Published:Updated:

வேகமெடுக்கத் தொடங்கிய சுற்றுலாத் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

சுற்றுலாத் துறை
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுலாத் துறை

சுற்றுலாத் துறை

வேகமெடுக்கத் தொடங்கிய சுற்றுலாத் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

சுற்றுலாத் துறை

Published:Updated:
சுற்றுலாத் துறை
பிரீமியம் ஸ்டோரி
சுற்றுலாத் துறை

இந்தியாவில் உள்ள சேவைத் துறைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது சுற்றுலாத் துறை. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளால் தேக்கநிலையில் இருந்து வந்த இந்தத் துறை, தற்போது அதிலிருந்து மீண்டுவந்து, வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த வளர்ச்சி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சி...

இந்தியாவில் 37 உலக பாரம்பர்ய தளங்கள், 80 தேசிய பூங்காக்கள், 440 சரணாலயங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கடற்கரைகள் கொண்ட நாடு. 2018-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 9.2% பங்களிப்பை சுற்றுலாத் துறை கொடுத்துள்ளது. அதே காலகட்டத்தில் 8.1% மொத்த வேலைவாய்ப்பை இந்தத் துறை உருவாக்கியுள்ளது.

உலக அளவில் அதிக வெளிநாட்டினரை ஈர்த்த வகையில் 22-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. ஆசிய அளவில் அதிக வெளி நாட்டினரை ஈர்த்த வகையில் 8-வது நாடாகவும் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் இந்தத் தரவரிசையில் நமது நாடு 54-வது நாடாகப் பின்தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தத் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வர வேண்டும் என்கிற வேகத்தில் செயல்படுகிறது இந்திய சுற்றுலாத் துறை.

வேகமெடுக்கத் தொடங்கிய சுற்றுலாத் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

பாசிட்டிவ் அம்சங்கள்...

மலைகள், காடுகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் அனைத்தையும் கொண்ட வெகு சில நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருப்பதால், பல நூறு ஆண்டுகளாகவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளது. இத்தகைய சூழல்தான் இந்தத் துறையின் பங்குகளுக்கு பெரும் சாதகமாக உள்ளது.

சுற்றுலாவைப் பொறுத்தவரை, இந்தியா மருத்துவச் சுற்றுலா பிரிவில் கணிசமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த நாடாகவும், இந்தப் பிரிவில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடாகவும் விளங்குகிறது.

பெரு மருத்துவ நிறுவனங்கள் மொத்த பிசினஸ் தற்போது ரூ.5 லட்சம் கோடி என்கிற அளவில் இருக்கிறது. இது 2026-ம் ஆண்டில் ரூ.10 லட்சம் கோடியாக உயரும் எனவும், 2030-ம் ஆண்டில் ரூ.20 லட்சம் கோடிக்கும் மேலாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ சுற்றுலா பயணிகளைக் கையாளும் துறை என்பதாலும், இன்னும் இந்தத் துறையை வலுப்படுத்த உறுதுணையாக ‘ஹீல் இன் இந்தியா’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது துறை சார்ந்த பங்குகளுக்குக் கூடுதல் பலம். இந்திய அரசு சுற்றுலாத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், இந்தத் துறை இன்னும் அதிவேகத்தில் வளரும் வாய்ப்புள்ளது.

நெகட்டிவ் அம்சங்கள்...

கோவிட் பாதிப்புக்குப் பிறகு, துறைரீதியாக முன்னேற்றம் தென்பட்டாலும், போக்குவரத்துத் துறையின் ரயில், விமான சேவைகள் இன்னும் பழைய நிலைக்கு முழுமையாக வராத நிலை இருப்பதாகச் சொல்லப்படு கிறது.

பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு போதிய அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று துறை வல்லுநர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் துறைக்கு அரசு சார்பில் செய்ய வேண்டிய அடிப்படைக் கட்டுமான பணிகளில் தொய்வு இருப்ப தாகவும் தெரிவிக்கின்றனர். போதிய சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தருவது, சுற்றுலாத் தலங்களில் மருத்துவ வசதிகள், பாதுகாப்பான விடுதிகள் இல்லாதது, சுற்றுலாத் தலங் களை எளிதாக இணைக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற வற்றில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ள தாகவும் நிபுணர்கள் வலியுறுத்து கின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பும் மிக முக்கியமான காரணியாக உள்ளது. பாதுகாப்புக் காரணி கள் அடிப்படையில் உலக அளவில் இந்தியா 114-வது இடத்தைப் பெற்றுள்ளது இந்தத் துறை பங்குகளுக்கு பாதகமான அம்சமாக உள்ளது.

வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் சென்று வர இயலாத அளவில் 2% சுற்றுலாத் தலங்கள் இந்தியாவில் இன்னும் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வேகமெடுக்கத் தொடங்கிய சுற்றுலாத் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

பங்குகள் எப்படி உள்ளன?

இந்தத் துறையில் சந்தை மூலதன அடிப்படையில் இந்திய ரயில்வேயின் ஐ.ஆர். சி.டி.சி பங்கு பெரிய நிறுவன மாக உள்ளது. போட்டி யாளர்கள் இல்லாத ஏகபோக நிறுவனமாகவும், அரசு நிறுவன மாகவும் உள்ளதால், இந்தப் பங்கின் வளர்ச்சி இன்னும் அதிகமாகலாம். பங்கின் விலை 52 வார குறைந்தபட்ச விலை யான 565-லிருந்து மீண்டு, கடந்த 6-ம் தேதி அன்று 708-ஆக உள்ளது. இது மீண்டும் 900 என்கிற அளவுகளை எட்ட வாய்ப்புள்ளதாகத் தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குகளைப் பொறுத்தவரை, கோவிட் ஆரம்பக் காலங்களில் 52% பங்கு விலை வீழ்ச்சி அடைந்து, வீரியம் குறைந்த வைரஸ் தோற்றுப் பரவல் காலங்களில் 233% வரை பங்கு விலை உயர்ந்தது. கடந்த ஆண்டில் மட்டும் 80% வளர்ச்சியை இந்த நிறுவனப் பங்கு கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் டாடா குழும நிறுவனப் பங்குகளின் ஓர் அங்கமாகும். 10 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. தாஜ், விவாண்டா போன்ற பல பெயர்களில் விடுதிகள் நடத்தி வருகிறது. பல புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்தத் துறை உருவாக்கி வருகிறது. இந்திய தங்கும் விடுதிகளின் ஒரு தங்கும் அறைக்கான வருவாய் சராசரி (RevPAR) 5.80 சத விகிதமாக உயர்ந்துள்ளது.

வேகமெடுக்கத் தொடங்கிய சுற்றுலாத் துறை... கவனிக்க வேண்டிய பங்குகள்..!

70 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஓபராய் குழுமத்தைச் சேர்ந்த ஈ.ஐ.ஹெச் நிறுவனமானது விடுதிகள், விமான நிலைய மற்றும் விமானங்களுக்குள் வழங்கப்படும் உணவு போன்ற சேவைகளில் ஈடுபடுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் இந்த நிறுவனம், கொரோனா காரணமாக 2021-ல் மட்டும் பின்தங்கியது. எனினும், அதே 2021-ல் 28% வளர்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஜூலையில் 60 ரூபாயாக இருந்த பங்கின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரூ.181-ஆக வர்த்தகமானது.

இந்தியாவின் 77 நகரங்களில் வியாபாரம் செய்யும் பார்பிக்யுநேஷன் பங்கு, கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்டு சில மாதங்களில் 101% வளர்ச்சியைக் கொடுத்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்தப் பங்கு ரூ.1,176-ஆக வர்த்தகமானது. இன்னும் சில நிறுவனப் பங்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையில் பார்க்க.

சுற்றுலாத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், இந்தத் துறையின் எதிர்காலப் போக்கைக் கண்காணித்து முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.