Published:Updated:

ஏற்ற இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? - முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டல்

 பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

லாபம் ஈட்டும் வாய்ப்புகளை எதிர்பார்த்து முதலீடுகளை மேற்கொள்ளும் போக்கு சந்தைகளில் குறைந்து வருகிறது!

ஏற்ற இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? - முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டல்

லாபம் ஈட்டும் வாய்ப்புகளை எதிர்பார்த்து முதலீடுகளை மேற்கொள்ளும் போக்கு சந்தைகளில் குறைந்து வருகிறது!

Published:Updated:
 பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை
கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொருளாதாரம் பல்வேறு சவால் களையும் நெருக்கடியையும் சந்தித்தது. தற்போது ஊரடங்குத் தளர்வுகள் அமலுக்கு வந்தபின், பொருளாதார நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.
ஏற்ற இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? - முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டல்

இந்த நிலையில், பங்குச் சந்தையின் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமானது.

2. ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்க ஆரம்பித்த பிறகு, சந்தையின் போக்கில் மாற்றம் காணப்பட்டது.

3. நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் 23.8 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டதும், சந்தை அதன் சமீபத்திய இறக்கத்திலிருந்து 50% வரை ஏற்றம் கண்டது.

4. தற்போது ஜி.டி.பி உறுதியான வளர்ச்சியின் போக்கில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன. ஆனால், பங்குச் சந்தை இறக்கம் அடைகிறது.

இதிலிருந்து தெரிவது என்னவெனில், பொருளாதார காரணிகளுக்கும் சந்தையின் நகர்வுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படியெனில் சந்தையின் நகர்வுகளைத் தீர்மானிப்பது எது?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதன் மூலம் இனிவரும் காலத்தில் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதைச் சரியாக அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சந்தையை இயக்கும் லிக்விடிட்டி

மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கும் போது, மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை கேஷ் பிரிவில் இயக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக லிக்விடிட்டிதான் இருந்து வருகிறது. நிஃப்டி இறக்கத்திலிருந்து 4,200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இந்த ஏற்றமானது லிக்விடிட்டி உள்ளே வந்ததன் காரணமாகவே நிகழ்ந்துள்ளது. எனவே, சந்தையின் போக்கைத் தீர்மானிப்பதில் லிக்விடிட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகமாக லிக்விடிட்டி உள்ளே வரும்போது சந்தை அதிகமாக ஏற்றம் காண்கிறது. அதே போல, லிக்விடிட்டி வெளியேறும்போது சந்தையிலும் அதன் தாக்கத்தைக் காண முடிகிறது. இந்திய சந்தையின் நுகர்வு மற்றும் தேவையின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே பங்குச் சந்தையில் லிக்விடிட்டியின் போக்கு காணப்படுகிறது.

 பங்குச் சந்தை
பங்குச் சந்தை

நல்ல லாபம் ஈட்டும் வாய்ப்புகளை எதிர்பார்த்து முதலீடுகளை மேற்கொள்ளும் போக்கு உலகம் முழுவதுமுள்ள சந்தைகள் அனைத்திலும் குறைந்து வருகிறது. சர்வதேசப் பொருளாதார மீட்சியில் ஐ.எம்.எஃப் தொடக்கத்தில் எதிர்பார்த்த ‘swoosh’ முறையானது தற்போது வேறு வடிவத்தில் மாற்றம் அடையத் தொடங்கியுள்ளது. அவை Z, அதிலிருந்து V, பிறகு U, அதன்பிறகு L, பிறகு டபுள் V.

கொரோனா பாதிப்பு கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவில் அதிகரித்ததால், பொருளாதார மீட்சியானது நிலையற்றதாக இருப்பதாகப் பொருளாதார நிபுணர்களும் சந்தை முதலீட்டாளர்களும் கருதினர். ஆனால், தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் தெரிகின்றன. பெரும்பாலான துறைகளில் நல்ல வளர்ச்சி எதிர்பார்ப்புகள் தெரிகின்றன. இதனால் நடைமுறையில் முதலீட்டாளர்களின் ஆர்வமும் அதிகரித்திருப் பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. பார்மா, நுகர்வு, ஆட்டோமொபைல், இணையம் ஆகியவை சிறப்பான வளர்ச்சியைக் காட்டுகின்றன.  

இதைப் புரிந்துகொள்வது எளிது. ஆனால், லிக்விடிட்டி உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும் அச்சுறுத்துவது எவை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புவி அரசியல் பதற்றங்கள்

எல்லைப் பிரச்னைகள் எப்போதுமே பங்குச் சந்தைகளில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் நாட்டின் வடகிழக்கு எல்லை களில் தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. இது எவ்வளவு காலம் தீவிரமாக நீடிக்கிதோ, அதுவரை புதிதாக லிக்விடிட்டி சந்தைக்குள் வருவது குறையும்.

ஏற்ற இறக்கம்... சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? - முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டல்

வங்கித் துறை சிக்கல்கள்

2010-லிருந்து 2017 வரை பெரும்பாலான பரிவர்த்தனைகள் இந்திய வங்கிகளில் நிகழ்ந்தது. இது ‘சந்தேகத்துக்கிடமான செயல்பாட்டு அறிக்கைகள்’ என அமெரிக்க கருவூலத் துறையின் நிதிசார் குற்றங்கள் அமலாக்கப் பிரிவிலிருந்து முக்கிய ரகசியமாக வெளிவந்தது. அதில் பெரும் பணமோசடிகள், தீவிரவாத நிதி, நிதி மோசடி, போதை மருத்துகள் என அனைத்தும் வெளிவந்தன. இரண்டு டிரில்லியன் டாலர் அளவில் மோசடிகளும் குற்றங்களும் நிகழ்ந்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

 பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்திய வங்கிகளில் 406-க்கும் மேலான பரிவர்த்தனைகள் இந்த நிதி குற்றங்களுக்குப் பின்னால் நிகழ்ந்திருக்கிறது. இவற்றால் வங்கித் துறை சிக்கலுக்குள்ளானது. பங்குச் சந்தையிலும் வங்கிப் பிரிவு மோசமாகவே செயலாற்றி வருகிறது.  

வரவிருக்கும் காலாண்டு முடிவுகள்

இன்னும் ஒரு வாரத்தில் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரவிருக்கின்றன. காலாண்டு முடிவுகள் எவ்வளவு தரமாக வரப்போகிறது என்பதைப் பொறுத்து சந்தையின் நகர்வுகள் இருக்கும். காலாண்டு முடிவுகள் மீதான எதிர்பார்ப்பும், இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளும் முக்கிய காரணிகளாக இருக்கும். முதல் காலாண்டு முடிவுகளைக் காட்டிலும் மோசமாக இருந்தால் சந்தையின் போக்கு இறக்கத்தை நோக்கி நகரும்.  

டெக்னிக்கல் கணிப்பு

நிஃப்டி புள்ளிகளானது இந்த ஆண்டு தொடக்கத்தில் 12430 புள்ளிகளிலிருந்து இறக்கம் கண்டது. தற்போது (புதன்கிழமை நிலவரப்படி) அதில் 87% மீண்டு வந்திருக்கிறது. இது குறிப்பிடத்தக்க சாதனைதான். பெரும்பாலான முதலீட்டாளர்கள் இந்த முக்கிய நகர்வை தவறவிட்டிருக்கலாம். ஆனால், 10890 என்ற நிலையில் இறக்கத்தின் போக்கை உருவாக்கலாம். இந்த நிலையைத் தாண்டும்போது நிஃப்டி 10607 என்ற நிலைக்கு நகர வாய்ப்புள்ளது.

மார்ச் மாதத்துக்குப் பிறகு, தற்போது கன்சாலிடேஷன் நிலையில் உள்ளது. வரும் காலாண்டு முழுக்க அமெரிக்க தேர்தல் செய்திகளும் காலாண்டு முடிவுகளும், பருவ மழைத் தாக்கமும், இந்தியா முழுவதிலும் கொரோனா பரவலின் நிலை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவை சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவையனைத்தும் எதிர்பார்ப்பின் அடிப் படையிலான காரணிகள். எனவே, நிகழ்வுகள், செய்திகள் அடிப்படையில் சந்தையில் ஏற்றம் இறக்கம் காணப்படும். சந்தையின் போக்கிலும் மாற்றங்கள் காணப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism