Published:Updated:

5ஜி வருகை... வேகமெடுக்கும் துறைகள்... வாங்க வேண்டிய பங்குகள்!

5ஜி வருகை
பிரீமியம் ஸ்டோரி
5ஜி வருகை

கவர் ஸ்டோரி

5ஜி வருகை... வேகமெடுக்கும் துறைகள்... வாங்க வேண்டிய பங்குகள்!

கவர் ஸ்டோரி

Published:Updated:
5ஜி வருகை
பிரீமியம் ஸ்டோரி
5ஜி வருகை

நம் நாடு தனது வளர்ச்சிப் பயணத்தில் இன்னுமொரு மெகா பாய்ச்சலுக்கான அடியை எடுத்து வைத்துள்ளது. அது வேறொன்றும் இல்லை; மொபைல் வாசிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் 5ஜி தொழில்நுட்பம் வரும் அக்டோபரில் பயன் பாட்டுக்கு வந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருக்கிறது.

இந்த நிலையில், 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகியவற்றுடன் அதானி டேட்டா நெட்வொர்க் நிறுவனமும் களம் இறங்கியது. ரூ.1.5 லட்சம் கோடிக்கான அலைக்கற்றைகளை இந்த நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன.

ஏலம் முடிந்த கையுடன் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டன. முதல்கட்டமாக, முக்கியமான நகரங்களில் இந்த 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என்றும், விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டிஜிட்டல் உலகில் 4ஜி தொழில்நுட்பம் நிகழ்த்திய மாற்றங்களால் உலகப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்துமே வெகுவாக மாறிவிட்டதை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்க, இந்த 5ஜி தொழில்நுட்பம் 4ஜி-யைவிட 10 மடங்கு வேகமானது என்றும் 5ஜி தொழில்நுட்பத்தின் வருகையால் தொழில் புரட்சி 4.0 நடக்க உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் 5ஜி வருகையால் எந்தெந்த துறைகள் வளர்ச்சி அடையப் போகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன், இதுவரையில் மொபைல் நெட்வொர்க் கடந்து வந்த பாதையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

5ஜி வருகை... வேகமெடுக்கும் துறைகள்... வாங்க வேண்டிய பங்குகள்!

1ஜி/2ஜி/3ஜி/4ஜி/5ஜி

கடந்த 40 வருடங்களாகவே காற்றில் டேட்டாக்களைப் பகிரக்கூடிய தொழில் நுட்பத்தைப் படிப்படி யாக வளர்த்து வந்திருக் கிறோம். 1979-ல் ஜப்பானில் தொடங் கியது இந்த செல்லுலார் நெட்வொர்க் புரட்சி. முதன்முதலில் அறிமுகப் படுத்தப்பட்ட 1ஜி தொழில்நுட்பத்தில் 2.4 கிலோபைட் டேட்டாவை பரிமாற்றம் செய்ய முடிந்தது.

ஆனால், இது அனலாக் சிஸ்டமாக இயங்கியது. இதற்கு உதாரணம், லேண்ட்லைன் போன். 2ஜி அறிமுகமான பிறகு முழுமையான டிஜிட்டல் சிஸ்டத்துடனான மொபைல் போன் பயன்பாட்டுக்கு வந்தது. 2ஜி தொழில்நுட்பம் ஒரு விநாடிக்கு 64 கிலோபைட். இதில் அனலாக் சிக்னலை ஃப்ரீகுவன்சி பேண்டில் என்கோட் செய்வதற்குப் பதிலாக, பைனரி டேட்டாவாக என்கோட் செய்யப்பட்டது.

2ஜி வந்த பிறகுதான் போனில் பேசுவது மட்டுமல்லாமல், குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் வந்தது. நோக்கியா 1100, 3310 மொபைலைப் பயன்படுத்திய யாரும் அதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதில் 160 கேரக்டர் மட்டுமே அனுமதிக்கப் பட்டிருக்கும். அதற்குமேல் அனுப்பினால், அது இரண்டு குறுஞ் செய்திகளாக மாறி கட்டணம் பிடிக்கப்படும். அதன் பிறகு ஐபோன் வெளியிட்ட மொபைல் மூலம் 2ஜி-யின் வேகம் 200 கிலோபைட் வரை உயர்ந்தது. அது ஜி.பி.ஆர்.எஸ் அல்லது 2.5 ஜி என அழைக்கப்பட்டது.

ஐபோன் 2 அறிமுகப்படுத்தப்பட்டபோது 3ஜி அறிமுகமானது. இதற்கான புதிய அலைவரிசை அலைக்கற்றைகளை ஐரோப்பிய கம்பெனிகள் 100 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கின. அதன் பிறகு தகவல் பரிமாற்றம், தகவல் பதிவேற்றம், தரவிறக்கம் ஆகியவை வேறொரு தளத்துக்குப் பாய்ச்சல் கண்டது. இதை அடுத்து ஹெச்.எஸ்.டி.பி.ஏ (HSDPA) என்ற 3.5ஜி வந்தது.

இதன்மூலம் 42,000 கிலோபைட் டேட்ட்டாவை விநாடிக்கு பரிமாற்றம் செய்ய முடிந்தது. இதற்கடுத்து வந்ததுதான் 4ஜி. அது எல்.டி.இ (Long Time Evelution) என்றும் அழைக்கப்பட்டது.

இது 700 மெகாஹெட்ஸ் பேண்ட் சப்போர்ட் செய்யக் கூடியதாக இருந்தது. இதில் ஓ.எஃப்.டி.எம் (OFDM) தொழில்நுட்பம் மூலம் அதிகமான டேட்டாவை சுருக்கி அனுப்பும் தொழில் நுட்பத்தை செயல்படுத்தியது. 4ஜி-யில் 2000 மெகாபைட் முதல் 1 ஜிகாபைட் வரை விநாடிக்கு பரிமாற்றம் செய்ய முடியும். தற்போது வரப்போகிற 5ஜி தொழில்நுட்பம், 3ஜி-யைவிட 30 மடங்கு வேகமானது; 4ஜியைவிட 10 மடங்கு அதிகமான செயல்திறனுடன் டேட்டா பரிமாற்றம் செய்யப்படும். அதாவது, 5ஜியில் 15 முதல் 20 ஜிகாபைட் வரை விநாடிக்குப் பரிமாற்றம் செய்யப்படும்.

வா.நாகப்பன்
வா.நாகப்பன்

என்ன மாற்றம் விளையும்..?

5ஜி தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்களை அது சமூகத்தில் ஏற்படுத்தும், இதனால் என்னென்ன துறை களின் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்பதை விரிவாக எடுத்துச் சொன்னார் முதலீட்டு நிபுணர் வ.நாகப்பன்.

பத்து வழி நெடுஞ்சாலை...

“5ஜி தொழில்நுட்பத்தின் வருகை இந்தியத் தொழில் துறையின் புதிய புரட்சிக்கு வித்திடப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், 5ஜி தொழில் நுட்பம் நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு பத்து வழி நெடுஞ்சாலை போன்றது. ஒரு நெடுஞ்சாலை போடுவதன் மூலம் எப்படி அனைத்துத் துறைகளும் வளர்ச்சி அடையுமோ, அப்படிதான் 5ஜி தொழில்நுட்பமும்.

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் அதிவேக இணைய தொழில்நுட்பம் என்பது ஒட்டுமொத்த தொழில் துறை யின் அடிப்படைத் தேவை. அந்தத் தேவை வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்று இணையத்தைப் பயன்படுத்தாத துறைகள் ஏதேனும் இருக்கிறதா எனில், இல்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் இணையத்தின் பங்களிப்பு இருக்கவே செய் கிறது. அதுவும் கொரோனா வுக்குப் பிறகு, டிஜிட்டல் மயத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்துக்கு எல்லாத் துறைகளும் மாறிவிட்டன. ஆன்லைன் கல்வி, வீட்டில் இருந்தபடி வேலை, ஓ.டி.டி பிளாட்ஃபார்ம்களின் அசுர வளர்ச்சி எனப் பல மாற்றங் களைப் பட்டியலிடலாம். இவை அனைத்துமே 4ஜி தொழில்நுட்பத்தில் கிடைத்த வேகமான இணைய சேவை யின் மூலம் நிகழ்ந்தவை. அப்படியிருக்க 4ஜி-யைவிட 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட 5ஜி-யின் வருகை என்னென்ன மாற்றங்களை நிகழ்த்தும் என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

5ஜி வருகை... வேகமெடுக்கும் துறைகள்... வாங்க வேண்டிய பங்குகள்!

35 விநாடியில் ஒரு படம்...

உதாரணமாக,ஒரு படத்தை 2ஜி-யில் டவுன்லோட் செய்ய இரண்டு நாள் ஆகும். 3ஜி-யில் டவுன்லோட் செய்ய 20 மணி நேரம் ஆகும் எனில், 4ஜி-யில் 40 நிமிடங்களில் டவுன்லோட் செய்துவிட முடியும். ஆனால், 5ஜியில் 35 விநாடிகளில் டவுன்லோட் ஆகிவிடும்.

இன்டர்நெட் வேகமாக செயல்படும் என்பதுடன் நம்முடைய கமாண்டுகளுக் கான ரெஸ்பான்ஸும் 5ஜி தொழில்நுட்பத்தில் அதிவேக மாக உடனுக்குடன் நடக்கும். அதாவது, 4ஜி-யில் 50 மில்லி விநாடிகளில் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் எனில், 5ஜி-யில் ஒரு மில்லி விநாடிக் குள்ளாகவே ரெஸ்பான்ஸ் இருக்கும். இது 4ஜி-யை விட 400 மடங்கு வேகமாகும். அது மட்டுமல்லாமல், 5ஜி தொழில்நுட்பம் ஒரு மீட்டர் தொலைவில் 4ஜி-யைவிட ஆயிரம் சாதனங்களைக் கூடுதலாக சப்போர்ட் செய்யக்கூடியது.

5ஜி தொழில்நுட்பமானது சாஃப்ட்வேர் டிஃபைன்ட் நெட்வொர்க் ஆகும். இது ஏற்கெனவே உள்ள கேபில்களை மாற்ற வேண்டிய தேவை இல்லை என்கிறார்கள். ஏனெனில், இது கிளவுட் தொழில் நுட்பம் மூலமாக இயங்குவதாகும். கூடுதலாக, 5ஜி-யில் நெட்வொர்க் ஸ்லைசிங் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் கிளவுடில் ஒவ்வொரு சாதனத்துக்குமான தனி வைஃபை நெட்வொர்க் வசதிகளை உருவாக்கும் என்கிறார்கள்.

அனைத்துத் துறைகளின் வளர்ச்சி வேகமெடுக்கும்...

5ஜி வருகையின் மூலம் இன்டர்நெட் மூலம் இயங்கக்கூடிய அத்தனை சாதனங்களும், இயந்திரங் களும் அதிக செயல்திறனுடன் இயங்கும். ரோபோ மட்டுமல்லாமல் தொழில்துறை இயந்திரங்கள், மருத்துவ சாதனங்கள், வேளாண் துறை உபகரணங்கள் என அனைத்தும் இதில் அடங்கும். ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் இன்னும் வேகமாகும். விர்ச்சுவல் ரியாலிட்டி, மெட்டாவெர்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்க, 4ஜி-யின் வருகை முக்கியமான காரணம். 5ஜி வந்த பிறகு நம் கையில் என்னென்ன இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிய வில்லை.

5ஜி வருகையால் நேரடியாக டெலிகாம் துறை, IoT என்கிற ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ துறை, டெலிகாம் துறைக்கான உள்கட்ட மைப்புகளை உருவாக் கும் நிறுவனங்கள், ஓ.டி.டி துறை ஆகியவை பயனடையும். அதே சமயம், மறைமுகமாக உற்பத்தி முதல் சேவை வரை அனைத்துத் துறைகளும் பயன டையும். குறிப்பாக, ஆட்டோமேஷன், ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இவை புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், தொழில்துறையின் போக்கையும் மாற்றும். செல்ஃப் டிரைவிங் கார் பயன்பாடு அதிகரிக்கும். இப்போது ஒரு சில வீடுகளில் மட்டும் இருக்கும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை பரவலாக அனைவரின் வீட்டிலும் பார்க்கலாம்.

டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இது அந்த நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். தவிர, 5ஜி அலைக்கற்றைகள் தனியார் நெட்வொர்க் நிறுவனங் களுக்கும் விற்கப்பட உள்ளன.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைகளை நேரடியாகவே வாங்கி, தங்களுக்குத் தேவையான தொலைத் தொடர்பு சேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போதைய நிலையில், இந்தியாவில் 7% மொபைல் பயனாளர்கள் மட்டுமே 5ஜி இயங்கக்கூடிய மொபைல் வைத்துள்ளனர். 5ஜி வருகைக்குப் பிறகு மொபைல் நிறுவனங் களின் வளர்ச்சியும் வேகமெடுக்கும். உலகிலேயே இந்தியா வில்தான் மொபைல் நெட்வொர்க் கட்டணங்கள் குறைவாக இருக்கிறது. ஏனெனில் இங்குள்ள வாடிக்கையாளர்கள் அப்படி. அந்த வகையில் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 5ஜி கட்டணமும் இருக்கும். 4ஜி விலையை ஜியோவின் வருகை குறைத்ததுபோல, 5ஜி ஆரம்பத்தில் விலை அதிகமாக இருந்தாலும், போகப்போக குறையும் என எதிர்பார்க்கலாம்’’ என்று நீண்ட விளக்கம் தந்து முடித்தார் வா.நாகப்பன்.

ஏ.கே. பிரபாகர்
ஏ.கே. பிரபாகர்

கவனிக்க வேண்டிய பங்குகள்...

இனி, இந்தத் துறைகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன என்பதை விளக்க மாக எடுத்துச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர்.

“5ஜி வருகையால் இணைய சேவை அதிவேகமாக இருக்கும். கமாண்டுகளுக்கான ரெஸ் பான்ஸ் மிகக் குறைவான நேரத் தில் நடக்கும். ரிமோட் எக்ஸிக் யூஷன் அதிக செயல் திறனுடன் இருக்கும். அது மட்டுமன்றி, அதிக எண்ணிக்கையிலான சாதனங்கள் இணைக்கப் படுவதற்கான சாத்தியம் உருவாகும்.

அதிவேகமான தகவல் பரி மாற்றத்தால் பயனாளர்கள் தகவல்களை நுகர்வதற்கான கால அவகாசம் வெகுவாகக் குறையும். இதனால் பலரும் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. எல்லா வேலைகளுமே வேக மாக நடக்கும். அதாவது, ரியல் டைமில் தாமதம் இல்லாமல் கமாண்டுகளுக்கான ரெஸ் பான்ஸ் இருக்கும்.

5ஜி வருகையால் பலன் அடையப்போகும் நிறுவனங் கள், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் இனி உங்களுக்காக...

5ஜி வருகை... வேகமெடுக்கும் துறைகள்... வாங்க வேண்டிய பங்குகள்!

1. பார்தி ஏர்டெல்

5ஜி ஏலத்தில் கணிசமான பங்களிப்பை ஏர்டெல் கொண்டுள்ளது. ரூ.5,500 கோடியை 5ஜி அலைக்கற்றை களுக்கான முன்வைப்பு தொகையாகச் செலுத்தி யுள்ளது. 5ஜி தொழில் நுட்பத்தை சந்தைப் பயன் பாட்டுக்குக் கொண்டு வருவதி லும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 5ஜி வருகையால் ஏர்டெல் நன்றாக பலனடை யும் என்று எதிர்பார்க்கலாம்.

2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் ஜியோ ஏலத்தில் அதிகமான 5ஜி அலைக்கற்றைகளை வாங்கி இருக்கிறது. ரூ.14,000 கோடி முன்வைப்பு தொகையை செலுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் மிகப் பெரிய மொபைல் நெட் வொர்க் ஆபரேட்டராகவும், உலகின் மூன்றாவது பெரிய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராகவும் உள்ளது. இந்த நிறுவனம் 5ஜி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் வாடிக்கையாளர் களுக்கு அதிவேகமான தகவல் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற சேவையை வழங்கும். இதனால் அதன் வணிகம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

3. ஐ.டி.ஐ

அரசு நிறுவனமான ஐ.டி.ஐ டெலிகாம் துறைக்குத் தேவை யான உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. தற்போது இந்தியாவில் தொலைத் தொடர்பு நெட்வொர்க்கில் இந்த நிறுவனம் முக்கியமான பங்களிப்பாளராக உள்ளது.

இந்த நிறுவனம் அதன் பிரத்யேக நெட்வொர்க் சிஸ்டம் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன் பாட்டுக்குக் கொண்டு வருவதிலும், தகவல் தொடர்பு பரிமாற்றம் மற்றும் நெட்வொர்க்குகளை செயல் படுத்துவதிலும் முன்னணி பங்கு வகிக்கும்.

4. தேஜாஸ் நெட்வொர்க்ஸ்

டெலிகாம் துறைக்கான உபகரணங்களை வழங்கும் இந்த நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ‘எண்ட் டு எண்ட்’ ஆப்டிக்கல் டிரான்ஸ்போர்ட் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி யில் உள்ளது. மேலும், இந்தியாவில் 5ஜி தொழில் நுட்பத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதில் இந்த நிறுவனம் தீவிரமாக இயங்கிவருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தின் தரத்தை உறுதி செய்வதிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

5. ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்

இந்த நிறுவனம் டெலிகாம் துறைக்குத் தேவையான கேபிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். குறிப்பாக, 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பங்களுக்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இது விளங்கு கிறது.

6. இண்டஸ் டவர்ஸ்

இந்த நிறுவனம் உலக அளவில் 5ஜி டவர் கம்பெனிகளில் முன்னணி நிறுவனமாக உள்ளது. 5ஜி வருகையால் இந்த நிறுவனம் அதிக பலனை அடைய வாய்ப்புள்ளது.

7. ஹெச்.எஃப்.சி.எல்

டெலிகாம் துறைக்குத் தேவையான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் அடிப்படைத் தொலை பேசி மற்றும் ஐ.எஸ்.பி (ISP) சேவைகளை வழங்கு வதிலும், டெலிகாம் துறைக்கான டர்ன்கீ தீர்வுகளை வழங்குவதிலும் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் 5ஜி வருகையால் பலனடைய வாய்ப்புண்டு.’’

இந்தப் பங்குகளில் முதலீடுகளில் முதலீடு செய்யும் முன், அந்தப் பங்கு நிறுவனத்தை நன்கு அலசி ஆராய்ந்து, அதில் உள்ள ரிஸ்க்கை நன்கு புரிந்து கொண்டு முதலீடு செய்வது அவசியம்!