Published:Updated:

LIC IPO: 20% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி; அரசின் இந்த முடிவு சரியா?

எல்.ஐ.சி

எல்.ஐ.சி. சட்டம் 1956-ன்படி, எல்.ஐ.சி. நிறுவனத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை. எல்.ஐ.சி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள்கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

LIC IPO: 20% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி; அரசின் இந்த முடிவு சரியா?

எல்.ஐ.சி. சட்டம் 1956-ன்படி, எல்.ஐ.சி. நிறுவனத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை. எல்.ஐ.சி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள்கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

Published:Updated:
எல்.ஐ.சி

எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் எல்.ஐ.சி பங்குகளை 20% வரை வாங்க அந்நிய முதலீட்டாளர்களுக்கு (FDI) மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதிருக்கும் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, இன்ஷூரன்ஸ் துறையில் ரிசர்வ் வங்கி, அரசு ஆகியவற்றின் முன் அனுமதி பெறாமலேயே, ஆட்டோமேட்டிக் வழியில் 74% வரை, அந்நிய முதலீட்டை மேற்கொள்ளலாம்.

IPO
IPO

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இந்த விதி எல்.ஐ.சி.க்குப் பொருந்தாது. ஏனெனில் எல்.ஐ.சி.க்கு என தனியான சட்டம் உள்ளது. எல்.ஐ.சி. சட்டம் 1956-ன்படி, எல்.ஐ.சி. நிறுவனத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை. எல்.ஐ.சி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால், கொள்கையளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. எல்.ஐ.சி-யில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்வதற்கான சட்ட திட்ட மாற்றங்களை ஒரு சில மாதங்களாக அரசு மேற்கொண்டு வந்தது.

அந்த மாற்றங்களின் அடிப்படையில், தற்போது, அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், முன் அனுமதி பெறாமல் 20% வரை எல்.ஐ.சி. மற்றும் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமாக எல்.ஐ.சி நிறுவனம் விளங்குகிறது. இதன் நிகர சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எல்.ஐ.சி பங்குகளில் 5% பங்குகளை விற்பனை செய்து ரூ.78,000 கோடி நிதி திட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் டி.ஆர்.ஹெ.பி ஆவணங்களை எல்.ஐ.சி தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில்தான் எல்.ஐ.சி., நிறுவனத்தில், 20% வரை அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள, பிரதமரின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசிய போது, ``எல்.ஐ.சி ஐ.பி.ஓ-வில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்
விகடன்

ஏற்கெனவே எஃப்.டி.ஐ முதலீட்டை 5-10% வரை வழங்கலாம் என்று சொல்லி வந்த நிலையில், 20% வரை அனுமதி வழங்கியிருப்பதை கூடுதலாக தெரிகிறதே என்று பலர் நினைக்கலாம். ஏனெனில் அவர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் எல்.ஐ.சி பங்குகளை அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

அதனால் இந்த ஒதுக்கீடு நியாயமானதுதான். மேலும், எல்.ஐ.சி சட்டத்தின்படி இதுவரை எஃப்.டி.ஐ முதலீடுகள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்.ஐ.சி நிறுவனம் போன்று இன்னும் பல பொதுத்துறை நிறுவனங்களில் எஃப்.டி.ஐ முதலீட்டை இன்னும் மத்திய அரசாங்கம் அனுமதி கொடுக்காமல்தான் வைத்திருக்கிறது.

ஆனால், இந்த ஒதுக்கீட்டை உதாரணமாக காட்டி, அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இனி எஃப்.டி.ஐ முதலீட்டுக்காக அனுமதி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது" என்றார்.

எல்.ஐ.சி நிறுவனம் ஐ.பி.ஒ வரும்போது அந்நிய முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள். அதே போல, உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் வாங்க முன்வருவார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism