பங்குச் சந்தை என்பது அதிக ரிஸ்க்கானது. இதில் பணத்தைப் போட்டால் பணத்தை இழந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் என்பது மக்கள் பலரின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாகத்தான் பலரும் பங்குச் சந்தை பக்கம் வரத் தயங்குகிறார்கள்.

இப்படி நினைப்பதில் கொஞ்சம் உண்மையும் இருக்கவே செய்கிறது. உதாரணமாக, 10 வருடத்துக்கு முன்பு 100 ரூபாய் அளவில் வர்த்தகம் ஆகிவந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனப் பங்கு, இப்போது இரண்டு ரூபாய்க்குக் குறைவாக வர்த்தகம் ஆகிறது. இதே காலகட்டத்தில் 6,000 ரூபாய்க்கு வர்த்தகமான எம்.ஆர்.எஃப் நிறுவனம், இப்போது 72,000 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது. எவ்வளவு ஏற்ற இறக்கம் பாருங்கள்!

இவ்வளவு அதிகமான ஏற்ற இறக்கம் இருப்பதால், பங்குச் சந்தையைப் பார்த்து பலரும் பயப்படு கிறார்கள். சரியான பங்கு நமக்குப் பெரும் லாபம் சம்பாதித்துத் தருவது போல, தவறான பங்கு நம்மிடம் இருக்கும் பணத்தை இழக்கவும் செய்துவிடும்.

நஷ்டப்படாமல் சம்பாதிக்க மூன்று வழிகள்...

பங்குச் சந்தையில் ரிஸ்க் இல்லாமல் சம்பாதிக்க முடியுமா, நமக்கு அது போன்ற வாய்ப்புகளை பங்குச் சந்தை வழங்குகிறதா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உள்ளது. இழப்பதற்கு வாய்ப்பில்லாமல் சம்பாதிக்க மட்டும் வாய்ப்பிருந்தால் அதில் முதலீடு செய்வதற்கு அனைவருமே ஆர்வமாக இருப்பார்கள் இல்லையா?

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று விதமான வழிகளில் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் நஷ்டம் அடைவதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகவும், அதிக லாபம் சம்பாதிக்கவும் நம்மால் முடியும். அந்த வழிகள் என்னென்ன?

1. புதிய பங்கு வெளியீடு (IPO)

2. ஆஃபர் ஃபார் சேல் (OFS)

3.  நிறுவனம் பங்குகளைத் திரும்ப பெறுதல் (Buy back).

இதில் முதலாவதாக உள்ள புதிய பங்கு மூலதன வெளியீடு (IPO) மூலம் நஷ்டம் அடையாமல் அதிக லாபம் அடைவது எப்படி என்று பார்ப்போம்.

ஐ.பி.ஓ முதலீட்டிலும் நஷ்டம் வரலாம்...

அனைத்துப் புதிய பங்கு வெளியீடு களும் நிச்சயமாக லாபத்தை வழங்கி விடும் என்று சொல்ல முடியாது. சந்தையில் பட்டியலிடப்படும் பல நிறுவனங்கள் குறைந்த விலையில் பட்டியலிடப்பட்ட நிகழ்வுகளைச் சந்தை கண்டுள்ளது. அதனால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லாத புதிய பங்கு மூலதன முதலீடுகளைக் கணித்து முதலீடு செய்வதன்மூலம் லாபம் அடைய முடியும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

* பங்கு மூலதன வெளியீடு நடைபெறும்போது பல தரகு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிக்கலாமா என்று கருத்து வெளியிடும். மேலும், சில பங்கு களுக்கு முதலீட்டாளர்களிடம் அபிரிமிதமான வரவேற்பு இருக்கும். அதுபோன்ற பங்குகளை விண்ணப் பிக்கும்போது நமக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

* புதிய பங்கு வெளியீடு என்பது பொதுவாக, மூன்று நாள்கள் நடைபெறும். முதல் இரண்டு நாள்கள் அந்தப் பங்குக்கு எத்தனை சதவிகித மக்கள் விண்ணப்பித்தார்கள் என்று பார்க்க வேண்டும். ஒரு நிறுவனம் ஆயிரம் பங்குகளை வெளியிட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் அனுமதி பெற்றுள்ளது எனில், அந்த ஆயிரம் பங்குகளை வாங்குவதற்கு 20,000 விண்ணப்பம் வந்துள்ளது எனில், அந்தப் பங்குக்கு 20 மடங்கு அதிகமாக விண்ணப்பம் வந்துள்ளது என்று அர்த்தம்.

நான்கு வித முதலீட்டாளர்கள்...

பொதுவாக, ஐ.பி.ஓ-வில் ஒரு பங்கை நான்கு விதமான பிரிவினர் வாங்குவதற்கு விண்ணப்பிப்பார்கள். அவர்கள் முறையே வெளிநாடுவாழ் பெரும் முதலீட்டாளர்கள் (Foreign Institutional investor), இந்திய நாட்டைச் சேர்ந்த ரூ.2 லட்சத்துக்கு மேல் விண்ணப்பிக்கும் பெரு முதலீட்டாளர்கள் (High Networth Individuals), ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக விண்ணப்பிக்கும் சிறு முதலீட்டாளர்கள் (Retail investors) மற்றும் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த நிறுவனங்கள் ஆகிய நான்கு பிரிவின்கீழ் பங்குக்கு விண்ணப்பம் பெறப்படும்.

மூன்றாம் நாளில் விண்ணப்பம்...

பொதுவாக, நம்மில் பலர் சிறு முதலீட்டாளர்கள் பிரிவுக்குள் வருவோம். முதல் இரண்டு நாள்களில் சிறு முதலீட் டாளர்கள் பிரிவில் ஐந்து மடங்குக்கு மேல் பங்குக்கு விண்ணப்பிக்கப்பட்டால் அந்தப் பங்குக்கு அதிக தேவை இருக்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற பங்குகளைத் தேர்வுசெய்து பங்கு வெளியீட்டின் மூன்றாம் நாள் நாம் விண்ணப்பம் செய்யலாம். பொதுவாக, பங்கு வெளியீட்டில் மூன்றாம் நாள்தான் அதிகமானவர் விண்ணப்பம் செய்வார்கள். முதல் இரண்டு நாள்களில் ஐந்து மடங்கு விண்ணப்பம் வந்திருந்தால் அந்தப் பங்குக்கு மூன்றாம் நாள் முடிவில் 20 மடங்குக்கும் மேல் விண்ணப்பம் வந்திருக்கும். இவ்வளவு தேவை உள்ள பங்கு அதன் வெளியீட்டின்போது குறைவான விலையில் பட்டியலிடப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

ஆனால், இவ்வளவு தேவை உள்ள பங்கு அனைவருக்கும் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு. ஐ.பி.ஓ-வில் நமக்கு பங்கு கிடைக்க நாம் என்ன செய்யலாம்? விண்ணப்பத்தின்போது சில தவறுகளை நாம் செய்யாமல் இருந்தால், நமக்கு பங்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அது என்னென்ன தவறுகள் என்று பார்ப்போம்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்...

சில பங்குகளுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சில பங்குகள் ஏல முறையில் குறைந்த மற்றும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட பர்கர் கிங், புதிய பங்கு வெளி யீட்டில் குறைந்தபட்ச விலை 59 ரூபாய், அதிகபட்ச விலை 60 ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அதிக தேவை உள்ள பங்குகளில் விண்ணப்பம் செய்யும்போது அதிகபட்ச விலையை நமது விலையாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். பர்கர் கிங் பங்கை ஐ.பி.ஓ-வில் வாங்க நினைத்தால், 60 ரூபாய் விலையாகக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். அதிக தேவை உள்ள பங்குகளில் குறைந்த விலைக்கு விண்ணப்பித்த வர்களுக்குப் பொதுவாக பங்குகள் கிடைக்காது.

மேலும், பங்கு வெளியீட்டில் பங்குகள் எப்படி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்குகள் எப்படி ஒதுக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வது இதில் தவறு செய்யாமல் நம்மைக் காப்பாற்றும்.

பங்குகளை வேண்டி விண்ணப்பிக்கும்போது ஒரு தொகுப்பாகத்தான் (Lot size) விண்ணப்பம் செய்ய முடியும். பர்கர் கிங் பங்கு வெளியீட்டில் 250 பங்குகள் கொண்டது ஒரு தொகுப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. 60 ரூபாய்க்கு விண்ணப்பம் செய்தால், 750 பங்குகள் கொண்ட ஒரு தொகுப்பு ரூ.15,000 ஆகிறது. சிறு முதலீட் டாளர்கள் ரூ.2 லட்சம் வரை மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். அதன்படி பார்த்தால், சிறு முதலீட்டாளர்கள் 13 (13 x 15,000 =1,95,000) தொகுப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய முடியும். பங்குகள் வேண்டி அதிக மடங்கில் விண்ணப்பம் வந்தால் குலுக்கல் முறையில்தான் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யும் போது பங்கு வேண்டி விண்ணப் பித்தவர்களில் ஒரு தொகுப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகுதான் இரண்டாவது தொகுப்புக்கான பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

உதாரணத்துக்கு, ஏ,பி,சி என்பவர்கள் முறையே 1, 10, 15 லாட் வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு தொகுப்புகள் மட்டுமே நிறுவனம் வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த உதாரணத்தில் ஏ,பி,சி மூவருமே ஒரு தொகுப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். அதனால் அந்த மூவரில் குலுக்கல் முறையில் இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் களுக்கு மட்டுமே பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். சி என்பவர் 15 லாட் விண்ணப் பித்திருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றால், ஒரு பங்குகூட அவருக்கு ஒதுக்கீடு செய்யப்படாது. அதனால் அதிக தேவை உள்ள பங்கு வெளியீட்டில் அதிக தொகுப்புக்கு விண்ணப் பிப்பது எந்தப் பலனையும் தராது. நமது பணமும் தேவை யில்லாமல் முடங்கிவிடும். இது போன்ற பங்குகளை விண்ணப் பிக்கும்போது ஒரு தொகுப்புக்கு மட்டுமே விண்ணப்பம் செய்தால் போதும்.

அதற்குப் பதிலாக, பங்குச் சந்தையில் அதிக அனுபவம் உடையவர்கள் தமது குடும்பத்தில் உள்ள பல உறுப்பினர்களின் பெயரில் டீமேட் கணக்குத் தொடங்கியிருப்பார்கள். இந்த அனைத்துக் கணக்குகளின் வாயிலாக ஒரு தொகுப்புக்கு மட்டும் விண்ணப்பம் செய்வார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, அவர்களுக்குப் பங்கு கிடைக்கும். 15 கணக்குகளில் விண்ணப்பம் செய்தால், பர்கர் கிங் உதாரணத்தின்படி, ரூ.2.25 லட்சம் முதலீடு செய்ய வேண்டி வரும். இவ்வாறு செய்யும்போது 20 மடங்கு விண்ணப்பம் வந்திருந்தால் ஒருவருக்கு பங்கு கிடைப்பதற்கு நிகழ்தகவு கோட்பாட்டின்படி (Probabilty) அதிக வாய்ப்புள்ளது.

பொதுவாக, அதிக தேவை உள்ள பங்குகள் பட்டியலிடப்படும்போது 20 முதல் 100% அதிக விலையில் பட்டியலிடப் படும். 20% லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பங்கு ஒருவருக்கு ரூ.3,000 பெற்றுத் தரும். நமது பணம் ரூ.2.25 லட்சம் 10 நாள்கள் முடங்கியிருந்தாலும் அதற்கு லாபமாக ரூ.3,000 பெற்றுத் தருகிறது. சமீபத்தில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள் (Mazago dock, Happy minds) 50 சதவிகிதத்துக்கும்மேல் பட்டியலிடப்பட்ட நாளில் விலை ஏறி உள்ளன.

இது போன்ற அதிக தேவை உள்ள பங்குகள் குறைந்த விலைக்கு பட்டியல் இடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. பங்கு வெளியீட்டில் பங்குகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள நடைமுறைகளை சரியாகப் பின்பற்றுவது, அதிக கணக்கு களில் பங்குகள் வேண்டி விண்ணப்பிப்பது ஆகியவை நமக்கு பங்கு கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

இவற்றைப் புரிந்துகொண்டு சரியான முறையில் செயல்படுத்தினால் ஐ.பி.ஓ-வில் லாபம் பார்க்க முடியும். இது பற்றித் தெளிவான புரிந்துகொள்ளல் இல்லாமல் புதிய ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று எண்ணி அனைத்துப் பங்கு வெளியீட்டிலும் விண்ணப்பம் செய்வது நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.

பிட்ஸ்

வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவிகிதமாகக் குறைத்திருக் கிறது எஸ்.பி.ஐ நிறுவனம். தவிர, பிராசஸிங் கட்டணம் முழுவதையும் ரத்து செய்துள்ளது. இந்தச் சலுகைகள் இந்த மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே!