Published:Updated:

எல்.ஐ.சி பங்கு... இனி என்ன ஆகும்?

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்.ஐ.சி பங்கு... இனி என்ன ஆகும்?

எல்.ஐ.சி

Published:Updated:
எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

பிப்ரவரி 2020-ல் தொடங்கிய எல்.ஐ.சி பங்கு வெளியீட்டு விவகாரம் இரண்டு வருடங் களுக்குப் பிறகு, ஒருவழியாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு, கடந்த மே 2-ம் தேதி பங்கு விற்பனை தொடங்கியது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொதுப் பங்கு வெளி யிட்ட எல்.ஐ.சி-க்கு முதலீட் டாளர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். பட்டியல் ஆனதும் நல்ல ஏற்றத்துடன் வர்த்தகமாகும், நல்ல லாபம் பார்க்கலாம் என்று முதலீட் டாளர்கள் எண்ணியிருந்த நிலையில் மே 17-ம் தேதி பட்டியல் ஆன எல்.ஐ.சி பங்கு வெளியீட்டு விலையைவிட 8% தள்ளுபடி விலையில் பட்டியலாகி பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது.

எல்.ஐ.சி நிறுவனப் பங்கு விலை ரூ.902 - 949 என நிர்ணயம் செய்யப் பட்டபோதிலும், பட்டியலிட்ட முதல் நாளன்றே ஒரு பங்கு ரூ.872-க்கு விற்பனைக்கு வந்தது. எல்.ஐ.சி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்தது.

எனினும், பின்னர் பங்கு விலை சற்று உயர்ந்து, ரூ.918.95-க்கு வர்த்தகமானது. இறுதியில், ரூ.875.45-ல் நிறைவடைந்தது.

தொடர்ந்து சந்தையின் போக்கு இறக்கத்தில் இருப்பதால், எல்.ஐ.சி பங்கின் விலையும் அடுத்தடுத்த வர்த்தக தினங்களில் குறைந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், எல்.ஐ.சி பங்கின் வர்த்தகம் இனி எப்படி இருக்கும், இதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

 வ.நாகப்பன்
வ.நாகப்பன்

“பொதுவாகவே, ஐ.பி.ஓ சந்தையில் முதலீடு செய்கிறவர்கள் பட்டியலானதும் நல்ல லாபம் கிடைக்கும், விற்றுவிடலாம் என்று நினைத்துதான் முதலீடு செய்கிறார்கள். இது சரியான போக்கல்ல. ஐ.பி.ஓ வெளியாகிற எல்லா பங்குகளும் பட்டியல் ஆனதும் நல்ல ஏற்றத்தை மட்டுமே கொண்டிருக் காது. பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்கும் ஆசை இருப்பது தவறில்லை. ஆனால், அதன் அடிப்படைகளைக் கொஞ்சமேனும் புரிந்துகொள்ள வேண்டும்.

பங்கு வெளியீடுகளுக்கு முன் அவற்றின் மதிப்பை ஆய்வு செய்து, பின்னரே விலையை நிர்ணயிக்கிறார்கள். அது பட்டியல் ஆகும்போது சந்தையின் போக்குக்கேற்ப விலை நகர்வுகள் இருக்கும். சில பங்குகள் ஏற்றம் காணும்; சில பங்குகள் இறக்கம் காணும். வரலாற்றில் இதுவரை ஐ.பி.ஓ வெளியாகி பட்டியலான பங்குகளை எடுத்துப் பார்த்தால், எல்லாப் பங்குகளும் பட்டியலான பிறகு சிறப்பான லாபத்தையே கொடுத்திருக்கிறது என்று சொல்ல முடியாது. 90-களில் பங்குகள் அவற்றின் முகமதிப்புகளுக்கு அருகில் விற்கப்பட்டன. ஆனால், பட்டியல் ஆன பிறகு, அவை விலை ஏற்றம் கண்டன.

ஆனால், இப்போது பங்கு விலை மதிப்பீடுகளின் முறைகள் மாறிவிட்டன. உடனே, செபி என்ன செய்கிறது, பட்டியல் ஆகும்போது விலை குறைகிறது, இதையெல்லாம் கண்காணிப்பதில்லையா என்று கேட்கிறார்கள்.

அதே சமயம், சமீப காலங்களில் வெளியான பெரும் பான்மை ஐ.பி.ஓ வெளியீடுகள் புதிய பங்கு வெளியீடுகள் அல்ல. ஆஃபர் ஃபார் சேல் என்று சொல்லப்படுகிற வகை யிலான பங்கு விற்பனைதான். எனவே, இவற்றின் விலை நிர்ணயத்தை கேள்விக்குட்படுத்த முடியாது.

எல்.ஐ.சி பங்கு... இனி என்ன ஆகும்?

முதலீட்டாளர்கள்தான் பங்கு களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். பேடிஎம் விஷயத்தில் முதலீட் டாளர்கள் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது. லாபம் பார்க்க ஆசைப்பட்டு ஐ.பி.ஓ வெளியீடுகளில் பங்குகளை வாங்கி, பட்டியலான பிறகு, நஷ்டத்துக்குள்ளாக வேண்டி யிருக்கிறது.

ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்பவர் கள் ஏற்றம், இறக்கம் இரண்டை யும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்க வேண்டும். பட்டியலாகும் போது ஏற்றம் கண்டால், அந்தப் பங்கு எப்போதும் லாபம் தரும் என்று எந்த உறுதியும் இல்லை. அதே போல், பட்டியல் ஆகும் போது இறக்கம் கண்டால், அது மோசமான பங்கு என்றும் அர்த்தம் இல்லை. சந்தையின் சூழல், செய்திகள் போன்றவை குறுகிய காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், பங்குகளின் விலை நகர்வு அவற்றின் ஃபண்ட மென்டல் காரணிகளைப் பொறுத்துதான் இருக்கும்.

எல்.ஐ.சி விஷயத்தில் அரசு வசம் இருந்த பங்குகள்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தப் பங்கு விற்பனையில் வெளியிடப்பட்ட பங்குகள் மூலமாகத் திரட்டப்படும் நிதி நிறுவனத்துக்குச் செல்லாது. அரசுக்குதான் செல்லும்.

இதுவரை எல்.ஐ.சி தொடர் பான விவரங்கள் பொதுவெளியில் கிடைக்காது. இப்போது சந்தையில் பட்டியல் ஆனதால், இனி நிறுவனத்தின் நிதி நிலை, நிர்வாக முடிவுகள் அனைத்தும் பங்குதாரர் களுக்குத் தெரியவரும். பங்கு தாரர்கள் கூட்டத்தில் நிறுவனத் திடம் கேள்விகள் முன்வைக்கப் படும், விவாதங்கள் நடக்கும். எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சி இனி எப்படி இருக்கும் என்பதும் தெரியும். அதன் அடிப்படையில் தான் பங்கின் செயல்பாடும் இருக்கும். நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இருந்தால் பங்கின் விலையும் ஏற்றம் அடையும். எல்.ஐ.சி காப்பீட்டுத் துறையில் பெருமளவு சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருந்தாலும் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி தரும் போட்டியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எப்படி தொடர்ந்து லாப வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போகிறது என்பதைத்தான் முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும்” என்றார்.

நிபுணர்கள் கூறுவதிலிருந்து ஒரு பங்கின் போக்கை ஐ.பி.ஓ வெளியீட்டு விலையோ, பட்டியல் ஆகும் விலையோ தீர்மானிப்பதில்லை. அதன் ஃபண்டமென்டல் காரணி களும், நீடித்த நிலையான வளர்ச்சியும்தான் தீர்மானிக் கிறது என்பது உறுதியாகிறது. எனவே, எல்.ஐ.சி பங்கில் முதலீடு செய்தவர்கள் ஏற்ற இறக்கங்களால் பதற்றத்துக் குள்ளாகாமல் நீண்டகாலத்துக்குப் பங்குகளை வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜி.சொக்கலிங்கம்
ஜி.சொக்கலிங்கம்

நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும்!

பங்குச் சந்தை நிபுணர் ‘ஈக்கனாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கத்திடம் எல்.ஐ.சி பங்கு குறித்து கேட்டோம். “ஐ.பி.ஓ வெளியீட்டில் எல்.ஐ.சி 22.13 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்தப் பங்கு வெளியீட்டில் நிறுவன முதலீட்டாளர்கள் தவிர்த்து, 73 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்தன. அவர்களில் 10.85 லட்சம் முதலீட்டாளர்கள் முதல்முறை முதலீட்டாளர்கள். அவர்களில் 7 லட்சம் பேருக்கு பங்குகள் ஒதுக்கீடு கிடைத்தன. எல்.ஐ.சி-யில் அந்நிய முதலீடு மிகக் குறைவு. பெரும்பான்மை முதலீடுகள் உள்நாட்டிலிருந்தே செய்யப்பட்டுள்ளன. பட்டியலில் விலை இறங்கினாலும், 5-வது பெரிய நிறுவனமாக உள்ளது.

எல்.ஐ.சி பங்கு சந்தையில் பட்டியலாகும்போதே தள்ளுபடியில் வர்த்தகமானது என்பது முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் அனைவருக்குமே அதிர்ச்சிதான். சந்தையின் போக்கு நிலையற்றதாக இருப்பதால், நிபுணர்கள் எல்.ஐ.சி பங்கு பட்டியல் ஆகும்போது வெளியீட்டு விலையைவிடக் குறைந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது என்பதைக் கணித்திருந்தோம். ஆனால், இந்தச் சமயத்தில் முதலீட்டாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். காப்பீட்டுத் துறையில் எல்.ஐ.சி-யின் ஃபண்டமென்டல் அம்சங்கள் வலுவாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், எல்.ஐ.சி சிறந்த பங்காகவே இருக்கிறது. மேலும், இதன் எம்பெட்டட் மதிப்பும் கவர்ச்சிகரமானதாகவே இருக்கிறது.

பங்குச் சந்தையின் போக்கு சீராகும்போது எல்.ஐ.சி பங்கும் ஏற்றம் காணும். குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ஏற்றத்தின் போக்குக்கு மீண்டுவர 3 - 6 மாதங்கள் வரை ஆகலாம். அதே சமயம், தொடர்ந்து அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதத்தை உயர்த்தினால், அது பங்குச் சந்தைக்கு எதிராகவும் மாறலாம். அப்போது எல்.ஐ.சி பங்கின் மீட்சியானது தாமதமாகலாம். ஆனாலும் நீண்ட காலத்தில் எல்.ஐ.சி நிச்சயம் நல்ல லாபம் தரக்கூடிய பங்காக விளங்கும். எல்.ஐ.சி பங்கு நீண்ட காலத்துக்கானது என்பதைப் புரிந்து, நீண்டகால அடிப்படையில் இந்தப் பங்குகளை வைத்திருக்கலாம்’’ என்றார்.