பிரீமியம் ஸ்டோரி

ஏ.கே.பிரபாகர், தலைவர், ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் ஆராய்ச்சிப் பிரிவு

தீபாவளிக்கு புதிய பங்குகளில் முதலீடு செய்வது நம்மவர்களின் பழக்கமாக இருக்கிறது. 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர், 
ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் ஆராய்ச்சிப் பிரிவு
ஏ.கே.பிரபாகர் தலைவர், ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் ஆராய்ச்சிப் பிரிவு

1. மேக்ஸ் ஹெல்த்கேர் (Max Healthcare)

நிறுவனத்தின் சிறப்பு: இந்த நிறுவனம், மொத்தமாக 3,400 படுக்கை வசதிகளுடன் 17 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. மேலும், மருத்துவம் சார்ந்த இதர தொழில்களான மருத்துவமனைக்கு முன் மற்றும் பிந்தைய சேவைகளை வழங்கும் மேக்ஸ்@ஹோம் என்ற நிறுவனத்தையும், நோய் கண்டறிதல் சேவைகளை வழங்கும் மேக்ஸ்லேப் நிறுவனத்தையும் தொடங்கி நடத்திவருகிறது. இவை வளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் உள்ளன. மேக்ஸ் ஹெல்த்கேர் பெரும்பாலும் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் செயல்பட்டுவருகின்றன.

முக்கியமான அம்சங்கள்: வட இந்திய பகுதிகளில் 10 சொந்த மருத்துவமனைகளையும், பிற நிறுவனங்களுடன் இணைந்து 4 மருத்துவ மனைகளையும், செயல்பாடு மற்றும் நிர்வாகம் சார்ந்து இரண்டு ரேடியன்ட் மருத்துவமனை களையும் செயல்படுத்தி வருவதன் மூலம் முன்னணி மருத்துவமனை நிறுவனமாக உள்ளது. இந்த மருத்துவமனைகள் மூலம் வரும் வருமானம் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 92% ஆகும்.

மதிப்பீடு: இந்தப் பங்கு 2023 நிதி ஆண்டில் புளூம்பர்கின் இ.பி.எஸ் கணிப்பில் 33 மடங்கு என்னும் அளவில் வர்த்தகமாவதால், கவர்ச்சி யானதாக உள்ளது.

2. வேலியன்ட் ஆர்கானிக்ஸ் (Valiant Organics)

நிறுவனத்தின் சிறப்பு: வேலியன்ட் ஆர்கானிக்ஸ், 1984-ல் ஒரே ஒரு தயாரிப்பைக் கொண்டு தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கியது. இப்போது பலதரப்பட்ட கெமிக்கல்களை உற்பத்தி செய்யும் நிறுவன மாக உருவாகியுள்ளது. மேலும், சந்தையின் போட்டியை எதிர்கொண்டு முன்னணி இடத்தைத் தக்கவைக்கவும், லாபத்தை அதிகரித்துக்கொள்ளவும் இந்த நிறுவனம் தொடர்ந்து தனது உற்பத்தித் திறனை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. தற்போது ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

முக்கியமான அம்சங்கள்: பாராசிட்டமால் மற்றும் பிற மருந்து சந்தையில் பங்களிப்பை அதிகரிக்க அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகப் புதிய உற்பத்தி மையங்களை உருவாக்கும் திட்டங்களை நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

மதிப்பீடு: நீடித்த 24% - 25% எபிட்டா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு முயற்சிகள் மற்றும் புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் உத்திகள் மூலம் நீண்டகால அடிப்படையில் நிலையான வருவாய் வளர்ச்சியைத் தக்கவைத்து வருகிறது. இது பங்கின் விலையிலும் எதிரொலித்து வருகிறது.

தித்திக்கும் தீபாவளி முதலீடு... முத்தான லாபம் தரும் கெத்தான 10 பங்குகள்!

3. சி.சி.எல் புராடக்ட்ஸ் (CCL Products)

நிறுவனத்தின் சிறப்பு: உலகின் முன்னணி காபி ஏற்றுமதி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனம் இன்ஸ்டன்ட் காபி, ஸ்ப்ரே ட்ரைட் காபி, ஸ்ப்ரே ட்ரைட் அக்லொமெரேடட் காபி, ஃப்ரீஸ் ட்ரைட் காபி, ஃப்ரீஸ் கான்சென்ட்ரேடட் லிக்விட் காபி உட்பட பலதரப்பட்ட காபி வகைகளை உற்பத்தி செய்கிறது. ஆந்திரா (இந்தியா) மற்றும் வியட்நாமில் உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்: இந்நிறுவனம் காபி ஏற்றுமதி வணிகத்துக்கான ஆர்டர்களை வலுவாகக் கொண்டுள்ளது. மேலும், தற்போது 2022-23-ம் நிதி ஆண்டுக்கான ஆர்டர்களையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.

மதிப்பீடு: கடந்த 20 ஆண்டுகளாக, இந்த நிறுவனம் இதன் துறையில் சிறந்த வணிக மாதிரியை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியை நகலெடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மேலும், கடந்த சில காலாண்டுகளில் பல்வேறு வகையான சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன்மூலம் அதன் லாப வளர்ச்சியை மேம்படுத்தி வந்துள்ளது. இந்தப் போக்கு 2021-22 மற்றும் 2022-23-ம் நிதி ஆண்டுகளிலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் ஆர்டர்கள் வலுவாக உள்ளதால் விற்பனை வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். எனவே, இந்தப் பங்கு மீது பாசிட்டிவான பார்வை உள்ளது.

4. ரவுட் மொபைல் (Route Mobile)

நிறுவனத்தின் சிறப்பு: ரவுட் மொபைல் பல்வேறு நிறுவனங்களுக்கு கிளவுட் - கம்யூனிகேஷன் சேவைகள் (CPaaS) மற்றும் ஓவர்-தி-டாப் எனப்படுகிற ஓ.டி.டி தளங்கள், மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கான சேவை கள் வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

முக்கிய அம்சங்கள்: அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, அதிவேக இணையம் மற்றும் கோவிட் 19 காரணமாக அதிகரிக்கும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இதற்கு சாதகமாக உள்ளன.

மதிப்பீடு: இந்த நிறுவனத்தின் மூலதனச் செலவு குறைவாக இருப்பதுடன், ஆரோக்கியமான லாப வளர்ச்சியும் நிறுவனத்துக்கு சிறப்பான வருவாயைத் தருகிறது. இது பங்கின் விலையிலும் எதிரொலிக்கும் எனலாம்.

5. டி.எல்.எஃப் (DLF)

நிறுவனத்தின் சிறப்பு: 1946 -ல் சௌத்ரி ராகவேந்திர சிங் என்பவரால் நிறுவப்பட்ட டி.எல்.எஃப், குடியிருப்புகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இடங் களை விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் நிறுவன மாக இந்தியா முழுக்க உள்ளது.

முக்கிய அம்சங்கள்: குடியிருக்கும் வீடுகளுக்கான தேவை வலுவாக இருப்பதால், இந்த நிறுவனம் அதன் விற்பனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலான திட்டங் களை முன்னெடுக்கிறது. திட்டங்களைத் திறம்பட செயல் படுத்துவதால் 2022-ம் நிதி ஆண்டின் இரண்டாம் அரை ஆண்டில் நிறுவனம் 6.6 மில்லியன் சதுர அடி அளவிலான திட்டங்களை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. மேலும், 35 மில்லியன் சதுர அடி அளவிலான திட்டங்களைத் தொடங்க திட்ட மிட்டுள்ளது.

மதிப்பீடு: கடந்த ஐந்து காலாண்டுகளைப் பார்க்கும்போது இந்த நிறுவனம், அதன் நிகரக் கடனைக் கணிசமாகக் குறைத்து வருகிறது. இந்தப் போக்கு மேலும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. பணப் புழக்கத்திலும் இந்த நிறுவனம் பாசிட்டிவாக உள்ளது. நிகரக் கடன் குறைப்பு வேகமும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர வேண்டிய தொகையில் 75-80% அடுத்த ஆண்டில் வரவுக்கணக்கில் கொண்டுவரப்பட உள்ளது.

தித்திக்கும் தீபாவளி முதலீடு... முத்தான லாபம் தரும் கெத்தான 10 பங்குகள்!

6. எஸ்.பி.ஐ கார்ட்ஸ் & பேமென்ட் (SBI Cards & Payment)

நிறுவனத்தின் சிறப்பு: எஸ்.பி.ஐ கார்டு நிறுவனத்தை அக்டோபர் 1998-ல் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஜி.இ.கேப்பிடல் இணைந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம், இந்திய வாடிக்கை யாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, மதிப்புக் கூட்டப்பட்ட வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதாகும்.

முக்கிய அம்சங்கள்: இந்த நிறுவனம் 22,000 கிளைகளையும், 45 கோடி வாடிக்கையாளர்களை யும் கொண்ட பெரிய வங்கியான எஸ்.பி.ஐ-யின் வலுவான ஆதரவைப் பெற்று செயல்பட்டு வருகிறது. இரண்டாவது பெரிய நிறுவனமாகத் தன்னை வலுப் படுத்தியுள்ள இந்த நிறுவனம், ஓ.எஸ் கார்டுகளில் (Operating System Cards)) 19% சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. மொத்த கார்டுகளின் பரிவர்த் தனைகளில் 20% பங்களிப்பு உள்ளது.

மதிப்பீடு: 2023-ல் இந்தப் பங்கு விலை மற்றும் அட்ஜஸ்டட் புக் வேல்யூ 12 மடங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த நிறுவனப் பங்கின் விலையேற்றத்துக்கு உதவும் எனலாம்.

7. ஃபெடரல் பேங்க் (Federal Bank)

நிறுவனத்தின் சிறப்பு: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 1,200-க்கும் மேலான கிளைகள் மற்றும் 1,900-க்கும் மேலான ஏ.டி.எம் வசதிகள் கொண்ட பெரிய தனியார் வணிக வங்கி இதுவாகும். இதன் அனைத்துக் கிளைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி தன்னை ஒரு நிதி சூப்பர் மார்க்கெட்டாக நிலைநிறுத்திக் கொள்கிறது.

முக்கிய அம்சங்கள்: இதன் மொத்த வாராக்கடன் அளவு 2022-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3.50 சத விகிதமாக உள்ளது. இது 2021-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 3.41 சதவிகிதமாக இருந்ததால், சொத்து தரம் நிலையாக உள்ளது. அதேபோல், நிகர வாராக்கடன் 2021 நான்காம் காலாண்டில் 1.19% என்பதிலிருந்து, 2022 முதல் காலாண்டில் 1.23 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த வங்கிக்குக் கேரளாவில் அதிக கிளைகள் இருப்பதால், குறைந்த செலவில் என்.ஆர்.ஐ டெபாசிட்டுகளின் பயனை அனுபவிக்கிறது. தற்போது, மொத்த சில்லறை டெபாசிட்டுகளில் 28% என்.ஆர்.ஐ டெபாசிட்டுகளாக உள்ளன.

மதிப்பீடு: 80 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப் பதால், கட்டணங்கள் மூலமான வருவாய் ஈட்டுவதில் வங்கிக்குப் போதுமான வாய்ப்புகள் உள்ளன.

8. சோனா பி.எல்.டபிள்.யூ பிரசிஷன் ஃபோர்ஜிங்ஸ் (Sona BLW Precision Forgings)

நிறுவனத்தின் சிறப்பு: இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஒரு புதிய தலைமுறை துணை நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனம், எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் பேவல் கியர்ஸ் (Bevel Gears) மற்றும் மோட்டார்ஸ் என்ற இரண்டு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனத்துறையில் கவனம் செலுத்தி தன்னுடைய தயாரிப்புகளை உருவாக்கி, உலக அளவில் வாடிக்கையாளர் சந்தையை தன்வசம் வைத்திருப்பதில் ஈடு இணையற்ற நிறுவனமாக உள்ளது. இதனால் செயல்பாட்டு லாப வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது.

முக்கிய அம்சங்கள்: திருப்புமுனையில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தை இருப்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். இந்த சர்வதேச மற்றும் இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து அதன் பல்வேறு தயாரிப்புகள் சார்ந்து மொத்தமாக 58 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதில், 36% திட்டங்களுக்கான (21 திட்டங்கள்) உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 64% திட்டங்கள் அடுத்த 18 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், அதிகமான திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கும் சாத்தியங்கள் இருப்பதால் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடையும் வாய்ப்புகளுடன் இருப்பதாக நம்பலாம்.

மதிப்பீடு: நிறுவனத்தின் வலிமையான செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கான சாத்தியங்களின் அடிப்படையில் இந்த நிறுவனம் உறுதியாக இருக்கிறது. எனவே, நிறுவனத்தின் எதிர்காலத்தின் மீதும், இந்தப் பங்கின் செயல்பாட்டின் மீதான கணிப்பு பாசிட்டிவாக உள்ளது.

9. ஹெச்டிஎஃப்சி லைஃப் (HDFC Life)

நிறுவனத்தின் சிறப்பு: ஆயுள், மருத்துவம், சொத்துகள் மற்றும் ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தேவைக்கான காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் 300-க்கும் மேலான கூட்டாளர்களுடன் இணைந்து விநியோக செயல் பாடுகளை மேற்கொள்ளும் வகையில் துடிப்பான கட்ட மைப்பை உருவாக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்: 2021-ம் நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு தனிப்பட்ட ஏ.பி.இ-யின் (Annual premium equivalent) அடிப்படையில் 16.8 சதவிகிதமாக அதிகரிக்கும். இந்த நிறுவனம், எக்சைட் லைஃப் நிறுவனத்தைக் கையகப்படுத் தியதன் மூலம் இதன் ஏ.பி.இ 16.5 சதவிகிதமாக அதிகரிக்க உள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக உருவாகியுள்ளது.இதன்மூலம் எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இருக்கும் இடைவெளியையும் குறைக்க உதவியிருக்கிறது.

மதிப்பீடு: இந்த நிறுவனம் மேம்படுத்தப்பட்ட திட்ட போர்ட்ஃபோலியோக்களையும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வணிக அணுகுமுறையுடனான வலுவான தொடர்பு சங்கிலி களையும் உருவாக்கியிருப்பதால், தொடர்ந்து வளர்ச்சி அடை வதற்கான சாத்தியங்களுடன் உள்ளது.

10. சூர்யா ரோஷ்னி

நிறுவனத்தின் சிறப்பு: 1973-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரும்புக் குழாய் உற்பத்தியுடன் தன்னுடைய செயல்பாட்டைத் தொடங்கி, பின்னர் படிப்படியாக விரிவடைந்து, 1984-ல் விளக்குகள் தயாரிப்பிலும் 2010-ல் பிவிசி குழாய் உற்பத்தியிலும் 2014-ல் நுகர்வோர் டியூரபிள்ஸ் தயாரிப் பிலும் களம் இறங்கியது.

மேலும், சூர்யா ரோஷ்னி இந்தியாவின் பெரிய இ.ஆர்.டபிள்யூ குழாய்கள் ஏற்றுமதி நிறுவனமாகவும் பெரிய ஜி.ஐ குழாய் உற்பத்தியாளராகவும் உருவெடுத்துள்ளது. விளக்குகள் பிரிவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.

முக்கிய அம்சங்கள்: இந்த நிறுவனம் ஜி.ஐ குழாய்களின் மிகப் பெரிய ஏற்றுமதியாளர் ஆகும். அதிக லாபமுள்ள ஏ.பி.ஐ குழாய்களில் கவனம் செலுத்து கிறது. 2016-2021 வரையிலான நிதி ஆண்டுகளில் சூர்யா நிறுவனம் படிப்படியாக அதன் தயாரிப்பு களை அதிக லாபமுள்ள ஜி.ஐ குழாய்கள் மற்றும் ஏ.பி.ஐ குழாய்களில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளது. இதனால் இதன் லாபம் மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

தவிர, கடந்த 7 - 8 ஆண்டுகளில் எல்.இ.டி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது விலை சரிவு இறுதி நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. எல்.இ.டி விளக்குகளுக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பி.எல்.ஐ (PLI - Production Linked Incentive) ஊக்குவிப்புத் திட்டத்தில் அதிக பயனடையும் நிறுவன மாகவும் இந்த நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விநியோக சங்கிலியைப் பயன் படுத்தி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சந்தையில் இந்த நிறுவனம் நுழைந்துள்ளது. 2014-ல், சூர்யா அதன் விரிவான விநியோக சங்கிலி மூலம் கூடுதல் பயனடைவதற்காக மின்விசிறிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. அதன்பிறகு, நிறுவனம் படிப்படியாக மின் சேமிப்பு வாட்டர் ஹீட்டர்கள், அறை ஹீட்டர்கள், ட்ரை அயர்ன், ஸ்டீம் அயர்ன் மற்றும் இம்மர்ஷன் ஹீட்டர், மிக்சர் கிரைண்டர், இண்டக்‌ஷன் குக்கர், டோஸ்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. அடுத்த ஐந்து ஆண்டு களில் வலுவான விநியோக சங்கிலி கட்டமைப்பின் உதவியால் இவை வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மதிப்பீடு: இந்தப் பங்கின் கணிப்பில் இ.பி.எஸ் 2021-23-ம் ஆண்டுகளில் 48% சி.ஏ.ஜி.ஆர் அளவில் வளர்ச்சியடையும் எனத் தெரிகிறது மேலும், 2023-ம் நிதி ஆண்டில் இதன் மூலதனத்தின் மீதான வருவாய் 20% உயரும். (2016-2021-ம் நிதி ஆண்டுகளில் சராசரியாக 10 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது).

தமிழில்: திவ்யா

பொறுப்புத் துறப்பு: இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள், இந்தப் பங்குகளைத் தனிப்பட்ட முறையில் நன்கு ஆராய்ந்து, அதில் உள்ள ரிஸ்க்குகளை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்!

ஹெச்.டி.எஃப்.சி லைஃப்... புதிய வணிகம் 40% வளர்ச்சி..!

2022-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்த நிறுவனத்தின் புதிய வணிகம் வருடாந்தர அடிப்படையில் 40.2% வளர்ச்சியடைந்து ரூ.408 கோடியாக உள்ளது. புதிய தொழில்களின் வளர்ச்சி வரம்பு 2021-ல் 24.3 சதவிகிதமாக இருந்தது, 2022 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 26.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உள்ளார்ந்த மதிப்பின் மீதான செயல்பாட்டு வருமானம் 16.5 சதவிகிதமாக உயர்ந்தது. (2021-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு மதிப்பு 15.8%). தனிநபர் ஏ.பி.இ (Annual premium equivalent) மற்றும் ஒட்டுமொத்த ஏ.பி.இ இரண்டும் முறையே 21.8% மற்றும் 30.3% எனப் பதிவாகியுள்ளது. கடன் தீர்வு விகிதம் 203% எனும் அளவில் ஆரோக்கியமாக உள்ளது (இது 2021 ஆண்டின் நான்காம் காலாண்டில் 201 சதவிகிதமாக இருந்தது).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு