Published:Updated:

காளைச் சந்தை... தவிர்க்க வேண்டிய மூன்று தவறுகள்..!

காளைச் சந்தை...
பிரீமியம் ஸ்டோரி
காளைச் சந்தை...

முதலீடு

காளைச் சந்தை... தவிர்க்க வேண்டிய மூன்று தவறுகள்..!

முதலீடு

Published:Updated:
காளைச் சந்தை...
பிரீமியம் ஸ்டோரி
காளைச் சந்தை...

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

முதலீட்டாளர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். காரணம், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகத் தொடரும் காளைச் சந்தை நல்ல லாபத்தைச் சம்பாதித்துத் தந்திருக்கிறது. இந்த நேரத்தில் பெரும்பாலான முதலீட் டாளர்கள் சில பெரிய தவறுகளைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்தத் தவறுகளால் நம் போர்ட்ஃபோலி யோவில் அதிக இழப்பு உருவாக வாய்ப்பு உண்டு. காளைச் சந்தையில் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய முக்கியமான மூன்று தவறுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

1. அடிப்படை காரணிகள் மற்றும் ரிஸ்க்குகளைக் கவனிக்காமல் வெறித்தனமான பங்குகள் / ஃபண்டுகளை வாங்குவது

பங்குச் சந்தைகள், காளையின் பிடியில் இருக்கும் போது முதலீட்டாளர்கள் பங்கு விலைகள் தொடர்ந்து ஒரே ஒரு திசையில் மட்டுமே நகரும் என நினைக் கிறார்கள். இந்த நிலையில், பெரும்பாலான பங்கு முதலீட்டாளர்கள் சந்தையில் குதித்து பங்குகளை வாங்காவிட்டால், அவர்கள் நல்ல லாபத்தை இழக்க நேரிடும் என எண்ணுகிறார்கள். இதே எண்ணத்துடன் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செயல்படும் முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்தைப் பார்த்து அதில் புதிதாக முதலீட்டை மேற்கொள்கிறார்கள். அல்லது ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரிக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் பெரும்பாலும் அனைவரும் வாங்கும் மிகவும் பிரபலமான பங்குகள் / ஃபண்டுகளில் பரபரப்பாக முதலீடு செய்கிறார்கள்.

லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த முதலீட்டாளர்களின் மனதில் இருக்கிறதே தவிர, நிறுவனத்தின் அடிப்படைகள் மற்றும் வளர்ச்சி குறித்த விஷயங்களில் கவனம் செலுத்த மறந்துவிடுகிறார்கள். ஒட்டு மொத்தச் சந்தையும் ஏற்றத்தில் இருக்கும்போது, விலை ஏறும் பலவீனமான நிறுவனப் பங்குகளையும் முதலீட்டாளர்கள் வாங்கிவிடுகிறார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும் போது, அதிக விலை வீழ்ச்சியைச் சந்திப்பது இந்தப் பலவீன மான பங்குகளாகத்தான் இருக்கும். எப்போது பங்கு வாங்கினாலும் நிறுவனத்தின் பின்னணி என்ன, அடிப்படை அம்சங்கள் பலமானதாக உள்ளனவா என்பதையெல்லாம் கவனித்து உங்கள் முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் அவசியம் என்பதை மட்டும் எப்போதும் மறக்காதீர்கள்.

காளைச் சந்தை... தவிர்க்க வேண்டிய மூன்று தவறுகள்..!

2. சொத்து ஒதுக்கீட்டைப் புறக்கணித்தல்

வலுவான மற்றும் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட் ஃபோலியோவை உருவாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சொத்தைப் பிரித்து (Asset Allocation) முதலீடு செய்வ தாகும். எந்தவொரு குறிப்பிட்ட சொத்துப் பிரிவும் உங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ வருமானத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தாத வகையில், பல சொத்துப் பிரிவுகளாக (பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம்) இருக்க வேண்டும்.

பொதுவாக, உங்கள் போர்ட்ஃபோலியோவில் முதலீட்டு ஒதுக்கீடானது, உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன், எதிர்பார்க்கும் வருமானம், உங்கள் முதலீட்டுக் காலம் ஆகியவற்றைப் பொறுத்து அமைந்திருக்க வேண்டும். பொதுவாக, ஒருவரின் வயது 40 எனில் (100 வயது) 60% பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள்), 30% கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் (எஃப்.டி, கடன் ஃபண்டுகள்) மற்றும் எளிதில் ரொக்கமாக மாற்றக்கூடிய முதலீடுகளில் (வங்கிச் சேமிப்புக் கணக்கு, லிக்விட் ஃபண்ட்) 10% என உங்கள் முதலீட்டுக் கலவையை வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் முதலீடு செய்திருக்கும் பங்குகளின் விலை மேலே செல்லத் தொடங்கும்போது, உங்கள் போர்ட்ஃபோலியோவின் லாபத்தில் பங்குகளின் விகிதாச் சாரம் அதிகரிக்கும். அதாவது, 60% இருந்தது, மெதுவாக 65 சதவிகிதமாகவும், பின்னர் 70%, 75 சதவிகிதமாகவும் அதிகரிக்கும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் பங்குகளின் ஒதுக்கீடு அளவு அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க ஆரம்பிக்கிறீர்கள்.

இந்தச் சூழ்நிலையில், உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பது (Rebalance) மூலம் உங்களின் லாபத்தை ஓரளவுக்குத் தக்கவைப்பதுடன், முதலீட்டுக் கலவையின் ரிஸ்க்கையும் குறைக்க முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை விற்று, உங்கள் போர்ட்ஃபோலியோவில் பங்கு ஒதுக்கீட்டை சுமார் 60 - 65 சதவிதமாகக் குறைப்பது நல்லது.

ஆனால், நடைமுறையில் தொடர்ந்து அதிகரித்துவரும் பங்கு விலையால், இடையில் பங்குகளை விற்றால் பெரிய அளவில் லாபத்தை இழக்க நேரிடும் என்ற எண்ணம் மற்றும் பயம் காரணமாக, பல முதலீட் டாளர்கள் தங்கள் அஸெட் அலொகேஷனை மறுசீரமைப்பு செய்யாமல் விட்டு விடுகிறார்கள். இது மொத்த போர்ட்ஃபோலியோவுக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக மாறிவிட வாய்ப்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

3. கடன் சார்ந்த முதலீடுகளைப் பங்கு சார்ந்த முதலீடுகளுக்கு மாற்றுதல்...

கடன் சார்ந்த முதலீடுகள், போர்ட்ஃபோலியோவின் மதிப்பு குறையாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. அவற்றின்மூலம் ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், ஈக்விட்டி முதலீடுகள் குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருந்தாலும், நீண்ட காலத்தில் அதிக வருமானத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்படுகின்றன. கடன் முதலீடுகளின் மூலமான ரிஸ்க்கைவிட ஈக்விட்டி முதலீடுகளின் மூலமான ரிஸ்க் எப்போதுமே அதிகம்.

காளைச் சந்தைகளின்போது கிடைக்கும் லாபத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலீட்டாளர்கள் துடிக்கிறார்கள். அதை நிறைவேற்ற அவர்கள் தங்கள் கடன் சார்ந்த முதலீடு களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்காக அவர்கள் வைத்திருந்த பணத்தை நிறுவனப் பங்குகள் அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். விளைவு, சந்தை உச்சத்திலிருந்து தடாலென இறக்க ஆரம்பித்தால், அதிக சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், கடன் சந்தை சார்ந்த முதலீடுகளின் நோக்கத்துக்கு உதவாது என்பதால், இது பெரிய தவறுதான். நிறுவனப் பங்குகள் போர்ட்ஃபோலியோவின் வருமான வளர்ச்சிக்கு ஒரு சிறந்த வாகனம் என்றாலும் அவை அதிக அளவு ரிஸ்க்கைக் கொண்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எது எப்படி இருந்தாலும், உங்கள் ஒட்டுமொத்த சொத்து ஒதுக்கீட்டின் கண்ணோட்டத்தில் அனைத்து முதலீட்டு முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஈக்விட்டி முதலீடுகளின் கவர்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் அதிக ரிஸ்க் இல்லா முதலீட்டுக் கலவையைத் தொடர்ந்து உங்களால் பராமரித்து வர முடியும். பெருமளவிலான நஷ்டத்தைத் தவிர்த்து, நீண்ட காலத்தில் ஓரளவு நல்ல லாபத்தை உங்களால் ஈட்ட முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism