Published:Updated:

பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க ‘கேப் டிரேடிங்’ உத்திகள்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க ‘கேப் டிரேடிங்’ உத்திகள்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் இடைவெளி வர்த்தகம் என்கிற ‘கேப் டிரேடிங்’ (Gap trading) என்பது பங்குகளை எப்போது வாங்குவது, விற்பது என்பதற்கான எளிய முறையாக இருக்கிறது. டெக்னிக்கல் அனாலிசிஸ் ஆய்வு கோணத்தில், ‘இடைவெளி’ (Gap) என்பது என்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரமேஷ் கோவிந்தராஜன் 
ஈக்விட்டி அனலிஸ்ட், 
https://www.wayofmarket.com/
ரமேஷ் கோவிந்தராஜன் ஈக்விட்டி அனலிஸ்ட், https://www.wayofmarket.com/

இடைவெளி...

ஒரு பங்கின் முந்தைய தினத்தின் முடிவு விலைக்கும் இன்றைய விலைக்கும் வித்தியாசம் இருப்பதை ஒரு பங்கு வர்த்தகர் அல்லது பங்கு முதலீட்டாளர் காணலாம். பொதுவாக, ‘இடைவெளி’ என்பது, இரு அடுத்தடுத்த நாள்களில் பங்கின் முடிவு மற்றும் ஆரம்ப விலைகளுக்கு இடைப்பட்ட வித்தியாசம்தான்.

பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் கூர்ந்து கவனித்து வந்தால், முதல் ஒரு மணி நேர வர்த்தகத்தை வைத்து அந்தப் பங்கின் விலை போக்கை அறிந்துகொள்ள முடியும். அதாவது, முதல் ஒரு மணி நேரத்தில் பங்கின் விலை, எந்த அளவுக்கு ஏறி இறங்குகிறது என்பதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை விலைப்பட்டை (Range) என்கிறார்கள்.

‘இடைவெளி’ காட்டும் சிக்னல்...

இந்த விலைப்பட்டைக்கு மேலே பங்கின் விலை அதிகரித்தால், அது வாங்குவதற்கான அறிகுறி (Signal) என்று அர்த்தம். இதற்கு மாறாக, விலைப்பட்டைக்குக் கீழே பங்கின் விலை குறைந்தால், அது விற்பதற்கான அறிகுறி என எடுத்துக்கொள்ளலாம்.

விலை ‘இடைவெளி’ இருக்கும் பங்குகளில் வெற்றிகரமாக வர்த்தகம் செய்ய, ஒருவர் ஒழுங்குமுறையான நுழைவு மற்றும் வெளியேறும் விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். இந்த ‘சிக்னல் டிரேட்’ மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். மேலும், இடைவெளி வர்த்தக உத்திகளை வாரம், வர்த்தகத்தின் முடிவு அல்லது வர்த்தகத்தின் இடையில் (Intraday) பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாம்.

நீண்ட கால முதலீட்டாளர்கள், ‘இடை வெளி’களின் விலை வித்தியாசத்தை அறிந்து செயல்படுவது அவசியம். ஷார்ட் சிக்னல்களை (Short Signal) விற்கும் குறியீடாகப் பயன்படுத்தி கைவசம் இருக்கும் பங்குகளை விற்கலாம்.

பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க ‘கேப் டிரேடிங்’ உத்திகள்..!

பங்கின் விலைப் போக்கு...

பங்கின் விலை அதிக ‘இடைவெளி’யுடன் ஆரம்பித்தால் (Gapup opening), வர்த்தகம் செய்வதைத் தவிர்த்து வேடிக்கை பார்ப்பது நல்லது. அப்போது போக்கு (Trend) எப்படி உருவாகிறது என்று பொறுமையாகக் கவனித்து வாருங்கள்.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை முந்தைய நாள் வர்த்தக முடிவில் ரூ.100 என முடிந்துள்ளது. அன்றைய தினத்தில் அதிகபட்ச விலை 115-ஆக உள்ளது. அடுத்த நாள் காலையில், அந்த நிறுவனத்துக்கு எதிர்பாராத விதமாக ரூ.10,000 கோடிக்கு ஒரு புதிய ஆர்டர் கிடைத்த செய்தி வெளியாகிறது என வைத்துக்கொள்வோம். அன்று காலையில் சந்தையில் அந்தப் பங்கின் விலை எப்படி ஆரம்பித்து, நாள் முழுக்க வர்த்தகமாகி முடிவடைகிறது என்பதை வைத்துதான் அந்தப் பங்கின் சார்ட்டில் ‘இடைவெளி’ இருக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.

நேற்றைக்கு 100 ரூபாய்க்கு முடிவடைந்த பங்கு இன்றைக்கு 115 ரூபாய்க்கு வர்த்தகத்தை ஆரம்பித்தால், அதை அதிக ‘இடைவெளி’ என்று நினைக்கக் கூடாது. நாள் முழுக்க அது 115 ரூபாய்க்கு மேலேயே வர்த்தகமாகி முடிந்தால் மட்டுமே (சார்ட்டில்) ‘இடைவெளி’ வரும்.

அது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம். இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் மாலை வரை நடந்த வெவ்வேறு விலை நிலவரம், கால வரிசைப்படி கீழே தரப்பட்டிருக்கிறது.

120, 122, 123, 121, 108, 119, 118, 125, 126, 124 என இந்த விலை நிலவரத்தை சார்ட்டில் வரைந்து பார்த்தால், தொடக்க விலை 120 ரூபாய், அதிகபட்ச விலை 126 ரூபாய், குறைந்தபட்ச விலை 108 ரூபாய், முடிவு விலை 124 ரூபாய் என இருக்கும்.

நேற்றைய விலைகளான 100 (ஆரம்பம்), 115 (அதிகபட்சம்), 99 (குறைந்தபட்சம்), 100 (முடிவு) உடன் இன்றைய விலைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய அதிகபட்ச விலை யான 115-ஐ தாண்டி இன்றைய ஆரம்பம் 120 ரூபாயில் இருந்தது. இன்றைக்கு அதிகபட்ச விலை யாக 126 ரூபாய் இருக்கிறது. இது நேற்றைய அதிகபட்ச விலையான 115 ரூபாயைவிட அதிகம். இன்றைய முடிவு விலையான 124 ரூபாய், இது நேற்றைய அதிகபட்ச விலையான 115-ஐ விட அதிகமாக இருக்கிறது.

இப்படி அதிக ‘இடைவெளி’ உருவாகும்போது, சந்தையில் தவறான நோக்கில் (ஏறும்போது ஷார்ட்டில் இருப்பவர்கள் மற்றும் இறங்கும்போது லாங்கில் இருப்பவர்கள்) பொசிஷன் வைத்திருப்பவர்கள் நஷ்டம் வரும் என்று நினைத்து, கிடைத்த விலைக்கு பொசிஷன் களை விற்றுவிட்டு வெளியேறி விடுவார்கள். அதுபோல், அவர்கள் செய்வதால், நிலைமை மிகவும் மோசமாகும்.

சார்ட் வரைந்து, அதைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்ய பழகிக்கொண்டிருப்பவர்கள் இதுபோன்ற ‘இடைவெளி’ வரும்போது நிதானமாக இயங்குவது ஒன்றே அதிக இழப்பைத் தவிர்க்கும் வழி ஆகும்.

பங்குச் சந்தையில் வாங்கு பவர்களுக்கும் விற்பவர் களுக்கும் நடுவே திடீரென பெரிய வேறுபாடு ஏற்படும் போதுதான் விலை ‘இடை வெளி’கள் உருவாகின்றன.

பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க ‘கேப் டிரேடிங்’ உத்திகள்..!
பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க ‘கேப் டிரேடிங்’ உத்திகள்..!

சந்தையில் இது போன்ற அதிக ‘இடைவெளி’ தகவல் களால் உருவாகின்றன. இந்த ‘இடைவெளி’கள் என்பது நல்ல மற்றும் கெட்ட தகவல்களால் வரும். இதுபோன்ற தகவல்கள் வர்த்தக நேரத்தில் வெளி யானால் உருவாகும் ‘இடை வெளி’கள் தினசரி வர்த்தக சார்ட்டில் (5 அல்லது 10 அல்லது 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் போன்ற சார்ட்டுகள்) தெரியும்.

சந்தை முன்தினம் முடிந்து, மறுநாள் ஆரம்பிக்கும்முன் வெளியாகிற தகவலால் வரும் ‘இடைவெளி’களை நாள் சார்ட்டில் தெரிந்துகொள்ளலாம்.

‘இடைவெளி’கள் உருவாகும் போது அவை எந்த மாதிரி யானவை என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றுக்கு ஏற்றபடி வர்த்தகர்கள் செயல்படுவது அவசியம். ‘இடைவெளி’கள் சந்தையில் உள்ள பெரும் பாலான வர்த்தகர்கள் எந்த திசையில் (ஏற்றம்/இறக்கம்) இயங்குகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக அமையும். சில ‘இடைவெளி’கள் பொருள் நிறைந்தவையாகவும், சில பொருளே இல்லாத பொய்யானவையாகவும் இருக்க வாய்ப்பிருக்கின்றன. சந்தையில் நிலவும் சூழல், தகவல்கள் போன்றவற்றை உள்ளடக்கியது தான் இந்த ‘இடைவெளி’கள்.

நாள் வர்த்தகத்தில் வர்த்தகத் தின் இடையே (இன்ட்ரா -டே) சார்ட்டில் உருவாகிற ‘இடை வெளி’யால், அந்த நாளில் ஏற்படும் விலை மாற்றங்கள் கட்டுக்கு மீறியவையாகவும், தினசரி சார்ட்டில் வரும் இடை வெளியால், எதிர்வரும் சில நாள்களில் நடக்கும் விலை மாற்றங்கள் கட்டுக்கு மீறியவை யாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

பொதுவாக, ‘இடைவெளி’ ஒன்று உருவாகி அதனால் வேகமாக சந்தை ஏறினால் அல்லது இறங்கினால் மீண்டும் இறங்கி அல்லது ஏற்றம்கண்டு, அந்த ‘இடைவெளி’யை அடைத்த பின்புதான் மேலே அல்லது கீழே செல்லும் என்பது ஒரு விதிமுறை.

மேலும், ‘இடைவெளி’கள் மிக அதிகமாக உருவானால், அதன் போக்குக்கு ஏற்ப விலை புதிய உச்சமோ, புதிய குறைந்தபட்ச விலையோ வரக்கூடும்.

எந்த வகையான ‘இடைவெளி’கள் எளிதாகவும் உடனடி யாகவும் அடைக்கப்படும், எவை அடைப்பதற்கு அதிக நாள்கள் ஆகும் என்பதை சார்ட்டின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

வெகு சீக்கிரமாகவே ‘இடைவெளி’ அடைக்கப்பட்டுவிடுவது சாதாரணமான ‘இடைவெளி’கள் எனப்படும். இவை போக்கே இல்லாமல் சந்தை ஒரே நிலையில் பல தினங்கள் இருக்கும்போது உருவாவதைக் காண முடியும். இந்த சூழ்நிலையில் வரும் இந்த வகை ‘இடைவெளி’களால் பங்குச் சந்தையின் போக்கில் அல்லது பங்கின் விலையில் அதிக மாற்றத்தை எதிர்பார்க்க இயலாது.

ஏறும் விலை போக்கால் இந்த வகை ‘இடைவெளி’கள் வந்தால் விலையில் புதிய உச்சம் அல்லது இறங்கும் விலை போக்கால் இந்த வகை ‘இடைவெளி’கள் வந்தால் விலையில் புதிய குறைந்தபட்ச விலை வர வாய்ப்பு மிக குறைவாக இருக்கும்.

இதுபோன்ற ‘இடைவெளி’கள் வரும்போது சந்தையில் நடைபெறும் வர்த்தக அளவில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.