Published:Updated:

சந்தையைப் பாதிக்கும் காரணிகள்... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் சரியான உத்திகள்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

சந்தையைப் பாதிக்கும் காரணிகள்... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் சரியான உத்திகள்!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ஜார்ஜ் ஹெப்பர் ஜோசப், முதன்மைச் செயல் அதிகாரி, முதன்மை முதலீட்டு அதிகாரி, ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியப் பங்குச் சந்தை சுமார் இரண்டு வருடங்களாக ஏற்றத்தில் இருந்தது. உலக அளவிலான மத்திய வங்கிகளால் உருவாக்கப்பட்ட அதிக பணப் புழக்கத்தால் கண்ட ஏற்றம்தான் இதற்கு முக்கியமான காரணம் ஆகும். தற்போதைய சூழ்நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பொருளாதார விஷயங்கள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம்.

ஜார்ஜ் ஹெப்பர் ஜோசப் 
முதன்மைச் செயல் அதிகாரி, 
முதன்மை முதலீட்டு அதிகாரி, 
ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்
ஜார்ஜ் ஹெப்பர் ஜோசப் முதன்மைச் செயல் அதிகாரி, முதன்மை முதலீட்டு அதிகாரி, ஐ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்

1. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது, எனவே, உலக அளவில் வட்டி விகிதம் விரைவில் உயரக்கூடும்.

2. பணவீக்க விகித அதிகரிப்பால் நாடுகளின் மத்திய வங்கிகள் பணப் புழக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

3. ரஷ்யா-உக்ரைன் போர் சூழலால் சர்வதேச அளவில் நிச்சயமற்றத்தன்மை அதிகரித்து வருகிறது.

4. கச்சா எண்ணெய் விலை மற்றும் பிற எரிபொருள் களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

5. கோவிட் 19 தொற்றுநோய் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருள்கள் விநியோகச் சங்கிலி இடையூறு இன்னும் முழுமையாகச் சீராகாமல் இருக்கிறது.

மேற்கூறிய ஐந்து விஷயங்களும் உலக அளவிலான பங்குச் சந்தைகள் மற்றும் பங்குகளின் மதிப்பீடுகளுக்கு நல்ல செய்தி அல்ல. வட்டி விகிதம் அதிகரிக்கும்போது, நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும். அப்போது, பங்குச் சந்தை மதிப்பீடு குறையும்.

சந்தையைப் பாதிக்கும் காரணிகள்... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் சரியான உத்திகள்!

பங்குச் சந்தை வருமான எதிர்பார்ப்பு...

2022-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து என்ன வருமானம் எதிர்பார்க்கலாம்?

சென்செக்ஸ், நிஃப்டி இண்டெக்ஸ் போன்ற பரந்த அடிப்படையிலான பங்குச் சந்தை குறியீடுகள் நடப்பு 2022-ம் ஆண்டில் சுமார் 15% வளர்ச்சியைக் காணும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பிட்டோம்.

கடந்த ஓராண்டில் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மிக அதிகமாக நடந்தது. இந்த ஐ.பி.ஓ மோகத்தால் அதிகமான முதலீட்டாளர்கள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தனர். அவர்கள் நிறுவனங்களின் அடிப்படைகளை எல்லாம் பார்க்காமல், மற்றவர்கள் பரிந்துரை செய்த பங்குகளில் முதலீடு செய்தனர். அந்த நிறுவனப் பங்குகளில் பெரும்பாலானவை தற்போது நஷ்டத்தில் இருக்கின்றன. மேலும், 2022-ல் எதிர்பார்க்கப்பட்ட எல்.ஐ.சி ஐ.பி.ஓ இன்னும் சந்தைக்கு வரவில்லை. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டிருப்பதால், எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீடு வருவது காலம் தள்ளிக்கொண்டே போகிறது.

இந்தியாவில் மட்டுமன்றி, உலக அளவில்கூட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சில்லறை விற்பனை நடந்துள்ளது. நாட்டில் தொழில் விரிவாக்கம் அதிகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த 2022–ம் ஆண்டில் இது உள்கட்டமைப்பு தொடர்பான துறைகளில் அதிகமாக நடக்கும். வங்கித் துறையிலும் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரியல் எஸ்டேட், கமாடிட்டிகள், கட்டுமானம், பொறியியல், தொழில்துறை தயாரிப்புகள் மற்றும் மின் பயன்பாட்டு நிறுவனங்கள் போன்ற சுழற்சி சார்ந்த துறைகளில் வளர்ச்சிக் கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தத் துறைகள் அனைத்தும் புத்துயிர் பெற ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், பெரிய வங்கிகளின் வாராக்கடன் சிக்கல்கள் இருப்பதாகத் தெரி கிறது. வங்கித் துறை மற்றும் இன்ஃப்ரா சார்ந்த நிறுவனங்கள் அடுத்த 3 - 5 ஆண்டுகளில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய சாத்தியம் உள்ளது.

பொறியியல் மற்றும் மூலதனப் பொருள்கள், வாகனத் தயாரிப்பு ஆகிய துறைகள் பல ஆண்டு களாக சரியாகச் செயல்படாமல் இருக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் முடிந்து கச்சா எண்ணெய் விலை குறையும்பட்சத்தில், இந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படக்கூடும்.

சந்தையைப் பாதிக்கும் காரணிகள்... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் சரியான உத்திகள்!

வங்கிப் பங்குகள் முதலீட்டில் மாற்றம்...

குறுகிய காலத்தில் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கரெக்‌ஷன்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு, உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பிறகு, வங்கிப் பங்குகள் முதலீட்டு அணுகு முறையில் மாற்றம் செய்ய விரும்புகிறோம்.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் வங்கிப் பங்குகளின் முதலீட்டை லார்ஜ்கேப் வங்கிப் பங்குகளுக்கு மாற்றுவது நல்லது. நுகர் பொருள்கள் பங்குகளில் இருந்து பொறியியல் மற்றும் மூலதனப் பொருள்கள் நிறுவனப் பங்கு களுக்கு எங்கள் முதலீட்டை மாற்றி இருக்கிறோம்.

பொறியியல், மூலதனப் பொருள்கள் துறை நிறுவனங் களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் நன்றாக வந்திருக்கின்றன. ஃபின்டெக்குகள், பங்குத் தரகு நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்கள்) ஆகியவை பாதுகாப்பானவையாகக் கருதப்படுபவை. ஆனால், அவை தற்போதைய நிலையில் ரிஸ்க்கானவையாக மாறியிருக்கின்றன.

பங்கு, பத்திர முதலீட்டுத் தத்துவம்...

மத்திய பட்ஜெட் 2022 அறிவிப்புகளால் உள்கட்ட மைப்பு சார்ந்த பொறியியல், மூலதனப் பொருள்கள், தொழில் உற்பத்தி, ரியல் எஸ்டேட், கட்டுமானம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக பலன் அடையக்கூடும். பல நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, நிறுவனப் பங்குகளின் மார்ஜின் ஆஃப் சேஃப்டி, வணிகத்தின் தரம் மற்றும் குறைவான கடன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். கடன் சந்தை சார்ந்த திட்டங்களைப் பொறுத்தவரை, தரக் குறியீடு, வணிகத்தின் தரம், பணமாக்குதல் (Liquidity) ஆகியவை முக்கித்துவம் பெறுகிறது. இதன் அடிப்படையில்தான் ஈக்விட்டி ஃபண்டுகள் மற்றும் கடன் ஃபண்டுகளுக்கான பங்குகள் மற்றும் பத்திரங்களைத் தேர்வு செய்கிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அணுகும் முறை..!

இப்போதைய சூழலில், மல்ட்டிகேப், வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் (இ.எல்.எஸ்.எஸ்), பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், வேல்யூ ஃபண்ட் வகைகளில் மொத்த முதலீடுகளை மேற்கொள்ளலாம். மேலும், கடந்த 18 மாதங்களாக சரியாகச் செயல்படாத பார்மா, ஹெல்த்கேர், பேங்கிங் & ஃபைனான்ஷியல் சர்வீசஸ், இன்ஃப்ரா துறை சார்ந்த ஃபண்டுகள் நீண்ட காலத்துக்கு அதாவது, ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு முதலீடு செய்ய ஏற்றவை. இந்த ஃபண்டு களிலும் இப்போது மொத்த முதலீட்டை மேற்கொள்ளலாம். மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மற்றும் சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (STP) முறையில் முதலீட்டை மேற்கொண்டு வருவது லாபகரமாக இருக்கும்.

கடன் ஃபண்டுகள்

கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள் பிரிவில் நடுத்தரக் காலம் முதல் நீண்ட காலம் வரைக்கும் டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த ஃபண்ட் பிரிவு பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தர வாய்ப்பிருக்கிறது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் கண்டு கலங்குபவராக இருந்தால், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டை முதலீட்டுக் குக் கவனிக்கலாம். இந்த ஃபண்டில் பங்குச் சந்தையின் போக்குக்கேற்ப நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டு விகிதம் தினசரி மாற்றி அமைக்கப்படும். சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் காலத்தில் நல்ல வருமானம் பெற கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட் உதவும்.

இந்தியப் பங்குச் சந்தை அடுத்த 3 - 4 மாத காலத்துக்கு ஏற்ற இறக்கத் துடன் காணப்படும். எனவே, சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி மற்றும் எஸ்.டி.பி முறைகளில் முதலீட்டை மேற்கொள்வது நல்லது!