Published:Updated:

போரோசில் லிமிடெட்! (BSE CODE: 543212 NSE SYMBOL: BOROLTD)

போரோசில் லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
போரோசில் லிமிடெட்

கம்பெனி பயோடேட்டா

போரோசில் லிமிடெட்! (BSE CODE: 543212 NSE SYMBOL: BOROLTD)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
போரோசில் லிமிடெட்
பிரீமியம் ஸ்டோரி
போரோசில் லிமிடெட்

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பயோ டேட்டா இந்தியாவின் முன்னணி கன்ஸ்யூமர் கிளாஸ் வேர் (வீட்டு உபயோகத்துக்கான கண்ணாடிப் பொருள்கள்) தயாரிக்கும் நிறுவனமான போரோசில் லிமிடெட் எனும் நிறுவனத்தினுடையது.

கம்பெனிச் சட்டத் தின்கீழ் பதிவு செய்யப் பட்ட நிறுவனமாக 1962-ம் ஆண்டில் உருவெடுத்தது போரோசில் லிமிடெட் நிறுவனம். இண்டஸ்ட்ரீயல் & இன்ஜினீயரிங் அப்ப ரேட்டஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பு போரோசிலிக்கேட் கண்ணாடிகளாக இருந்தபடியால், ‘போரோசில்’ என்னும் பிராண்டில் தன்னுடைய தயாரிப்புகளை விற்க ஆரம்பித்தது இந்த நிறுவனம்.

நிறுவனத்தின் தொழில்...

1991-ம் ஆண்டில் ஆர்க்கிடெக்சுரல் கண்ணாடிகள் தயாரிக்க குஜராத் போரோசில் லிமிடெட் என்னும் துணை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 230 டன் அளவிலான கண்ணாடிகள் உற்பத்தி செய்யும் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட உற்பத்தி மையம் குஜராத்தில் உள்ள பரூச் எனும் இடத்தில் நிறுவப்பட்டது. 1999-ம் ஆண்டில் போரோசில் நிறுவனம் போரோசில் இன்டர்நேஷனல் எனும் பிராண்டில் அயல்நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட கண்ணாடியால் செய்யப்பட பொருள்களை சந்தைப்படுத்த ஆரம்பித்தது. இந்த பிராண்ட் உடனடியாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரசித்தி பெற ஆரம்பித்தது.

2000-ம் ஆண்டில் மைக்ரோவேவ் ஓவன்கள் மக்களிடைய புழக்கத்தில் வர ஆரம்பித்தன. இவற்றில் உபயோகிப்பதற்கென்றே பிரத்யேக கண்ணாடிப் பாத்திரங்களை உற்பத்தி செய்து போரோசில் சந்தைப்படுத்த ஆரம்பித்தது. இன்றைக்கும் மைக்ரோவேவ் ஓவனில் உபயோகிப்பதற்கு போரோசில் நிறுவனத்தின் தயாரிப்புகளையே இல்லத்தரசிகள் மிகவும் விரும்புகின்றனர்.

2008-ம் ஆண்டில் வைலின் கிளாஸ் வொர்க்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து அதன்கீழ் ஓர் அதிநவீன உற்பத்தி மையத்தைக் குஜாரத்தில் உள்ள பரூச் எனும் இடத்தில் நிறுவியது. இந்த உற்பத்தி மையத்தில் கன்ஸ்யூமர் கிளாஸ்வேர் மற்றும் ஆய்வகங்களில் உபயோகப்படுத்தப்படும் கண்ணாடி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான குஜராத் போரோசில் நிறுவனம் சோலார் பேனலுக்கான கண்ணாடியை உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி மையம் ஒன்றை நிறுவியது.

குஜராத்தில் உள்ள பரூச் எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உற்பத்தி வசதியானது நாளொன்றுக்கு 180 டன் அளவிலான சோலார் கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் அளவுக்கான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையம் நிறுவப் பட்டது. 2013-ம் ஆண்டில் குஜராத் போரோசில் நிறுவனம் இந்த சோலார் கண்ணாடிகளில் வெளிச்சம் பிரதிபலிக்காமல் இருக்கும் அளவுக் கான கோட்டிங் ஒன்றை அறிமுகம் செய்தது. இதே ஆண்டில் வைலின் நிறுவனம் மகாராஷ்டிரா வில் உள்ள தாராப்பூர் எனும் இடத்தில் தன்னுடைய இரண்டாவது உற்பத்தி மையத்தை நிறுவியது. இந்த உற்பத்தி மையத்தில் ஆய்வகங் களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்பதற்கான மையங்கள் நிறுவப்பட்டன.

போரோசில் லிமிடெட்! (BSE CODE: 543212 NSE SYMBOL: BOROLTD)

2015-ம் ஆண்டில் போரோசில் நிறுவனம் கன்ஸ்யூமர் தயாரிப்புகள் பிரிவில் கால்பதித்து சமையலறையில் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பொருள்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. இதே ஆண்டில் ‘லேப் க்வெஸ்ட்’ எனும் பிராண்டில் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இண்ஸ்ட்ரூ மெண்டுகளையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது போரோசில் நிறுவனம். 2016-ம் ஆண்டில் ஜெய்ப்பூரை சார்ந்த ஹோப்வெல் டேபிள்வேர் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தைக் கையகப்படுத்திய போரோசில் அதே ஆண்டில் நாசிக்கை சார்ந்த கிளாஸ் பேக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் கையகப் படுத்தியது. மேலும், கண்ணாடியினாலான லஞ்ச் பாக்ஸ்களையும் (பிளாஸ்ட்டிக்கைத் தவிருங்கள் என்ற நோக்கத்தில்) இதே ஆண்டில் அறிமுகப் படுத்தியது இந்த நிறுவனம்.

2018-ம் ஆண்டில் வைலைன் கிளாஸ் வொர்க்ஸ் லிமிடெட் மற்றும் ஹோப்வெல் டேபிள்வேர் பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும் போரோசில் நிறுவனத்துடன் முழுமையாக இணைக்கப் பட்டது. 2019-ம் ஆண்டில் கண்ணாடிகள் தொடர்பான ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் லேபரட்டரி உபகரணங் களை உருவாக்குவது போன்ற வற்றைச் செய்யும் நோக்கத்துடன் போரோசில் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தைப் புனேவுக்கு அருகே உள்ள ஹிஞ்ச்வாடி எனும் இடத்தில் ஆரம்பித்தது இந்த நிறுவனம்.

2020-ம் ஆண்டில் நேஷனல் கம்பெனி லா ட்ரிப்யூனலின் ஆணைப்படி, தன்னுடைய நிறுவனங்களை மாற்றியமைத்தது இந்த நிறுவனம் (வைலன் கிளாஸ் வொர்க்ஸ் லிமிடெட், ஃபென்னல் இன்வெஸ்ட்மென்ட் அண்டு ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் குஜராத் போரோசில் லிமிடெட் நிறுவனங்கள் போரோசில் கிளாஸ்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு டீமெர்ஜ் செய்யப்பட்டு போரோசில் ரின்யூவபில்ஸ் லிமிடெட் என்ற பெயரிலும், கன்ஸ்யூமர், சயின்டிபிக் மற்றும் இண்டஸ்ட் ரீயல் தயாரிப்புகள் பிரிவு தனியே பிரிக்கப்பட்டு போரோசில் லிமிடெட் என்ற பெயரிலும்).

போரோசில் லிமிடெட்! (BSE CODE: 543212 NSE SYMBOL: BOROLTD)
போரோசில் லிமிடெட்! (BSE CODE: 543212 NSE SYMBOL: BOROLTD)

ரிஸ்க்குகள் என்னென்ன?

கண்ணாடி உற்பத்தி (கன்ஸ்யூமர், சயின்டிபிக் மற்றும் இண்டஸ்ட் ரீயல்) துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்துவகை ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்கள் விலை உயர்வு, அதிநவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுதல், அந்நிய செலாவணி மாறுதல், வாடிக்கை யாளரின் தேவை மற்றும் ரசனை யில் ஏற்படும் மாறுதல்கள் போன்ற வையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும்.

தற்சமயம் இந்த நிறுவனம் கைவசம் வைத்திருக்கும் ரீஸ்ட் ரக்சரிங் திட்டப்படி கன்ஸ்யூமர் தயாரிப்புகள் பிரிவைத் தனியாகவும் சயின்டிபிக் மற்றும் இண்டஸ்ட்ரீயல் தயாரிப்புகள் பிரிவைத் தனியாகவும் பிரிப்பதற்கான முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்தவித ரீஸ்ட்ரக்சரிங்கானது கிட்டத்தட்ட பத்து படிநிலைகளைக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும். ஆகஸ்ட் 2022 நிலவரப்படி, இதில் மூன்று படிநிலைகளை நிறைவு செய்து உள்ளது இந்த நிறுவனம். மீதமிருக்கும் படிநிலைகளுக்கான நடவடிக்கைகள் முடிக்கப்படும் போது இந்த நிறுவனம் இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப் படலாம் (கன்ஸ்யூமர் பிசினஸ் – போரோசில் லிமிடெட் என்ற பெயரிலும், சயின்டிபிக் மற்றும் இண்டஸ்ட்ரீயல் புராடக்ட்ஸ் பிரிவு போரோசில் சயின்டிபிக் லிமிடெட் என்ற பெயரிலும் பங்குச் சந்தை யில் பட்டியலிடப்படும் என்று சொல்கிறது இந்த நிறுவனத்தின் ஆகஸ்ட் 9, 2022 தேதியிடப்பட்ட இன்வெஸ்ட்டார் பிரசன்டேஷன்).

இந்தவித ரீஸ்ட்ரக்சரிங் செய்யப்படும் நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது அனைத்து வகையான முதலீட் டாளர்களுக்கும் பொருத்தமானதாக இருக்காது (சில சமயம் முதலீட்டிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்காகக் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரிக்க வாய்ப்பிருப்பது போன்ற கூடுதலான ரிஸ்க்குகள் உள்ள படியால்) என்பதால், வாசகர்கள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பற்றி முழுவதுமாகப் புரிந்துகொண்ட பின்னரே இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும்முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்தபின் முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!