பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எது சரியான நேரம்?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எது சரியான நேரம் என்கிற கேள்வியை எல்லோருமே கேட்கிறார்கள். பங்குச் சந்தை மிகவும் குறைந்திருக்கும் நிலைதான் முதலீடு செய்ய உகந்த நேரம் என்பது வெளிப் படையான உண்மை ஆகும்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

சந்தை ஏறுமா, இறங்குமா?

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் முதலீடு செய்ய, ஒருவர் சந்தையின் நகர்வு களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இப்போது பங்குச் சந்தை உச்சத்தை அடைந்து உள்ளதா அல்லது இன்னும் உயரத்துக்குச் செல்லுமா அல்லது சந்தை மேலும் சரிவடையுமா என்பதை முன்கூட்டியே கணிக்க வேண்டும். இப்படி சரியாகக் கணிப்பது எந்த அளவுக்கு சாத்தியம்?

உலகின் மிகப் பெரிய பணக்காரரும், வெற்றிகரமான முதலீட்டாளருமான வாரன் பஃபெட், ‘‘பொருளாதாரம், வட்டி விகிதங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முயற்சி செய்வதை நிறுத்துங்கள். அடிக்கடி வாங்கி விற்பது மூலம் அதாவது, பங்கு வர்த்தகம் செய்வதன்மூலம் அதிக லாபம் ஈட்ட முடியாது. ஒரு நல்ல நிறுவனப் பங்கை வாங்கிவிட்டு, நீண்ட காலம் காத்திருப்பதன் மூலமே அதிக லாபம் ஈட்ட முடியும். நான் ஒருபோதும் உடனடியாக பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வில்லை. அடுத்த நாளே பங்குச் சந்தை மூடப்படலாம் என்று எண்ணித்தான் வாங்கு கிறேன்; ஐந்தாண்டுகள் வரை சந்தை மீண்டும் திறக்கப் படாது என்றாலும் கவலைப் பட மாட்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய
எது சரியான நேரம்?

10 - 15 ஆண்டுகளில் நல்ல வருமானம்...

பங்குச் சந்தையின் போக்கை எப்போதும் சரியாகக் கணிப்பது சாத்திய மில்லை. அதற்கு முக்கியமான காரணம், பங்குச் சந்தை கணிக்கக்கூடிய, வழக்கமான அல்லது குறிப்பிட்ட வடிவத்தில் நகராமல் இருப்பதுதான்.

ஆனால், கடந்த காலங் களில் வரலாற்று ரீதியாக பங்குச் சந்தை நீண்ட காலத் தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தந்திருக்கிறது. 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல நிறுவனப் பங்கை வாங்கி, அந்தப் பங்குகளின் விலை உயர்வால் இப்போது செல்வம் சேர்த்தவர்களின் வெற்றிக் கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், சந்தையில் நேரத்தைக் கணக்கிட்டு உள்ளே நுழைந்து, வெளியேறி செல்வத்தைக் குவித்தவர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டு இருக்கவே முடியாது.

சரியான நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம் ஒருவர் ஒரு சில பங்கு வர்த்தகங்களில் லாபம் ஈட்டலாம். ஆனால், எப்போதும் லாபம் ஈட்ட முடியாது. ஒரு சில பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவதற்கும், எப்போதும் வெற்றிகரமான முதலீட்டாளராக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. எனவே, பங்குச் சந்தையில் நேரம் பார்த்து முதலீடு செய்வதைக் காட்டிலும் பங்குச் சந்தையில் நீண்ட காலம் முதலீட்டாளராக இருப்பது மிக முக்கியம்.

வல்லுநர்கள் நேரம் பார்ப்பதில்லை...

பங்குச் சந்தையை சரியாகக் கணிக்கக்கூடிய முதலீட்டு வல்லுநர்கள் இருந்தால் அவர்கள் அதைப் பற்றி ஊடகங்களில் எழுதவோ, பேட்டி கொடுக்கவோ மாட்டார்கள். அவர்கள் தங்கள் ரகசியத்தை வெளிப் படுத்தாமல் அமைதியாக முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் மற்றும் அவர்களின் வாடிக்கை யாளர்களுக்கு அந்த நிறுவனப் பங்குகளை வாங்கச் சொல்லி லாபம் ஈட்டிக் கொடுக்கிறார்கள்.

வெற்றிகரமான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையின் நேரத்தைக் கணக்கிடுவதில்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான் முதலீட்டாளர்களின் பணத்தை முழுமையாக முதலீடு செய்த ஒரு முதலீட்டுக் கலவையை (portfolio) பராமரித்து வருகிறார்கள். முதலீட்டாளர்கள் திடீரென பணம் கேட்டால், அவர்களுக்குத் தருவதற் காக பணத்தின் மிகச் சிறிய பகுதியை மட்டும் முதலீடு செய்யாமல் பராமரித்து வருகிறார்கள்.

சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் என அதிக ரொக்கப் பணத்தை வைத்திருந்த சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த காலங் களில் சராசரிக்கும் குறைவான வருமானத்தையே முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பங்குச் சந்தை என்பது ஏற்ற இறக்கத்தில் இருந்துவந்தாலும், அது நீண்ட காலத்தில் ஏறுமுகத்தில் தான் இருந்துவருகிறது. 2020 மார்ச் கோவிட் பாதிப்புக்குப் பிறகு, இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் மிக வேகமாக அதிகரித்ததன் எதிரொலியாக டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது.

சந்தையின் நேரத்தைக் கணக்கிட்டு முதலீடு செய்வது உண்மையில் ஒரு தெளிவற்ற யோசனை ஆகும். முதலீட்டாளர்கள் இதற்கு இரையாகிவிடக் கூடாது.

ஒரு நீண்ட கால முதலீட்டாளர் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். பங்குச் சந்தையில் மொத்த தொகையை ஒரே நேரத்தில் எப்போதும் முதலீடு செய்யக் கூடாது. பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வதுபோல, பங்குச் சந்தையிலும் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்து வர வேண்டும். அப்படிச் செய்யும் போது நீண்ட காலத்தில் சந்தையின் ஏற்ற, இறக்கங்களில் சராசரியாகக் குறைந்த விலையில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்; சந்தை ஏறும்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய
எது சரியான நேரம்?

பொறுமையைச் சோதிக்கும் பங்குச் சந்தை...

பெரும்பாலான நேரங்களில் பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்களின் பொறுமையை மிகவும் சோதிப்பதாக இருக்கிறது. கடந்த காலங்களை எடுத்துக் கொண்டால், இந்தப் பங்குச் சந்தை எப்போதெல்லாம் 30 சத விகிதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளதோ, அப்போதெல் லாம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் ஏற்றம் கண்டிருக் கிறது. உதாரணமாக, 1994 செப்டம்பர் 12-ம் தேதியிலிருந்து 1996 டிசம்பர் 4-ம் தேதி வரையிலான 27 மாதங்களில் சென் செக்ஸ் சுமார் 40% வீழ்ச்சி கண் டது. பிறகு 1999 ஜூலை 14 முதல் ஏற்றம் காண ஆரம்பித்தது. எந்தக் கால அளவுக்கு சந்தை இறக்கத்தில் இருந்ததோ, அந்தக் கால அளவுக்கு அது மறுபடியும் ஏற்றம் காண எடுத்துக்கொள் கிறது.

பொதுவாக, பங்குச் சந்தை நன்றாக இறங்கிக் காணப்படும் நிலையில், கூடுதல் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் கணிசமான லாபம் பெற முடியும்.

உதாரணமாக, பங்குச் சந்தை 20% வீழ்ச்சிகண்டால், கடன் சந்தை சார்ந்த முதலீடுகளில் இருந்து 20 சதவிகிதத்தை பங்குச் சந்தைக்கு மாற்ற வேண்டும். இதுவே பங்குச் சந்தை 30% வீழ்ச்சிகண்டால், 30% தொகை யைக் கடன் சந்தை முதலீட்டில் இருந்து பங்கு சந்தைக்கு மாற்ற வேண்டும்.

இப்படி பங்குச் சந்தையானது எவ்வளவு சதவிகிதம் உச்சத்தில் இருந்து இறங்குகிறதோ, அந்த அளவுக்கு ஈக்விட்டி ஃபண்டு களுக்கு முதலீட்டை மாற்றுவது லாபகரமாக இருக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இன்றே சரியான நேரம் என்கிற உண்மை உங்களுக்கு இப்போது புரிந்ததா?