Published:Updated:

பங்கு வர்த்தகத்தில் லாபம்... கடைப்பிடிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்..!

பங்கு வர்த்தகம்
பிரீமியம் ஸ்டோரி
பங்கு வர்த்தகம்

பங்கு வர்த்தகம்

பங்கு வர்த்தகத்தில் லாபம்... கடைப்பிடிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்..!

பங்கு வர்த்தகம்

Published:Updated:
பங்கு வர்த்தகம்
பிரீமியம் ஸ்டோரி
பங்கு வர்த்தகம்

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

நம்மில் பெரும்பாலானோருக்கு பங்கு வர்த்தகத்தில் (Share Trading) ஈடுபட வேண்டும்; லாபம் ஈட்ட வேண்டும் என்கிற ஆசை நிறையவே இருக்கிறது. ஆனால், நடைமுறையில் லாபம் ஈட்டுவது மிகக் குறைவாக இருக்கிறது. காரணம், பங்கு வர்த்தகத்தை நாம் முறையாக மேற்கொள்ளாததே. பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்ட கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜி.எஸ்.ராஜேஷ் குமார்
ஈக்விட்டி அனலிஸ்ட், 
Rkgcapitalgains.com
ஜி.எஸ்.ராஜேஷ் குமார் ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

பங்கு முதலீட்டுடன் ஒப்பிடும்போது, பங்கு வர்த்தகம் அதிக ரிஸ்க் ஆனது. பங்கு முதலீட்டில் எந்த அளவுக்கு அதிக பொறுமை தேவையோ, அந்த அளவுக்குப் பங்கு வர்த்தகத்தில் வேகம் தேவை.

பங்கு வர்த்தகம் என்கிறபோது அதை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அன்றே வாங்கி அன்றே விற்பது அல்லது அன்றே விற்று அன்றே வாங்குவது தினசரி வர்த்தகம் (Day Trading). பங்குகளை வாங்கி சில நாள்கள் முதல் சில வாரங்கள் வரை வைத்திருந்து விற்பது ஸ்விங் டிரேடிங் (Swing Trading). சில மாதங்கள் வரை பங்குகளை வைத்திருந்து விற்பது குறுகிய கால வர்த்தகம் (Short Term Trading).

இந்த மூன்று முறைகளில் எந்த முறையில் பங்கு வர்த்தகம் மேற்கொண்டாலும் கீழ்க்கண்ட எட்டு விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும்.

1. இழப்புத் தடை அவசியம்

பங்கு வர்த்தகத்தில் இழப்புத் தடை (Stop-Loss) இல்லாமல் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது. இந்த ஸ்டாப்லாஸ், பங்கு வர்த்தகர்களை அதிக இழப்பில் இருந்து பாதுகாப்பதாக இருக்கிறது. பங்கு வர்த்தகம் செய்யும்போது ஸ்டாப் லாஸ் ஆர்டர் என்கிற ஒரு ஆர்டர் இருக்கிறது.

பங்கின் விலை குறிப்பிட்ட தொகைக்குக் கீழே இறங்கிவிட்டால், தங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பங்கு விலை இறங்கத் தொடங்கிவிட்டால், இந்த ஸ்டாப் லாஸ் ஆர்டரைப் பயன்படுத்துவது மூலம் குறைவான இழப்போடு, அந்த வர்த்தகத்தி லிருந்து வெளியேறிவிட முடியும். அப்படிச் செய்யும்போது அதிக இழப்பிலிருந்து தப்பிப்ப துடன், மறுநாள் வர்த்தகம் செய்யும் தொகையும் கைவசம் இருக்கும்.

ஒரு நல்ல டிரேடர் பத்து வர்த்தகத்தில் மூன்று வர்த்தகம் தோல்வியில் முடியும் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்.

2. டெக்னிக்கல் அனாலிசிஸைப் பின்பற்றுவது அவசியம்

சில பங்கு டிரேடர்கள் யாரோ கொடுக்கும் பரிந்துரைகளின்படி, வர்த்தகத்தில் ஈடுபடு கிறார்கள். அவர்கள் சொந்தமாக டெக்னிக்கல் அனாலிசிஸை மேற்கொள்ளாமல் இருக் கிறார்கள். டெக்னிக்கல் அனாலிசிஸ் தெரிந்தால், அந்தக் குறிப்பிட்ட பங்குக்கு என்ன டிமாண்ட் இருக்கிறது, வால்யூம் என்ன என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். அதன் அடிப் படையில்தான் பங்கின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என்பதைக் கணிக்க முடியும்.

அந்த வகையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிந்து கொள்வது அவசியம். அதற்குப் பயிற்சி வகுப்புக்குச் செல்லலாம்; புத்தகங்கள் வாங்கிப் படிக்கலாம்.

பங்கு வர்த்தகத்தில் ஒரு பங்கைக் கண்ணை மூடிக் கொண்டு வேகமாகச் சென்று வாங்குவது அல்லது விற்பது மிகப் பெரிய தவறாகும். அது பெரிய இழப்பில் கொண்டு வந்து விட்டுவிடும். முறையாக டெக்னிக்கல் அனாலிசிஸ் படித்து, விவரங்களைத் தெரிந்துகொண்டு பங்கு வர்த்தகத்தில் இறங்குவது லாபகரமாக இருக்கும்.

பங்கு வர்த்தகத்தில் லாபம்...
கடைப்பிடிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்..!

3. டிரெண்டைப் பின்பற்றுவது

பொதுவாக, பங்கு வர்த்தகத்தில் டிரெண்டை (Trend)உங்களின் நண்பர்கள் என்பார்கள். அதாவது, பங்குச் சந்தை அல்லது பங்கின் டிரெண்டைப் பின்பற்றி வர்த்தகம் செய்வது லாபத்தை ஈட்டித் தரும். பங்குச் சந்தை அல்லது பங்கு ஏற்றத்தின் போக்கில் இருக்கிறதா அல்லது இறக்கத்தின் போக்கில் இருக்கிறதா என்கிற டிரெண்ட் தெரியாமல் வர்த்தகத் தில் இறங்கும்போது இழப்புக் கான வாய்ப்பு 50% பிரகாசமாக இருக்கிறது.

சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது. அந்தத் திசையில் வர்த்தகம் செய்வதுதான் லாபகரமாக இருக்கும். எனவே, டிரெண்டைப் பின்பற்றி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது எப்போதும் நல்லதாகும்.

டிரெண்ட்டுக்கு எதிராக ஒருவர் வர்த்தகம் செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் நிர்ணயித்துக்கொள்வது மிக அவசியம். அப்போதுதான் அதிக இழப்பைக் குறைக்க முடியும்.

நல்ல வர்த்தகர் என்பவர் பங்குச் சந்தை அல்லது பங்கின் டிரெண்ட் தெளிவாகத் தெரியாத நிலையில் வர்த்தகம் எதையும் மேற்கொள்ள மாட்டார். அவர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார். மேலும், எப்போதும் அதிக வாயூல்யூம் உள்ள பங்குகளில் டிரேட் செய்வது அவருடைய முக்கிய மான தினப்படி பழக்கமாக இருக்கும்.

4. மற்றவர்களைப் பின்பற்றாதது

சந்தையில் ஏகப்பட்ட வதந்திகள், பரிந்துரைகள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் எனப் பல்வேறு சமூக வலைதளங்களில் வந்துகொண் டிருக்கும். அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ஒருவர் தனது சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பங்கு வர்த்தகத் தில் ஈடுபடும்போது பங்குச் சந்தையில் லாபம் ஈட்டும் நிலையை அடைகிறார்.

மந்தை போல் செயல்பட்டால், பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவது கடினம்தான் என்பதுடன், இழப்பு அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களிடம் இருந்து டிப்ஸ், பரிந்துரைகள் வந்தாலும் அவற்றை அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்வதன் மூலம் மட்டுமே லாபத்தை ஈட்ட முடியும்.

5. நிலையான வர்த்தக முறையைப் பின்பற்றுவது

பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்கும் பெரும்பாலான வர்த்தகர்கள் தங்களுக்கென நிலையான பிரத்யேக வர்த்தக முறையைப் பின்பற்றி வருவார்கள். அடிக்கடி வர்த்தக முறையை மாற்றுவது மிகப் பெரிய தவறாகும். அது பெரும்பாலும் இழப்பில்தான் கொண்டு போய் நிறுத்தும்.

பங்கு வர்த்தகத்தில் லாபம்...
கடைப்பிடிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள்..!

6. சராசரி செய்வதைத் தவிர்ப்பது

பங்கு விலை ஏறும் என்கிற எதிர்பார்ப்பில் வாங்கியிருக்கும் நிலையில், அதற்கு மாறாகப் பங்கின் விலை இறங்க ஆரம்பித் தால், ஸ்டாப்லாஸுக்குக் கீழே பங்கு விலை இறங்கிவிட்டால், நல்ல வர்த்தகர்கள் அவற்றை விற்றுவிட்டு வெளியேறி விடுவார்கள்.

சிலர், பங்கின் விலை இறங்க ஆரம்பித்தால் அதை ஆவரேஜ் செய்ய ஆரம்பிப்பார்கள். இதன் மூலம் அவர்கள் இழப்பைக் குறைப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இழப்பைத்தான் கூட்டுகிறார்கள்.

பங்கு விலை குறையக் குறைய ஆவரேஜ் செய்வது நீண்ட கால முதலீட்டுக்கு லாபகரமாக இருக்கலாம். ஆனால், குறுகிய கால வர்த்தகத்துக்கு அவ்வளவு லாபகரமாக இருக்காது.

7. பைசா பங்குகளில் பங்கு வர்த்தகம் செய்வதைத் தவிர்ப்பது

நன்கு விவரம் அறிந்த பங்கு வர்த்தகர்கள் பென்னி ஸ்டாக்குகள் என்கிற பைசா பங்குகளில் வர்த்தகம் செய்ய மாட்டார்கள். காரணம், பைசா பங்குகளின் நிறுவனங்களின் அடிப்படை வலுவில்லாதது. மேலும், அந்தப் பங்குகளின் டிரெண்டை சரியாகக் கணிப்பது மிகக் கஷ்டமாகும்.

8. பகுதி லாபத்தை வெளியே எடுத்துவிடுவது

நல்ல டிரேடர்கள் என்பவர்கள் ஒரு பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் இருக்கிறது; குறுகிய காலத்தில் இன்னும் ஏற வாய்ப்பிருக்கிறது என்றாலும், பகுதி லாபத்தை வெளியே எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செய்வது ஒரு வகையில் நல்லதுதான். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதுபோல், சிறிய லாபங்கள் சேர்ந்து குறிப்பிட்ட காலத்தில் மிக அதிக லாபமாக மாறி இருப்பதை நடைமுறையில் காணலாம்.

பங்கு வர்த்தகத்தின் சிறப்பம்சங்களை நன்கு புரிந்து கொண்டு, பரபரப்படையாமல், பொறுமையாக ஒவ்வொரு முடிவையும் யோசித்து செயல்படுத்தினால், லாபத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது!

கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை..!

தினசரி பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து லாபம் அல்லது இழப்பு ஏற்பட்டால், விரைந்து வர்த்தகத்தை முடித்துக்கொள்வது நல்லது. இது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறையாகும். தொடர்ந்து லாபம் கிடைத்து வரும் நிலையில் ஒரு மிதப்பு வந்துவிடும். அதன் பிறகு அசால்டாக வர்த்தகம் செய்யும்போது இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதேபோல், ஓரிரு இழப்புகள் ஏற்படும் நிலையில் அன்றைய வர்த்தகத்தை நிறுத்திக்கொள்வது நல்லது. காரணம், இழப்பால் மனம் சோர்வடைந்திருக்கும் நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளும் வர்த்தகத்தில் தெளிவான மனநிலையில் இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.