பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

330 பேசிவ் திட்டங்கள்... இந்தியா நிர்வகிக்கும் ரூ.5 லட்சம் கோடி..!

கோயல் கோஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கோயல் கோஷ்

முதலீடு

இண்டெக்ஸ் முதலீடு என்கிறபோது இந்தியாவில் முதலில் ஒட்டுமொத்த பங்குச் சந்தையை பிரதிபலிக்கும் எஸ்&பி பி.எஸ்.இ ஆல்கேப், எஸ்&பி 500 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மிட்கேப், மிட்கேப் 400 இண்டெக்ஸ்களும் வந்தன. இதைத் தொடர்ந்து தற்போது ஃபேக்டர் பீட்டா, லோ வாலடைலிட்டி, குவாலிட்டி எனப் பல காரணிகள் அடிப்படையில் இண்டெக்ஸ்கள் மற்றும் இ.டி.எஃப்கள் அறிமுகமாகியுள்ளன.

எஸ்&பி டவ் ஜோன்ஸ் குறியீடுகள் ஹெட் (தெற்காசியா) கோயல் கோஷ் கூறும்போது, ‘‘ஆக்டிவ் ஃபண்டுகளைவிட பேசிவ் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டு வரு கின்றன. இந்தியாவில் பேசிவ் முதலீடுகள் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 229 திட்டங்கள் மூலம் 62.8 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.5,02,400 கோடி) மதிப்புள்ள பேசிவ் முதலீடுகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது நாட்டின் மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் 14% ஆகும்.

கோயல் கோஷ்
கோயல் கோஷ்

அண்மைக் காலத்தில் காரணி அடிப்படை யிலான (Factor ETFs) பேசிவ் முதலீடுகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. 2022 மார்ச் 31 நிலவரப்படி, உலக அளவில் ஃபேக்டர் இ.டி.எஃப்கள் மூலம் சுமார் 1.6 லட்சம் கோடி டாலர் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது பத்தாண்டுகளுக்குமுன் 178 பில்லியன் டாலராக இருந்தது. இந்த வகை முதலீடு ஆண்டுக்கு 24.6% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவில் மொமென்டம், குவாலிட்டி, வாலடைலிட்டி ஆகிய ஃபேக்டர் இ.டி.எஃப்கள் பிரபலமாகி வருகின்றன’’ என்றார்.

இந்தியாவில் செயல்படும் 260 பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கடந்த 3, 4 மற்றும் 5 ஆண்டுகளில் வெறும் 42 ஃபண்டு கள்தான் அவற்றின் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் ஆன நிஃப்டி 50-ஐ விட அதிக வருமானம் தந்துள்ளன. இன்டெக்ஸ் ஃபண்டுகள் எப்போதுமே 10 ஆண்டுக் காலத்துக்கு மேற்பட்டவை என்பதை மறக்கக் கூடாது!