Published:Updated:

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்கள் இணைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

வங்கி இணைப்பு
பிரீமியம் ஸ்டோரி
வங்கி இணைப்பு

வங்கி இணைப்பு

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்கள் இணைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

வங்கி இணைப்பு

Published:Updated:
வங்கி இணைப்பு
பிரீமியம் ஸ்டோரி
வங்கி இணைப்பு

நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன், முன்னணி வீட்டுக் கடன் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி இணைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை வங்கி நிர்வாகக் குழு வழங்கியுள்ளது. இந்த இணைப்பு அறிவிப்பு வெளியானதும் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனப் பங்கு விலை 15%, ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனப் பங்கு விலை 13% உயர்ந்து வர்த்தகமானது. இந்த இணைப்புக்குப் பிறகு, ரூ.2 முகமதிப்பு கொண்ட 25 ஹெச்.டி எஃப்.சி லிமிடெட் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட 42 ஹெச்.டி.எஃப்.சி பேங்க் பங்குகள் கிடைக்கும். இந்த இணைப்பு நடவடிக்கைகள் நிறைவு பெற 15 - 18 மாதங்கள் வரை ஆகலாம்.

ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட ஒழுங்கு முறை அமைப்பு களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இணைப்பு நடவடிக்கை செயல்படுத்தப் படும். இந்த இணைப்பு நடவடிக்கை பற்றியும் இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம் என்பது பற்றியும் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் கூறியதாவது...

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்கள் இணைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

‘‘வீட்டுக் கடன், அடமானக் கடன் பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக உள்ள ஹெச்.டி.எஃப்.சி நல்ல வருவாயுடன் லாபத்தையும் ஈட்டி வருகிறது. இந்த இரு பெரும் நிறுவனங் களும் இணைவதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் அதிக நன்மைகள் நடக்கும் சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கி இதன்மூலம் இந்திய வங்கித்துறையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. அண்மைக் காலத்தில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியானது அதற்கு விதிக்கப்பட்ட தடைகளைக் கடந்து வந்துள்ள நிலையில், தற்போது இந்த இணைப்பு நடவடிக்கை அதன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு உந்துதலாக இருக்கும்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.9.19 லட்சம் கோடி; ஹெச்.டி.எஃப்.சியின் சந்தை மதிப்பு ரூ.4.86 லட்சம் கோடி. இவை இரண்டு இணையும்போது அதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.14.05 லட்சம் கோடியாக இருக்கும். இதன்மூலம் சந்தை மதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற இடத்தைப் பிடிக்கும். நிகர லாப விஷயத்திலும் இந்த இரு நிறுவனங்களும் இணையும்போது மிகப் பெரிய மாற்றத்தை அடைய முடியும்.

இந்த இணைப்புக்குப் பிறகு, ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் வைத்துள்ள 21% பங்குகள் முடிவுக்கு வந்துவிடும். மேலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 100% பொதுப் பங்குதாரர்களின் வசம் இருக்கும். ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் பங்குதாரர்கள் இணைப்புக்குப் பிறகு ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் 41% பங்குகளுக்குச் சொந்தக்காரர் களாக இருப்பார்கள். இதன்மூலம் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு வாய்ப்பு 7% கூடுதலாகக் கிடைக்கும். இந்த இணைப்புக்குப் பிறகு, இந்த நிறுவனத்தில் அதிகபட்சமாக 65% - 67% வெளிநாட்டுப் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனங்கள் இணைப்பு... முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

தற்போதைய மதிப்பின்படி, ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்திடம் ரூ.6.23 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியிடம் ரூ.19.38 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து களும் உள்ளன. எஸ்.பி.ஐ வங்கி யுடன் ஒப்பிடுகையில் ஹெச்.டி. எஃப்.சி வங்கி குறைவான மதிப்பிலான சொத்துகளையே வைத்துள்ளது. இந்த இணைப்புக் குப் பிறகு, எஸ்.பி.ஐ இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு குழுமத்தில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே குறிப்பிட்ட தொழில் சார்ந்து இயங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்பு விதிமுறை வைத்திருந்தது. ஆனால், காலப்போக்கில் சில விதிமுறைகளை ஒருங்கிணைத் தது. அதன்படி, சில நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. அது வங்கி, நிதிசார் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது.

மேலும், ரியல் எஸ்டேட்டில் கடந்த சில ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் நடந்துள்ளன. வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. ரெரா, திவால் சட்டம் போன்றவை நல்ல மாற்றங்களை உண்டாக்கி யுள்ளன. இந்த நிலையில், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைவதன் மூலம் குறைந்த செலவில் கடன்களை வழங்க முடியும்.

தற்போது ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் நிறுவனத்தின் செலவினம் / வருவாய் இடையிலான விகிதம் 8.1 சதவிகிதமாக உள்ளது. இணைப்புக்குப் பிறகு, இந்த விகிதம் குறையும். ஹெச்.டி.எஃப்.சி தனி நிறுவனமாக இயங்கி வந்ததால், ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வீட்டுக் கடன் சேவைகள் வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை இருந்தது. அதாவது, ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் நிறுவனத்தின் 70% வாடிக்கையாளர்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சேவைகளுக்குள் வருவ தில்லை. அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு ஏழு கோடி வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அடமானக் கடன்கள் வழங்குவது மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன் வாடிக்கையாளர்கள் வேறு வங்கி களில் இருந்து அடமானக் கடன்களைப் பெற்று வருகின்றனர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் கோடி. தற்போது இணைப்பின் மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதால், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வர்த்தகமும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்.

இந்த இணைப்பில் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் மட்டுமல்லாமல், ஹெச்.டி.எஃப்.சி ஹோல்டிங்ஸ், ஹெச்.டி.எஃப்.சி இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகியவையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த இணைப்பின் மூலம் ஒரே ஒரு தொழில் என்ற ரிஸ்க் விலகும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகி, அதிகமான அடமானக் கடன்களையும் வழங்க முடியும். ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்குப் புதிதாக மூலதனத்தைக் கொண்டு வர வேண்டிய தேவை இருக்காது என்பதால், அடமானக் கடன் பிசினஸில் இருக்கும் தடைகளும் விலகும். இதன்மூலம் மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்பு கிடைக்கும்.

ஹெச்.டி.எஃப்.சி சேல்ஸ் நிறுவனம் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் துணை நிறுவனமாக இருக்கும். ஹெச்.டி.எஃப்.சி சேல்ஸ்தான் ஹெச்.டி.எஃப்.சி லிமிடெடின் 52% பிசினஸை நிர்வகிக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட் சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் அனைத்தும் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின்கீழ் நிர்வகிக்கப்படும். ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நிர்வாகம் தொடர்ந்து இணைப்புக்குப் பிறகான நிறுவனத்தையும் நிர்வகிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு 6,500 கிளைகள் உள்ளன. ஹெச்.டி.எஃப்.சி-க்கு 650-க்கும் மேற்பட்ட அலுவலகங் கள் உள்ளன. ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு அதன் விநியோகம் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்து தொடர்ந்து முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் உள்ளது. சமீப காலத்தில் அதன் செலவினம், வருமானம் இடையிலான விகிதம் மோசமடைந்தாலும், அது தொடர்ந்து முதலீடு செய்துவந்துள்ளது. எனவே, நீண்டகால அடிப்படையில் இந்த இணைப்பு ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளையும் வளர்ச்சி யையும் தரும்’’ என்றார்.

ஹெச்.டி.எஃப்.சி நிறுவனப் பங்கில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் நிச்சயம் பரிசீலிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism