Published:Updated:

பங்குச் சந்தை முதலீடு... செய்யக்கூடாத 12 தவறுகள்..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தை முதலீடு... செய்யக்கூடாத 12 தவறுகள்..!

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், பங்குச் சந்தை முதலீடு எளிதானது. ஆனால், நம்மவர்களுக்கு அது பற்றிய போதிய அறிவு மற்றும் அனுபவம் இல்லாத தாலும், அளவுக்கு அதிகமான பணத்தைக் குறுகிய காலத்தில் சம்பாதித்து விட வேண்டும் என்கிற பேராசையில் அதைச் சிக்கல் மிகுந்த தாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டில் செய்யக்கூடாத முக்கிய மான 12 தவறுகள் பற்றி இனி பார்ப்போம்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார் 
ஈக்விட்டி  அனலிஸ்ட், 
Rkgcapitalgains.com
ஜி.எஸ்.ராஜேஷ் குமார் ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

1. ஊக வணிகம் கூடவே கூடாது...

ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்வது அந்த நிறுவனத்தின் வணிகத்தில், வளர்ச்சியில் பங்கேற்பதாகும். அது தெரியாமல் பலரும் யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஒரு நிறுவனம் பற்றி எதுவும் தெரியாமல் ஊக வணிகம் அல்லது சூதாட்ட நோக்கில் பங்கு களை வாங்கி நஷ்டப்படுகிறார்கள். முறையாக அலசி ஆராய்ந்து அந்தக் குறிப்பிட்ட நிறுவனத் தின் லாப, நஷ்ட விவரங்கள் மற்றும் எதிர் கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து தெளிவான முடிவுக்கு வந்தபிறகு தான் பங்கு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். பங்குச் சந்தை முதலீட்டு குருவான வாரன் பஃபெட், தனக்கு நன்கு தெரிந்த நிறுவனப் பங்குகளில் தான் முதலீடு செய்வார். எத்தனை கோடி கிடைக்கும் என்றாலும் தனக்குத் தெரியாத பங்குகளில் எப்போதும் பணம் போடமாட்டார்.

2. விஷயம் தெரியாமல் பணம் போடுவது...

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன் பங்குச் சந்தை எப்படிச் செயல்படுகிறது, ஒரு நிறுவனப் பங்கின் விலை எப்போது ஏறும், எப்போது இறங்கும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்யக் கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் அதிக இழப்பில் கொண்டுபோய் விட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு தொடர்பான நூல் களைப் படிப்பது, யூடியூப் பார்ப்பது போன்ற வற்றின் மூலம் அடிப்படை விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். எடுத்த உடனேயே பணத்தை நேரடியாகப் போட்டு முதலீடு செய்வதற்கு பயந்தவர்கள் கொஞ்ச காலத்துக் குக் காகிதம் அல்லது எக்ஸல் ஷீட்டில் எழுதி வைத்து வாங்கி, விற்பதுபோல் செயல்படலாம். ஓரளவுக்கு அனுபவம் கிடைத்தவுடன் நேரடியாக முதலீட்டில் இறங்கலாம். அல்லது பங்குத் தரகர் ஒருவரின் உதவியுடன் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

பங்குச் சந்தை முதலீடு... 
செய்யக்கூடாத 12 தவறுகள்..!

3. எடுத்த உடனேயே மொத்த முதலீடு கூடாது

சிலர் பங்குச் சந்தையில் எடுத்த உடனேயே பெரிய தொகையை மொத்தமாக முதலீடு செய்துவிடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது முதலீடு செய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் எண்ணம், சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும்; மொத்தமாக முதலீடு செய்தால் லாபத்தை அள்ளிவிடலாம் என்பதாக இருக்கிறது. ஆனால், உண்மை அப்படி அல்ல. சந்தை எப்போதும் ஏறுமுகத்தில் இருக்காது. பங்குச் சந்தையின் ஏற்றம் மற்றும் இறக்கத்துக்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. கோவிட் 19, உக்ரைன் - ரஷ்யா போர் போன்ற சூழ்நிலையில் சந்தை இறக்க ஆரம்பித்து விட்டால், குறுகிய கால முதலீட்டாளர் எனில், இழப்பு அதிகமாக இருக்கும். நீண்ட கால முதலீட்டாளர் எனில், பங்கு விலை மிகவும் குறைந்திருக்கும் நிலையில் கூடுதலாக முதலீடு செய்ய பணம் இருக்காது. எனவே, எப்போதும் முதலீட்டுத் தொகையை 5 அல்லது 6 ஆகப் பிரித்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடைவெளியில் பங்குகளின் விலை இறக்கத்தில் முதலீடு செய்துவந்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும். மேலும், ஒருவருக்கு பங்குச் சந்தை முதலீடு பரிச்சயமாகும் வரைக்கும் சிறிய தொகையை முதலீடு செய்துவருவது லாபகரமாக இருக்கும்.

4. குறுகிய காலத் தேவைக்கான பணத்தை முதலீடு செய்யக் கூடாது...

பலரும் பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் போன்ற தேவை களுக்கு வைத்திருக்கும் பணத்தை யாரோ அதிக லாபம் கிடைக்கும் என்று சொன்னதை நம்பி பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிடுகிறார்கள். பங்குச் சந்தை திடீரென சரிவை சந்தித்தால், போட்ட பணத்தை இழந்து கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பங்குச் சந்தை முதலீட்டின்மூலம் நீண்ட காலத்தில் 10, 15, 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 12 - 15% வருமானம் ஈட்ட முடியும் என்றாலும், குறுகிய காலத்தில் அது மிக அதிக ரிஸ்க் கொண்டதாகும். பங்குச் சந்தை முதலீட்டில் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும், பங்குச் சந்தை நீண்ட காலத்துக்கு இறக்கத்திலேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது குறுகிய காலத் தேவைக்கான பணத்தை அதில் முதலீடு செய்து, அதிக இழப்பில் இருந்தால் சிக்கல்தான். எனவே, பங்குச் சந்தையில் குறுகிய காலத் தில் உடனடியாகத் தேவைப் படாத உபரிப் பணத்தைதான் முதலீடு செய்ய வேண்டும்.

5. நிதி இலக்கு இல்லாமல் முதலீடு செய்வது கூடாது...

பங்குச் சந்தை முதலீட்டில் பலர் இலக்கு எதுவும் இல்லாமல் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களின் எண்ணம் பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் ஈட்டு வதாக இருக்கிறது. மேலும், அந்த லாபம் எவ்வளவு சதவிகிதம், முதலீட்டுக் காலம் எவ்வளவு, எந்தத் தேவைக்காக இந்த முதலீடு என்கிற திட்டம் எதுவும் இல்லாமல் இருக்கிறது. இதனால், பங்குச் சந்தை சிறிது ஏறினால், அல்லது சிறிது இறங்கினால் பணத்தை வெளியில் எடுப்பது என்பது சர்வசாதாரணமாக நடக்கிறது.

இப்படிச் செய்யும்போது, பங்கு முதலீட்டின் மூலம் ஒருவர் செல்வம் சேர்ப்பது இயலாத காரியமாகும். இதற்குப் பதில் 15, 20 ஆண்டுகள் கழித்து பிள்ளை களின் உயர்கல்வி அல்லது கல்யாணத்துக்கு ரூ.25 லட்சம் தேவை என்கிற இலக்குடன் முதலீடு செய்யும்பட்சத்தில் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பார்க்க முடியும். பங்கு முதலீடு, ஓர் இலக்குடன் இணைக்கப் பட்டிருக்கும்பட்சத்தில் அதிலிருந்து அவ்வளவு சீக்கிர மாக ஒருவர் வெளியேற வாய்ப்பில்லை.

6. பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்காமல் இருப்பது...

பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த அல்லது யாரோ சொன் னார்கள் என்பதற்காக ஓரிரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், இந்தப் பங்குகள் பெரும்பாலும் லாபம் தருவதாக இருப்பதில்லை. ஒரு பங்கு முதலீட்டுக் கலவையில் 2- 3 பங்குகளை வைத்திருப்பதால், பெரிதாக லாபம் பார்க்க முடியாது. குறைந்தது 5, 6 துறைகளைச் சேர்ந்த 10 - 12 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது மூலமே பங்கு முதலீட்டின் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 12 - 15% லாபம் ஈட்ட முடியும்.

மேலும், இந்த முதலீட்டுக் கலவை என்பது ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இல்லை எனில், அது முதலீட்டுக் கவலையாக மாறி விடும். பங்கு முதலீட்டில் டைவர் சிஃபிகேஷன் என்கிற பரவாலாக் கம் மிக முக்கியமாகும்.

7. பங்கு விலை இறங்கும்போது சராசரி செய்யாமல் இருப்பது...

ஒரு நிறுவனப் பங்கின் விலையை மிகச் சரியான விலை யில் வாங்குவது மற்றும் சரியான விலையில் விற்றுவிட்டு வெளியேறு வது என்பது யாராலும் இயலாத காரியமாகும்.

நம்மில் பெரும்பாலானோர் ஒரு நிறுவனப் பங்கை வாங்கி விட்டால், அதன் பிறகு அதில் முதலீட்டை அதிகரிக்காமல் இருக் கிறார்கள். இது தவறான பங்கு முதலீட்டு உத்தியாகும். நல்ல நிறுவனப் பங்கு எனில், விலை சரியும்போது சாராசரி (Average) செய்யும் அதே நேரத்தில், அந்த நிறுவனப் பங்கின் விலை இன்னும் அதிகரிக்கும் என்கிறபட்சத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தவறக் கூடாது.

எந்த ஒரு பங்கில் முதலீடு செய்வதாக இருந்தாலும் படிப் படியாக வாங்க வேண்டும். அதேபோல, லாபத்தை வெளியே எடுக்கும்போது படிப்படியாக எடுக்க வேண்டும். அப்போதுதான் சராசரியாகக் குறைவான விலையில் வாங்கி சராசரியாக அதிக லாபத்துக்கு விற்க முடியும்.

பங்குச் சந்தை முதலீடு... 
செய்யக்கூடாத 12 தவறுகள்..!

8. குறுகிய கால முதலீடு கூடாது...

பங்கு முதலீட்டில் பலர் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் நோக்கில் நுழைகிறார்கள். ஓரிரு சமயத்தில் அது நடக்கக்கூடும். ஆனால், பங்குச் சந்தை முதலீடு மூலம் கோடிகோடியாக லாபம் பார்த்தவர்களில் பெரும் பாலானோர் நீண்ட கால முதலீட்டாளர்கள் ஆவார்கள். வாரன் பஃபெட் தொடங்கி நம் ஊர் ராகேஷ் ஜுன்ஜுன் வாலா வரை பலரும் நீண்ட கால முதலீட்டாளர்கள்தாம். நீண்ட கால முதலீடு என்கிறபோது உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் பவர் ஆஃப் காம்பவுண்டிங் மூலம் அதிக செல்வம் சேர்க்க முடியும்.

9. செயல்படாத பங்கு முதலீட்டைத் தொடர்வது கூடாது...

பலரின் முதலீட்டுக் கலவையில் நாளுக்கு நாள் விலை குறைந்துகொண்டிருக்கும் அல்லது குறிப்பிட்ட சிறிய வரம்புக்குள் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் பங்குகளை ஒன்றும் செய்யாமல் அப்படியே வைத்திருப்பார்கள். இது மகா தவறாகும். ஒருவரின் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக்கும் பங்கு சுமார் 9 அல்லது 12 மாதங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை எனில், அந்தப் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி வேறு நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் இலக்கை நிறைவேற்ற பங்கு முதலீடு உதவும்.

இழப்பில் இருக்கும் பங்கு மூலமான நீண்ட கால மூலதன ஆதாய இழப்பை அந்த ஆண்டின் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் ஈடுகட்டி குறைவான வரி கட்டலாம். அப்படி இயலவில்லை எனில், இந்த இழப்பை அடுத்த எட்டு ஆண்டு களுக்கு எடுத்துச் சென்று, நீண்ட கால மூலதன ஆதாயத்தில் ஈடுகட்டும் வாய்ப்பிருக்கிறது. இழப்பை லாபகரமாகப் பயன் படுத்திக்கொள்ள இது ஒன்றே வழி.

10. மோசமான முதலீட்டுப் பழக்கம் கூடாது...

சிலர் பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும்போது யாரோ சொன்னார்கள் என்பதற்காக முதலீடு செய்வார்கள். பங்குச் சந்தை சிறிது இறங்கி, வாங்கிய பங்கின் விலை இறங்க ஆரம்பித்துவிட்டால், நஷ்டத்தில் அதை விற்க விரும்ப மாட்டார்கள். மேலும், மேற்கொண்டும் முதலீடு செய்ய மாட்டார்கள். அந்தப் பங்குகளை அப்படியே விட்டுவிட்டு வேறு நிலையான வருமானம் தரும் முதலீடு பக்கம் சென்று விடுவார்கள்.

பங்குச் சந்தை முதலீடு என்கிறபோது தொடர்ந்து 10, 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் திட்டம் இருப்பவர்கள் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்துக்குப் பொறுமையாக முதலீட்டைத் தொடர்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. பங்குச் சந்தை முதலீடு என்கிறபோது சுமார் 10 ஆண்டு காலத்தில் சந்தை ஓரிரு எழுச்சிகள் மற்றும் வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இறக்கங்களை எல்லாம் தாண்டி பங்கு முதலீடு என்பது 12 - 15% லாபத்தில் இருக்கக்கூடும். எனவே, பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்யும் நோக்கம், ஓராண்டுக்கு ஒருமுறை பங்குகளை அலசி ஆராய நேரமுள்ளவர்கள் அல்லது ஆலோசகர்களைக் கொண்டவர்கள் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

11. அதீத வருமானத்துக்கு ஆசை கூடாது...

பங்குச் சந்தை முதலீட்டில் மாதத்துக்கு 5% வருமானம் ஈட்டலாம். அதாவது, ஆண்டுக்கு 60% லாபம் ஈட்டலாம் என பலர் தூண்டில் போடுவார்கள். இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணவீக்க விகிதத்தை விட சுமார் 4 - 5% அதிக வருமானம் அல்லது நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியைவிட 3 - 5% வருமானம் அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட 3 - 5% அதிகமாக வருமானம் எதிர் பார்க்கலாம். அதாவது, நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலம் சராசரியாக 12 - 15%, அதிகபட்சம் 18 - 20% வருமானம் எதிர்பார்க்கலாம்.

12. உணர்வுபூர்வமாகச் செயல் படுதல் கூடாது...

பலர் பங்குச் சந்தை முதலீட்டு டன் சென்டிமென்ட்டை கலந்து விடுகிறார்கள். அது மிகப் பெரிய தவறாகும். எந்த ஒரு நிறுவனப் பங்காக இருந்தாலும் உங்களின் இலக்கு விலை அல்லது வருமான எதிர்பார்ப்பு வந்ததும், அந்தப் பங்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும். இப்படிச் செய்யும் போதுதான் லாபத்தைத் தக்க வைக்க முடியும்.

அப்படி இல்லாமல் இந்த நிறுவனப் பங்கு மிக நல்ல பங்கு; அதை விற்று லாபம் பார்ப்ப தாக உணர்வுபூர்வமாகச் செயல் பட்டால், பங்குச் சந்தை லாபம் கையை விட்டுப் போய்விடும். எந்த ஒரு பங்கின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்காது என்பதை மனதில் கொள்வது மிக அவசியமாகும்.

இனி பங்குச் சந்தை முதலீட்டில் இந்த 12 தவறுகளைச் செய்யாதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism