Published:Updated:

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தின் மதிப்பை உயர்த்தும் முறையாகும். பணத்தின் மதிப்பு உயர்வதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆம், ஒரு விதை செடியாகி, மரமாகி அறுவடைக்காக வளர காலமே முக்கிய தேவையாக இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு
பங்குச் சந்தை முதலீடு ( vikatan )

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவரிக்கிறார், பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய புதிதாக நுழையும் ஒவ்வொருவரும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டுமென்ற உறுதிமொழியுடன்தான் வருகிறார்கள். எனினும், காலப்போக்கில் அவர்களின் முதலீட்டுக் காலம் குறித்த எண்ணம் மங்கத் தொடங்கி, இறுதியில் அந்த உறுதிமொழி மறந்தே போகிறது. முதலீட்டு உலகில் இந்தப் பிரச்னை மிகவும் பொதுவானது. இதற்கு தர்க்கரீதியாகவும் மாறுபட்டதாகவும் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். எனினும், நடைமுறைக்குச் சாத்தியமான, செயல்படுத்தக்கூடியவற்றை முயன்று பார்க்கலாம்.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
vikatan

முதலீடு

முதலீடு என்பது, ஓரிடத்தில் தேங்கியிருக்கும் நிதியைச் செயல்பட வைப்பதாகும். சொத்து வாங்குவது அல்லது வட்டி வருமானம் பெறுவது என்பதுபோல, எங்கே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன் மதிப்பு அதிகரிக்கச் செய்யப்படுகிறதோ அதுவே முதலீடு ஆகும். பின்வரும் வரிகள் முதலீடு என்பதைத் தெளிவுபடுத்தும்.

  1. நிதியை வருமானம் ஈட்டுவதுபோல் செயல்பட வைப்பது.

  2. நீண்டகாலத்துக்கு நிதியைப் பயன்படுத்துவது.

  3. நிதிக்கு அதிக மதிப்பைச் சம்பாதிப்பது.

இதை நாம் புரிந்துகொண்டால், நமது முரண்பாடுகளை ஒவ்வொரு நாளும் புரிந்துகொள்வோம். முதலீட்டின்மூலம் பணத்தின் மதிப்பை உயர்த்துவதற்கு காலம் கொடுக்க வேண்டும். ஒரு விதை செடியாகி, மரமாகி அறுவடைக்காக வளர காலமே முக்கிய தேவையாக இருக்கிறது. விவசாயத்தில், குறுகிய காலமாக காய்கறிகளை விளைவிக்க குறைந்தது 25 - 30 நாள்களாவது காத்திருக்க வேண்டும். அதேநேரத்தில், அதிக பலன்களைத் தரும் பெரிய மரங்கள் விளைச்சல் தர நீண்ட காலமாகும். இதே அளவுகோலை நமது முதலீட்டில் பார்க்கும்போது, பங்குகளில் செய்யப்படும் முதலீட்டில் நல்ல வருமானம் கிடைப்பதற்கு முதலீட்டுக்காலம் அவசியம். இதில், பங்குச் சந்தையில் வர்த்தக நாளின் இடையே நடத்தப்படும் வர்த்தகம், முதலீட்டு வகையில் வராது.

பங்குச்சந்தை முதலீடு
பங்குச்சந்தை முதலீடு
vikatan

முதலீட்டில் முதலில் எழும் கேள்வி: எந்தப் பங்கில், எவ்வளவு காலம் முதலீடு செய்வது?

அந்தக் கேள்வியைச் சற்று மாற்றி, நான் முதலீடு செய்யாவிட்டால் என்னவாகும் என்று கேட்கலாம். நாம் உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பானதே பணத்தை முதலீடு செய்வதும். நம் உடலை நன்கு பராமரிப்பதற்கு உடற்பயிற்சி அவசியம். அதேபோல நிதியை நன்முறையில் பராமரிக்க, முதலீடு அவசியம். அனைத்தையும்போல, காலங்கள் செல்லச்செல்ல பணத்தின் மதிப்பும் குறைகிறது. முதலீடு செய்யத்தவறினால், பணவீக்கம் நமது பணத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். முதலீட்டின் முதன்மையான காரணம், பணவீக்கத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதாகும். முதலீடானது, பணத்தின் மதிப்பை அப்படியே காப்பாற்றுவதோடு அதிலிருந்து கூடுதல் வருமானத்தையும் தரும். காலம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது. இது பணத்தின் மதிப்பைக் குறைக்கவும் செய்யும், அதிகரிக்கவும் செய்யும் என்பதே இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும்.

ஒரு குறிப்பிட்ட பங்கில் நாம் முதலீடு செய்யும் காலம், அந்தப் பங்கானது, நமது பணத்தைத் திடமாகப் பராமரிக்கும் திறனைப் பொறுத்ததே. நன்முறையில் பராமரிக்க முடியாமல் போகும்போது முதலீட்டிலிருந்து நாம் வெளியேறிவிடலாம். எனவே, முதலீட்டுக்காலம் என்பது சில நாள்கள், சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகளெனக் கால அளவீடு வேறுபடக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் செயல்பாடுகளைச் சிறிய அளவிலாவது சோதித்துப் பார்ப்பது கட்டாயமாகும்.

பங்குச்சந்தை முதலீடு
பங்குச்சந்தை முதலீடு
vikatan
GDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா? #SmartInvestorIn100Days நாள்-49

முதலீட்டுக்கான பங்கை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இது இரண்டாவதாக எழும் கேள்வியாகும். பெரும்பாலும் நமது முதலீட்டுச் சூழலுக்கேற்றபடி, தனிப்பட்ட விருப்பத்தின்படி தேர்வு செய்கிறோம். இப்படிச் செய்வதால், எந்த நிறுவனப் பங்குக்கு முன்னுரிமை கொடுப்பதென்று எழக்கூடிய சவாலை எதிர்கொண்டு, சரியான பங்கில் முதலீடு செய்வதற்கு உதவும்.

இது, விதையைப் பாவுவதற்கு முன்பாக மண் பரிசோதனை செய்வதைப் போன்றதாகும். அந்த இடத்தில் எது வளருமோ அதைத்தவிர வேறு செடி/மரம் வளராது. அதுபோலதான் பங்குகளும். நிறுவனப் பங்குகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதும் மண் பரிசோதனை போன்றதே. அதைச் செய்யாமல் முதலீடு செய்வதில் இறங்கக் கூடாது. ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும் மண் பரிசோதனை செய்வது, மண்ணின் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். அதேபோல ஒவ்வொரு காலாண்டிலும் பங்குகளின் திறன் மதிப்பீடு செய்வது, முதலீட்டு முடிவுகளை நாம் எடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

பங்குச்சந்தை முதலீடு
பங்குச்சந்தை முதலீடு
vikatan
பங்குச்சந்தை அநியாயங்கள்... உஷார்! #SmartInvestorIn100Days நாள்-14

முதலீட்டுக்கான சாராம்சம்

உங்களுக்கான பங்குகளைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து, அதிலிருந்து வருமானம் ஈட்டுங்கள். அந்தப் பங்கு நன்கு செயல்படும்வரை முதலீட்டைத் தொடருங்கள். இதைப் புரிந்துகொள்ள, சில நிறுவனப் பங்குகளில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் முயற்சி செய்யலாம்.

தமிழில்: தெ.சு.கவுதமன்