Published:Updated:

பங்கு முதலீடு.... 5 விஷயங்களைப் புரிந்து செய்தால் எல்லோருக்கும் லாபம் நிச்சயம்!

பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

முதலீடு

பங்கு முதலீடு.... 5 விஷயங்களைப் புரிந்து செய்தால் எல்லோருக்கும் லாபம் நிச்சயம்!

முதலீடு

Published:Updated:
பங்கு முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
பங்கு முதலீடு

பங்குச் சந்தை முதலீடு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் ஈட்ட ஒருவர் கீழ்க்கண்ட 5 முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தினால் போதும்.

கா.ராமலிங்கம், 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம், இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

1. மெதுவான, நிலையான மற்றும் சலிப்பான முதலீட்டுப் பந்தயம்...

தொலைக்காட்சி ஊடகங்களில் வெளி யாகும் நிறுவனப் பங்குகள் பற்றிய தகவல் களைக் கண்டு பீதி அடையாமல் நிதானமாக இருப்பது நல்லது. நீங்கள் ஏற்கெனவே நன்கு அலசி ஆராய்ந்து முதலீடு செய்திருக்கும்பட்சத் தில் இதுபோன்ற விஷயங்கள் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. பங்கு முதலீடு என்பது நீண்ட காலத்துக்கானது. அதன் மூலமாக மெதுவாக, நிலையானதாக லாபம் அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

முதலீட்டாளரான நீங்கள், ஷேர் டிரேடர் களுக்காக வழங்கப்படும் ஆலோசனைகள், டிப்ஸ்களைக் கண்டு கலங்கத் தேவையில்லை. நீங்கள் பங்குச் சந்தையின் நேரம் பார்த்து முதலீடு செய்வதைவிட சந்தையில் நீண்ட காலமாக இருப்பதுமூலம்தான் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். இந்த முதலீட்டுப் பயணம் சலிப்பானதாக இருக்கும். பங்கு வர்த்தகம் என்பது த்ரில்லாக இருக்கும். ஆனால், அது தொடர்ந்து லாபம் ஈட்டி தருமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.

நல்ல நிதி ஆலோசகர்களைக் கண்டறிவது மூலம் முதலீட்டுக்கேற்ற நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான ஆலோசனைகளை பெற உதவும். இவை அனைத்தும் மிகவும் சலிப்பாகவும் நேரத்தை எடுத்துக்கொள்வ தாகவும் தோன்றலாம். பங்குச் சந்தையும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் எப்போதும் பொறுமைசாலிகளுக்குதான் ஆதாயத்தை அள்ளித் தந்திருக்கிறது.

2. பங்குச் சந்தை ஆரூடங்களுக்கு எந்த முக்கியத் துவமும் கொடுக்க வேண்டாம்...

பங்குச் சந்தைகள் குறித்த ஆரூடங்கள் (Forecasts) மற்றும் கணிப்புகள் நல்ல பொழுதுபோக்கு மதிப்பைப் பெற்றுள்ளன. ஆனால், அவை எந்த முதலீட்டு மதிப்பையும் கொண்டிருக்கவில்லை. நீண்ட கால முதலீட்டாளர்கள் நல்ல நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்தால் போதும். பங்குச் சந்தை பற்றிய முன்னறிவிப்புகள், கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் சந்தை எந்தத் திசையில் செல்கிறது என்பதை மட்டுமே உங்களுக்குக் காண்பிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது சிறந்தது. இந்தக் கணிப்பு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே. அது உண்மையாக மாற வேண்டிய அவசியமில்லை.

ஏற்ற இறக்கங்கள் பங்குச் சந்தைகளின் இயல்பான ஒன்றாகும். சந்தையின் ஏற்ற இறக்கத்தால் நிறுவனப் பங்கு களின் விலை மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு மாற்றத்துக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாகும். இது குறித்து நீண்ட கால முதலீட்டாளர்கள் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. பங்கு விலை மாற்றம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி மாற்றம் குறித்து அடிக்கடி கவனிக்கத் தேவை யில்லை.

நாட்டின் தேர்தல் முடிவுகள், பொருளாதாரத்தின் வளர்ச்சி திசை, வட்டி விகித மாற்றங்கள் மற்றும் உலக நிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணி களால் பங்குச் சந்தை பாதிக்கப் படுவதால், துல்லியமான சந்தை கணிப்புகளை உருவாக்குவது மிகவும் கடினமானது. இந்த ஏற்ற இறக்கங்கள், பங்குகளின் விலை, மியூச்சுவல் ஃபண்டு களின் என்.ஏ.வி மதிப்புடன் இணைந்து செயல்படுகின்றன.

பங்கு முதலீடு.... 5 விஷயங்களைப் புரிந்து செய்தால் எல்லோருக்கும் லாபம் நிச்சயம்!

3. சொந்தமாகப் பகுப்பாய்வு செய்து பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்யுங்கள்...

பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் தொடர் பான மற்றவர்களின் பகுப் பாய்வின்மீது நீங்கள் முழு நம்பிக்கை வைப்பது விரும்பத் தக்கதல்ல. உங்களிடம் கட்டணம் எதுவும் வாங்காத அல்லது உங்களின் முதலீட்டு இழப்புக்குக் கொஞ்சமும் பொறுப்பு ஏற்காத எந்தவொரு புத்திசாலி மனிதனும் தனது பங்குச் சந்தையை வெல்லும் உத்தியைப் பற்றி எப்போதும் உங்களுக்குச் சொல்லித் தர மாட்டார்.

உங்கள் நிதி இலக்குகளை மனதில் வைத்துக்கொண்டு சொந்தப் பகுப்பாய்வின்மூலம் பங்குச் சந்தை முதலீட்டுக் கலவை (Portfolio), மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை உருவாக்குவது அவசியமாகும். உங்களின் நிதி ஆலோசகர், உங்களுக்கு பங்குகள் மற்றும் ஃபண்டு களைப் பரிந்துரை செய் தாலும் நீங்களும் ஒரு முறை அவற்றை அலசி ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பது நல்லதாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல் திறனை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மேலும், நீங்கள் தேர்வு செய்திருக்கும் பங்கை சார்ந்திரும் நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் எனில், மட்டுமே அந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும்.

ஈக்விட்டி ஃபண்டைப் பொறுத்தவரை, அதில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணம் எந்தெந்த நிறுவனப் பங்கு களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன, அந்தப் பங்குகள் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் செயல்பாடு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் கவனித்து முதலீடு செய்வது நீண்ட காலத்தில் நல்ல லாபம் பெற உதவும்.

4. குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட முடியும் என நினைக்க வேண்டாம்...

நீண்ட கால முதலீட்டாள ரான நீங்கள் குறுகிய கால பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் ஊக வணிகத்தின் மூலம் லாபம் ஈட்டுவது பற்றி ஒருபோதும் சிந்திக்கக்கூடாது.

குறுகிய காலத்தில் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் ஒரு சில நேரங் களில் உங்களுக்கு லாபத்தைத் தரக்கூடும், ஆனால், எப்போதும் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தராது.

பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் நீண்ட காலத்தில் வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்க, தொடர்ந்து லாபம் ஈட்டக்கூடிய ஓர் உத்தி நமக்குத் தேவை. அந்த உத்தி நல்ல நிறுவனப் பங்கை தேர்ந் தெடுத்து முதலீடு செய்துவிட்டு, அதைப் பல ஆண்டு களுக்குத் தொடர்ந்து வைத்திருப்பதாகும். பங்கு முதலீடு ஒரு பொழுதுபோக்கோ, வேடிக்கையோ இல்லை. பங்கு முதலீட்டில் குறுகிய காலத்தில் சம்பாதிப்பதற்காக கடன் வாங்குவது கூடாது.

பங்கு முதலீடு.... 5 விஷயங்களைப் புரிந்து செய்தால் எல்லோருக்கும் லாபம் நிச்சயம்!

5. சந்தையை வெல்லும் உத்தி...

பங்குச் சந்தையை வெல்லும் உத்தியை வகுக்கும் அளவுக்கு மேதையாக யாராவது இருந்தால், அதை யாருடனும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவர் முட்டாளாக இருப்பார் என்று நினைக்க வேண்டாம். பங்குகளை டிப்ஸ்காகத் (Stock tips) கொடுத்தால், அதை அலசி ஆராய்ந்து செயல்படுவது நல்லது.

ஆனால். ஒருவரால் வழங்கப்பட்ட ஊக டிப்ஸானது சரியாக இருக்காது என்பதால், அவற்றைச் செயல் படுத்துவது மிகவும் ரிஸ்க்கானது. கூடுதலாக, ஒவ்வொருவருக்கும் முதலீடு பற்றிய ஒவ்வொரு கருத்து உள்ளது. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் சந்தையின் போக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒவ்வொரு ஷேர் டிப்ஸையும் யோசித்து, அது உங்களின் நீண்ட கால முதலீட்டுக்கு லாபகரமாக இருக்குமா என்பதைப் பகுப்பாய்வு செய்ய நீங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று, உங்களுக்குப் பெரும் லாபம் கிடைக்கும் என்கிற மோகத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அதிக ரிஸ்க்குக்கு உட்படுத்துவது நல்லதல்ல.

நிறைவாக, பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடிக்கடி வர்த்தகம் செய்வதிலிருந்து விலகி இருங்கள். எப்போதும் நீண்ட கால முதலீட்டின் அடிப்படையில் சிந்தியுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism