Published:Updated:

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: MINDAIND, BSE CODE: 532539)

மிண்டா இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
மிண்டா இண்டஸ்ட்ரீஸ்

கம்பெனி பயோடேட்டா

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: MINDAIND, BSE CODE: 532539)

கம்பெனி பயோடேட்டா

Published:Updated:
மிண்டா இண்டஸ்ட்ரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
மிண்டா இண்டஸ்ட்ரீஸ்

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் நிறுவனம் ஆட்டோமொபைல்களுக் கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மிண்டா லிமிடெட்.

நிறுவனத்தின் சிறப்பு...

1958-ம் ஆண்டில் பூர்வாங்கப் பணிகள் செய்யப்பட்டு, ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட உதிரிபாகங்களுக்கான தீர்வுகளை (Proprietary Automotive Solutions) வழங்குவதில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், ஸ்பெயின், மொராக்கோ, மெக்ஸிகோ, கொலம்பியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் 71 உற்பத்தி வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். மேலும், தனக்குத் தேவையான உதிரிபாகங்களை வடிவமைப் பதற்கான வடிவமைப்பு மையங்களை தைவான், ஸ்பெயின் மற்றும் ஜப்பானில் நிறுவி யுள்ளது. மேலும், வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கூட்டமைப்பு நாடுகளில் தன்னுடைய விற்பனை அலுவலகங்களைக் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம். 23,000 என்ற எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிவருகிற இந்த நிறுவனம் ஹரியானாவில் உள்ள மனேசர் என்னும் இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவருகிறது.

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: MINDAIND, BSE CODE: 532539)

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

இந்த நிறுவனம் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆல்டர்நேட் ஃப்யூயல் சிஸ்டம்கள், ஏர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம்கள் கேனிஸ்டர்கள், பிரேக் மற்றும் எரிபொருளுக் கான ஹோஸ்கள், கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம்கள் (CBS), நாய்ஸ் சப்ரஸர் கேப்கள், பி.டி.சி பார்ட்டுகள், அல்லாய் வீல்கள், சீட் பெல்ட்டுகள், கேமராக்கள், இ.ஏ பேடுகள், ஏர்பேகுடன் கூடிய ஸ்டீயரிங் வீல்கள், ஏர் பிரேக்குகள், ஃப்யூயல் கேப்புகள், முகப்பு மற்றும் வாகனங்களின் பின்னால் பொறுத்தப் படும் விளக்குகள், ஏர் டக்ட்டுகள் எனப் பல்வேறு பொருள்களையும் மற்றும் கனெக்டட் கார் சொல்யூஷன்கள் மற்றும் சீட்டிங் சிஸ்டம்களை உற்பத்தி செய்து, மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருகிறது.

உற்பத்தி செய்யும் பொருள்கள் வாரியாகப் பார்த்தால், ஆட்டோமொபைல்களுக்கான ஸ்விட்சுகள், ஹார்ன்கள், அலாய் வீல்கள், ப்ளோ மோல்டிங் பார்ட்கள் மற்றும் சீட்டுகள் உற்பத்தியில் அகில இந்திய ரீதியாக முதலாவது நிலையில் இருக்கும் உற்பத்தியாளராகவும், டெலிமேட்டிக்ஸ், ஸ்பீக்கர்ஸ், ஏர் ஃபில்டர்ஸ் மற்றும் ஏர்பேக்குகள் உற்பத்தியில் அகில இந்திய ரீதியாக இரண்டாவது நிலையில் இருக்கும் உற்பத்தி யாளராகவும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ மோட்டிவ் விளக்குகள் மற்றும் பாடி சீலிங் பிரிவில் அகில இந்திய ரீதியாக மூன்றாவது நிலையில் இருக்கும் உற்பத்தி யாளராகவும் திகழ்கிறது இந்த நிறுவனம்.

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: MINDAIND, BSE CODE: 532539)

நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்...

இந்தியாவில் 65 மற்றும் உலக அளவில் ஆறு என்ற அளவில் 71 உற்பத்தி மையங்களையும், இந்தியாவில் 12 ஆராய்ச்சி மையங்களையும், உலக அளவில் நான்கு டிசைன் சென்டர்களையும், 13-க்கும் மேற்பட்ட கூட்டணி பார்ட்னர் களையும் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

பயணிகள் வாகனப் பிரிவில் மாருதி சுஸூகி, ஹூண்டாய், டொயோட்டா, பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல முக்கியமான நிறுவனங்களையும், இரு சக்கர வாகனங்களில் ஹோண்டா, டி.வி.எஸ், பஜாஜ், யமஹா, பியாஜியோ உள்ளிட்ட பல முக்கியமான நிறுவனங்களையும், கமர்ஷியல் வாகனங்கள் பிரிவில் டாடா, அசோக் லேலாண்ட், டாஃபே, வோல்வோ, இசூசு உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களையும் தன்னுடைய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

வளர்ச்சிக்கான நடவடிக்கைகள்...

பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்டுள்ள தால், ஒரு டைவர்சிஃபைடான உற்பத்தி செய்து விற்பனை செய்யும் போர்ட்ஃபோலியோவையும், பல்வேறு விதமான வாகன உற்பத்தி நிறுவனங்களை வாடிக்கையா ராகக் கொண்டிருப் பதால் இந்த இரண்டு விஷயங் களிலுமே சிறந்த அளவிலான டைவர்சிஃபிகேஷனையும் கொண்டு இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு கள் ரீதியாகப் பார்த்தால், இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் ஸ்விட்சுகளுக்கு பஜாஜ், ஹோண்டா (2 சக்கரம்), மாருதி சுஸூகி, பியாஜியோ, டாடா மோட்டார்ஸ், ராயல் என்பீல்டு, மஹிந்திரா, ஹார்லிடேவிட்சன் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங் களும் லைட்டிங் பிரிவுக்கு மாருதி சுஸூகி, டிவிஎஸ், மஹிந்திரா, ராயல் என்பீல்டு, யமஹா, டொயோட்டா, ஹோண்டா, ரெனால்ட் நிசான், மற்றும் பஜாஜ் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களும், காஸ்டிங் (castings) செய்துதரும் பொருள்களுக்கு ஹோண்டா, வாப்கோ, மாருதி சுஸூகி, மஹிந்திரா, டி.வி.எஸ் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களும், ஹார்ன் தயாரிப்புகளுக்கு ஃபோக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ, டைம்லர், ஹூண்டாய் உள்ளிட்ட பல முக்கியமான நிறுவனங்களும் வாடிக்கையாளர் களாக இருக்கின்றனர்.

தனக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்து கொள்ளும் வண்ணம் சொந்தமாக ஆராய்ச்சி வசதியைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். பதினைந்து இத்தகைய மையங் களைக் (ஆராய்ச்சி மற்றும் டிசைன் சென்டர்கள்) கொண் டிருக்கும் இந்த நிறுவனம், இவற்றில் 700-க்கும் மேற்பட்ட பொறியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்த ஆராய்ச்சி வசதிகள் 275-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும், 250-க்கும் மேற்பட்ட டிசைன் பதிவுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் புதிய வாகனம் விற்பனையான பின்னர், தேய்மானத்தால் மாற்றப்படும் உதிரிபாகங்களுக்கான பி-டு-சி சந்தையிலும் கால்பதித்து வெற்றி கரமாகச் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் 4,500-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இந்தியா வில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் உலக அளவில் ஆறு நாடுகளிலும் 1,200 பிசினஸ் பார்ட்னர்கள், 4,000-க்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகர்கள் வாயிலாக வாடிக்கையாளர் களைச் சென்றடைகிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த வகையிலான பி-டு-சி ரீதியிலான வர்த்தகத்தின் அளவு ஒட்டுமொத்த விற்றுவரவில் 12 சதவிகிதமாக இருந்தது.

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! (NSE SYMBOL: MINDAIND, BSE CODE: 532539)

ரிஸ்க்குகள் என்னென்ன?

வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித்துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. வாகன விற்பனையில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவுக்கு ஒட்டியே இருக்கும் ஒரு விஷயமாகும். எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியை அடையாது போனாலோ தேக்கநிலையைச் சந்தித்தாலோ, அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், மூலப்பொருள்களின் விலை உயர்வு, வேகமாக அறிமுகப்படுத்தப்படும் புதிய மற்றும் அதி நவீன தொழில்நுட்பம், அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல், தொழில் ரீதியிலான போட்டி, வாகன உற்பத்தித்துறையில் ஏற்படும் மாற்றங்கள், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் போன்றவையும் இந்த நிறுவனத் துக்கான ரிஸ்க்குகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடு சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததா என்பதை முடிவு செய்த பின்னரே, முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism