Published:Updated:

ஏற்ற இறக்க சந்தை... போர்ட்ஃபோலியோவை மாற்றுவது எப்படி..?

போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
போர்ட்ஃபோலியோ

போர்ட்ஃபோலியோ

ஏற்ற இறக்க சந்தை... போர்ட்ஃபோலியோவை மாற்றுவது எப்படி..?

போர்ட்ஃபோலியோ

Published:Updated:
போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
போர்ட்ஃபோலியோ

அருண் குமார், ஹெட் - ரிசர்ச், ஃபண்ட்ஸ் இந்தியா

அண்மைக் காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் குறுகிய கால ஏற்றத் தாழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. எனவே, இந்த சந்தை சுழற்சிகளைப் புரிந்துகொள் வதும், அவற்றுக்குத் தயாராவதும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும்போது அதிர்ச்சி அடையாமல் இருப்பதும் முக்கியம்.

நல்ல மற்றும் கெட்ட சந்தை நிலைகளை (Good and bad market phases) சமாளிக்க மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங் களைப் பார்ப்போம்.

அருண் குமார் 
ஹெட் - ரிசர்ச், ஃபண்ட்ஸ் இந்தியா
அருண் குமார் ஹெட் - ரிசர்ச், ஃபண்ட்ஸ் இந்தியா

சரியான எதிர்ப்பார்ப்பை நிர்ணயம் செய்யுங்கள்...

பொதுவாக, பங்குச் சந்தையில் ஒவ்வோர் ஆண்டும் 10% - 20% தற்காலிக இறக்கங்களை எதிர்பார்க்கலாம். ஒருவரின் முதலீட்டுக் கலவையில் (Portfolio) பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு 80% எனவும், மீதி 20% கடன் சந்தை சார்ந்தது எனவும் கொள்வோம்.

உங்கள் போர்ட்ஃபோலியோவின் மதிப்பு இந்த வரைமுறைக்கு உட்பட்டு இருக்கும் வரை நீங்கள் ஏற்ற இறக்கங்களை சரியான கண்ணோட்டத்தில் கையாள முடிவதுடன், அது தொடர்பான எந்த அதிர்ச்சியையும் அடையமாட்டீர்கள். எனவே, சந்தை சரிவு களைப் பொறுத்துக்கொள்கிற மாதிரி உங்கள் அஸெட் அலொகேஷன் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

செயலுக்கான திட்டம் என்ன..?

கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தைகள் கணிசமான வருமானத்தைத் தந்திருப்பதால், உங்களின் அஸெட் அலொகேஷன் அளவு 5 சதவிகிதத்துக்கும் அதிகமாக பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் இருக்கலாம். அப்படி இருந்தால், உங்கள் சொத்து ஒதுக்கீட்டின்படி, ஈக்விட்டி முதலீட்டை விற்று சமநிலைப் படுத்துவது அவசியம்.

ஏற்ற இறக்க சந்தை... போர்ட்ஃபோலியோவை மாற்றுவது எப்படி..?

வெவ்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப திட்டங்களை உருவாக்குங்கள்...

அடுத்த ஓராண்டில் பங்குச் சந்தைகள் ஏறக்குறைய 0 - 20% வரை ஏற்றம் கண்டால், வருமானம் பாசிட்டிவ்வாக இருக்கும். இந்த நிலையில், உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைக்கும் எந்த நடவடிக்கையையும் நீங்கள் எடுக்கத் தேவையில்லை. நீங்கள் ஏற்கெனவே உங்கள் அஸெட் அலொகேஷனை எப்படி அமைத்திருக்கிறீர்களோ, அதை அப்படியே தொடரலாம்.

அடுத்த ஓராண்டில் பங்குச் சந்தைகள் 0 - 20% வரை சரிவதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சமயத்தில், நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடாது. காரணம், பங்குச் சந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 0 - 20% வரை இறக்கம் காண்பது இயல்பான செயல்தான்.

ஆனால், பங்குச் சந்தை 20% வரை குறையும்போது அது ஒரு கரடி சந்தை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது மாதிரியான சமயங்களில் இன்னும் அதிகமாக முதலீடு செய்வதற்கு அருமையான வாய்ப்பு என்பதை உணருங்கள். சந்தை ஒவ்வொரு முறையும் 10% வீழ்ச்சி அடையும் போது, கடன் சார்ந்த முதலீடுகளில் இருக்கும் உங்கள் முதலீடு களை விற்று, அதை பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதன்மூலம் நமது அஸெட் அலொகேஷனை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வர முடியும்.

அடுத்த ஓராண்டில் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்று 20 சத விகிதத்துக்கு மேல் உயர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் ஏற்கெனவே திட்டமிட்டதைவிட உங்கள் அஸெட் அலொகேஷனின் மதிப்பு அதிகமாகவே இருக்கும். பங்கு சார்ந்த முதலீட்டிலிருந்து சிறிது முதலீட்டை எடுத்து, அதை மீண்டும் கடன் சார்ந்த முதலீடு களுக்குக் கொண்டு வந்து சமன் படுத்த இது நல்ல நேரமாக இருக்கும்.

குறுகிய காலத்தில் பங்குச் சந்தைகளின் போக்கைத் தொடர்ந்து கணிக்க முயற்சி செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். எனவே, அந்த வேலையைத் திரும்பத் திரும்ப செய்தால், உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். எனவே, நீண்ட கால நோக்கில் உங்கள் எதிர்பார்ப்புகளை சரியாக அமைத்துக்கொள்ளுங்கள்.

இந்த வழியில், உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் அமைத்துக்கொள்ளும்பட்சத்தில், உங்கள் போர்ட் ஃபோலியோவானது நல்ல மற்றும் கெட்ட நிலைகளில் சந்தை செல்லும்போது, அதிலிருந்து பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல், மீண்டு வர மிகவும் உதவி செய்வதாக இருக்கும். இதனால், நீங்கள் நல்ல லாபம் அடைய முடிவதுடன், கவலை இல்லாமல் இருக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism