அனைத்துப் படிநிலைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில் (Vertical Integration) இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்டிருப் பதும், பல்வேறு முன்னணி பிராண்டுகளில் பல்வேறு வகைப்பட்ட தயாரிப்புகளுக்கான அனுமதியைப் பெற்று உற்பத்தி செய்துவருவதும் இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பு.

இந்த நிறுவனம் வழங்கும் தீர்வுகள் வாரியாகப் பார்த்தால் படுக்கையறை உபயோகத்துக்கான தீர்வுகள், குளியலறை உபயோகத்துக்கான தீர்வுகள், தரை விரிப்புகளுக்கான தீர்வுகள் போன்றவை இருக்கின்றன. படுக்கையறைக்கான தீர்வுகளில் யுட்டிலிட்டி பெட்டிங் (பில்லோ பில்லர்கள், மேட்ரஸ் பேடுகள், கம்பர்ட்டர்கள்), பெட்ஷீட்கள் மற்றும் ஃபேஷன் பெட்டிங் போன்றவற்றை வழங்கிவருகிறது இந்த நிறுவனம். ஃபேஷன் பெட்டிங் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் செய்யப்படும் பிரின்ட் மற்றும் நெய்யும்போதே உருவாக்கப்படுகிற டிசைன்களை வடிவமைப்பதற்காகத் தனியானதொரு டிசைன் ஸ்டூடியோ வையும் வைத்திருக்கிறது.

வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட்!

உற்பத்தி வசதிகள்...

இந்தவகை தயாரிப்புகள் அனைத்தையும் உற்பத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வசதியைக் கொண் டிருக்கிறது இந்த நிறுவனம். இந்த உற்பத்தி மையங்களில் ஸ்பின்னிங், வீவிங், ப்ராசஸிங், லாஜிஸ்டிக்ஸ், எக்ஸ் ட்ரூஷன், டஃப்டிங், பிரின்டிங் போன்ற தங்குதடையற்ற உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஒருங்கே இருக் கின்றன. இது தவிர இந்த உற்பத்தி வசதிகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கேப்டிவ் மின்சார் உற்பத்தி வசதியையும் இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.

நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி வசதிகளை அளவிட்டால், துண்டுகள் பிரிவில் ஆண்டொன் றுக்கு 80,000 மெட்ரிக் டன் அளவிலான உற்பத்தி வசதியையும், பெட்லினன் மற்றும் பில்ட் பெட்டிங் பிரிவில் ஆண்டொன்றுக்கு 90 மில்லியன் மீட்டர் அளவிலான உற்பத்தி வசதியையும், தரை விரிப்புகள் மற்றும் கார்பெட்டுகள் பிரிவில் பத்து மில்லியன் சதுர அடி அளவிலான தரை விரிப்புகள் உற்பத்தி வசதியையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைப் பாதுகப்பாக வைத்து விநியோகம் செய்வதற் கான வேர்ஹவுஸ்களையும் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்த வேர்ஹவுஸ் மேலாண்மையில் அதிநவீன கணிணி மயமாக்கலை (supply chain management system) செய்துள்ளது. இந்தியாவில் மட்டு மல்லாமல், அமெரிக்காவில் உள்ள ஒஹியோ எனும் இடத்தில் மூன்று லட்சம் சதுர அடி அளவிலான வேர்ஹவுஸையும், இங்கிலாந்தில் 1.5 லட்சம் சதுர அடி அளவிலான வேர்ஹவுஸையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த வேர்ஹவுஸ் வசதிகளிலும் அதிநவீன சப்ளை செயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு வட அமெரிக்க முன்னணி நிறுவனங் களான வால்மார்ட், காஸ்ட்கோ, அமேசான், மாரியட், பெட், பாத் & பியாண்ட், அமெரிக்காஸ் ப்ளோர் சோர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும், யுகே மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்கோ, ஐக்கியா, கேரிபோர், ஜான்லூயிஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறவனங்களும், இந்தியாவில் மிந்த்ரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிமார்ட், லைஃப் ஸ்டைல், பிக்பஜார், அட் ஹோம், ஷாப்பர்ஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் வாடிக்கை நிறுவனங்களாக இருக்கின்றன.

வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட்!
வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட்!

ரிஸ்க்குகள் என்னென்ன?

ஹோம் டெக்ஸ்டைல் துறையில் ஈடுபடும் நிறுவனங் களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு எனலாம். மூலப்பொருள்களின் விலை உயர்தல், வாடிக்கையாளர்களின் ரசனை மாறுதல், அதி நவீன தொழில்நுட்பம் போட்டியாளர்களால் அறிமுகம் செய்யப்படுதல், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் (சுற்றுசூழல் உள்ளிட்ட) போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

மேலும், ஹோம் டெக்ஸ்டைல் பிரிவு என்பது ஓரளவுக்கு பொருளாதார வளர்ச்சியை சார்ந்தே வர்த்தகம் விருத்தியாக வாய்ப்புள்ள துறையாகும். எனவே, உலகளாவிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவில் இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!