Published:Updated:

வாரன் பஃபெட்டின் பங்கை இனி நீங்களும் வாங்கத் தயாரா?

கிஃப்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கிஃப்ட் சிட்டி

பங்குச் சந்தை

வாரன் பஃபெட்டின் பங்கை இனி நீங்களும் வாங்கத் தயாரா?

பங்குச் சந்தை

Published:Updated:
கிஃப்ட் சிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கிஃப்ட் சிட்டி

ஆகாஷ்

நம்மவர்களுக்கு அமெரிக்கக் கலாசாரத் திலும் அங்கு தயாராகும் பொருள்களை வாங்குவதிலும்தான் அலாதி ஆர்வம் என்றில்லை; அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளை வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இனி நம் நாட்டில் இருந்தபடியே அமெரிக்கப் பங்குச் சந்தையில் டிரேட் ஆகும் முக்கியமான சில பங்குகளை நம் முதலீட்டாளர்களும் வாங்கும் நிலை உருவாகியிருக்கிறது.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

அள்ளித் தந்த அமெரிக்கப் பங்குகள்

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளை முன்பு நேரடியாக வாங்க முடியாத நிலை இருந்தது. பிற்பாடு இதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் சில பங்குகளை நம் நாட்டிலிருந்து நேரடியாக வாங்கக்கூடிய நிலை கொண்டுவரப்பட்டது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் அமெரிக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிற முக்கியமான மாற்றம் வந்தது.

இதன்பிறகு, அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் பல திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொண்டுவரத் தொடங்கின. இந்தத் திட்டங்களுக்கு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தத் திட்டங்களில் நம் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதற்குக் காரணம், எக்கச் சக்கமான லாபம்தான். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனப் பங்கு விலை கடந்த ஓர் ஆண்டில் 33% லாபம் தந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனப் பங்கு விலை 36% லாபம் தந்திருக்கிறது. வாரன் பஃபெட்டுக்குச் சொந்தமான பெர்க்‌ஷையர் ஹாத்வே பங்கும் 25% வரை லாபம் தந்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டங்களில் கடந்த மூன்றாண்டு காலத்தில் 12% முதல் 18% வரை லாபம் தந்துள்ளன.

இந்த லாபம்தான் அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை நம் முதலீட்டாளர்களிடம் மேலும் மேலும் வளர்ப்பதாக இருந்தது.

வாரன் பஃபெட்டின் பங்கை இனி நீங்களும் வாங்கத் தயாரா?

கிஃப்ட் சிட்டி மூலம்...

இந்த நிலையில், குஜராத் அகமதாபாத்தில் உள்ள புதிதாகச் செயல்பட்டு வருகிற கிஃப்ட் சிட்டியில் தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ-யும், ஐ.எஃப்.எஸ்.சி நிறுவனமும் இணைந்து ஒரு பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளன. இதன்மூலம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் 50 பங்கு களில் நேரடியாக முதலீடு செய்ய முடியும். இந்த மாதம் 3-ம் தேதி முதலே இந்த முதலீட்டை செய்ய முடியும் என என்.எஸ்.இ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

எனினும், ஆரம்பகட்டத்தில் ஆல்பபெட், ஆப்பிள், டெஸ்லா, மெட்டா (ஃபேஸ்புக்), மைக்ரோ சாஃப்ட், நெட்ஃப்ளிக்ஸ், வால்மார்ட் ஆகிய எட்டு பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியும். அடுத்து வரும் நாள்களில் மீதமுள்ள 42 பங்கு களையும் இந்த பிளாட்ஃபார்ம் மூலம் வர்த்தகம் செய்யும் நிலை உருவாக்கப் படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பெர்க்‌ஷையர் ஹாத்வே, மாஸ்டர் கார்டு, ஜே.பி.மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி, நைக், பேபால், பெப்சிகோ, இன்டெல் போன்ற பங்குகள் அடுத்த சில மாதங்களில் முதலீட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் என்.எஸ்.இ தெரிவித்திருக்கிறது.

ரூ.2.5 லட்சம் வரை...

நம்மூரில் இருக்கும் முதலீட்டாளர் கள் இந்த பிளாட்ஃபார்மில் வர்த்தக மாகும் அமெரிக்கப் பங்குகளை வாங்க நினைத்தால், அதிகபட்சமாக 2.5 லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்ய முடியும். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2.25 கோடி ஆகும். அமெரிக்கப் பங்குகள் ஒவ்வொன்றின் விலை நூறு டாலர்களுக்கு மேல் இருக்கும். எனவே, ஓரளவு அதிக முதலீடு இருந்தால் மட்டுமே அமெரிக்கப் பங்குகளை வாங்க முடியும்.

ஐ.எஃப்.எஸ்.சி-யில் டீமேட் கணக்கு தொடங்குவதன் மூலம் அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் இண்டியா இன்டர்நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்கிற அமைப்பை கிஃப்ட் சிட்டியில் அண்மைக் காலமாக நடத்தி வருகிறது. இதன் மூலமும் அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும்.

அமெரிக்கப் பங்குகளை வாங்க நினைப்பவர்கள் இனி அந்த வாய்ப்பையும் கட்டாயம் பரிசீலிக்கலாமே!