Election bannerElection banner
Published:Updated:

Zomato IPO: ₹8,250 கோடி இலக்கு... பங்குச்சந்தை மூலம் நிதி திரட்டும் ஸொமேட்டோ!

ஸொமேட்டோ
ஸொமேட்டோ

கடந்த 2020-ம் ஆண்டில் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில், ஸொமேட்டோ நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு 1,093.63 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஆன்லைன் உணவு வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஸொமேட்டோவும் ஒன்று. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ 2020-ம் ஆண்டில் வரும் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. நடப்பு 2021-ம் ஆண்டில் இந்நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிட முடிவு செய்திருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.8,250 கோடி நிதியை முதலீட்டாளர் களிடமிருந்து திரட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிடம் கடந்த வாரம் புதன்கிழமை விண்ணப்பித்திருக்கிறது.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில், புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.7,500 கோடியும், ஏற்கெனவே இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் பங்குகளை சலுகை விலையில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.750 கோடியும் திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிசெய்வதற்காக, இந்த ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதியை இந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் நஷ்ட கணக்கை பதிவு செய்து வருகிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, கடந்த 2020-21-ம் நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 682.20 கோடி ரூபாயை நஷ்டமாகப் பதிவு செய்துள்ளது. கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாகத்தான் ஸொமேட்டோ நிறுவனத்தின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய 2018-ம் ஆண்டில் ரூ.106.91 கோடியும் , 2019-ல் ரூ.1,010 கோடியும், 2020-ல் ரூ.2,385 கோடியையும் நஷ்டமாகப் பதிவு செய்துள்ளது.

IPO
IPO
அதிக லாபம் கொடுக்குமா PowerGrid InvIT IPO... முதலீடு செய்யும் முன்பு இதெல்லாம் கவனிங்க!

கடந்த 2020-ம் ஆண்டில் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில், இந்நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.1,093.63 கோடியாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.2,684.91 கோடியாக இருந்தது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ.2,981 கோடியாக மீண்டும் அதிகரித்தது. இது கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.

பங்கு விலை, மற்றும் எப்போது வெளியிடப்படும் என்கிற விவரங்கள் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு