Published:Updated:

நீங்கள் வாங்கிய நிறுவனப் பங்குகளை இப்படியெல்லாம் கண்காணித்தது உண்டா?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

நீங்கள் வாங்கிய நிறுவனப் பங்குகளை இப்படியெல்லாம் கண்காணித்தது உண்டா?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் நாம் காணும் அனைத்துப் பங்குகளும் வருடத்தின் எல்லா நாள்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக, லார்ஜ் கேப் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாள் களிலும் வர்த்தகமாகும். அதே வேளையில், ஸ்மால்கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றின் வர்த்தகப் புழக்கம் (Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நா.சரவணகுமார் 
ஆலோசகர் 
www.richinvestingideas.com
நா.சரவணகுமார் ஆலோசகர் www.richinvestingideas.com

நிறுவனர்களின் பங்கு மூலதனம் (Promoter Holding) அதிகமாக இருத்தல், நிறுவன முதலீட் டாளர்கள் (Institutional Investors) அதிக அளவில் வைத்துக்கொள்ளாமல் இருப்பது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே இருப்பது ஆகியவை இதன் வர்த்தகப் புழக்கத் துக்கு சில முக்கியமான காரணங்களாகும். இருப்பினும் ‘மல்ட்டிபேக்கர்’ (Multibagger) என்று சொல்லப்படக்கூடிய மாதிரி, பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லன, இந்த ஸ்மால்கேப் நிறுவன பங்குகள்.

அதிக அளவில் வர்த்தகமாகும் பங்குகள் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாகக்கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் நல்ல வருவாயை அளிக்கும் என்று நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக, யுனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடஃபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளைச் சொல்லலாம். ஒரு நாள் வணிகத்துக்கு (Day Trading) இவை ஏற்றவையாகத் தெரிந்தாலும், முதலீட்டு நோக்கில் செயல்படுபவர்களுக்கு நஷ்டத்தை மட்டும்தான் கொடுத்துள்ளன.

‘‘பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத் தின் தொழிலில் உங்களுக்கான உரிமையைப் பெறுவதாகும். ஒரு தொழிலின் உண்மையான மதிப்பு என்பது அதன் பங்கு விலையைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை’’ என மதிப்பு முதலீட்டின் தந்தை என அழைக்கப் படும் பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்ட காலத்தில் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கிவிட்டால் மட்டும் போதாது. அதை நமது சொந்தத் தொழிலைப் போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

நீங்கள் வாங்கிய நிறுவனப் பங்குகளை இப்படியெல்லாம் கண்காணித்தது உண்டா?

காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக் கூட்டமும்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை (Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப் பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்பு களை நாம் இதுபோன்ற கூட்டங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும் லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படியுள்ளது, இதர வருமானம் (Other Income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எப்படி இருக்கிறது, நிறுவனர்களின் பங்கு அடமானம், டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்துத் தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்றுவிடலாம்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கை கள் BSE மற்றும் NSE-யின் இணையதளங்களில் எப்போதும் கிடைக்கும். அதைச் சரியான காலத்தில் வாசிப்பது முதலீட் டாளர்களின் கடமை. தவிர, நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும் (Annual General Meeting - AGM) நடக்கும். இணையவழியிலும் மற்றும் நேரடியாகச் சென்றும் இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் கலந்துகொண்டு, நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

பங்குச் சந்தையிலும் வாக்களிப்பது உங்கள் கடமை...

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத் துக்கும், தொழில் கொள்கைகளைத் தீர்மானிக்கவும் தேவையான வாக்களிக்கும் உரிமையானது நமக்குப் பங்குச் சந்தையில் உண்டு. இன்றைக்கு, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், அந்நிய நிதி நிறுவனங்களும்தான் குறிப்பிடத்தக்க அளவில் பங்குகளை வைத்துள்ளன. இதற்கு அடுத்தாற்போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கைதான்.

இயக்குநர் குழு மற்றும் நிறுவனப் பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றுக்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்துக்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

டாடா குழுமத்தில் மிஸ்திரி குடும்பப் பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கியின் பங்குகள் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறும் (Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு எனப் பல்வேறு செயல்பாடுகள் என எந்த விஷயமாக இருந்தாலும் சிறு முதலீட்டாளர்கள் உட்பட எல்லோரும் அளிக்கும் வாக்கின் அடிப்படையிலேயே முடிவாகும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணையவழி யிலான (E-Voting) வாக்களிக்கும் வசதியும் நடைமுறையில் உண்டு.

உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருள்கள் மற்றும் சேவைகள்

நமது வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைகள் எஃப்.எம்.சி.ஜி பொருள்களை விற்கும் கடைகளாகதான் இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரை, எஃப்.எம்.சி.ஜி துறையில் காணப் படும் பிரபலமான பொருள்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத் தின் பொருள்களாகதான் இருக்கும். உதாரணமாக, இந்துஸ் தான் யுனிலீவர், ஐ.டி.சி, டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள்தான்.

நமது நகரில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களைத் தெரிந்துகொள்ள லாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருள்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்

பங்குச் சந்தையில் பட்டிய லிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளைச் சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருள்கள், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணுப் பொருள்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம், காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக, பாதகங்கள் உங்களுக்குப் பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்த நிலைக் காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப் படக்கூடும், அரசுக் கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா என்பதை அலசி ஆராயலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சகஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறைசார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன்வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால், அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல் (Facebook Events), வலைப்பக்க நிரல்கள் (Webinars) நாள்தோறும் நடை பெறுகின்றன. இவற்றில் கலந்துகொண்டு பங்கு சார்ந்த தொழில் தெளிவை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதே வேளையில், நாம் அதிகார பூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவனத்தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களைப் பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலை தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் எனப் பங்குகளை வாங்கி, பின்னர் நஷ்டமடைவதைத் தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்குப் பின்னால் நகர்வதைவிட, நாமே நமது தொழிலுக்கான (பங்கு முதலீடு) அக்கறை கொண்டிருப்பது நலம்.

பங்குகளைக் கண்காணிக்க நேரமில்லை எனச் சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்கத் தயாராக உள்ளார். அவற்றில் நீண்ட காலத்தில் முதலீடு செய்துவிட்டு செல்வம் ஈட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல (செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும்போது நீங்கள் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களைக் கவனித்துக்கொள்ளும்!

நிறுவனங்களை நேரடியாகக் காணுங்கள்!

ஒரு நிறுவனப் பங்கை நாம் இணையம் வழி யாக வாங்கிவிட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்துவிடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள். உண்மையில் எந்தத் தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச் சந்தையில் பட்டிய லிடப்படும் ஷெல் நிறுவனங்களும் (Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றைக் காரணத்துக்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் அவசியம்.