Published:Updated:

ஏற்றத்தில் சந்தை... எதிர்காலத்தை வளமாக்க கைகொடுக்கும் 5 பங்குகள்! முதலீட்டுக்கு வழிகாட்டல்...

ஏற்றத்தில் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றத்தில் சந்தை

C O V E R S T O R Y

ஏற்றத்தில் சந்தை... எதிர்காலத்தை வளமாக்க கைகொடுக்கும் 5 பங்குகள்! முதலீட்டுக்கு வழிகாட்டல்...

C O V E R S T O R Y

Published:Updated:
ஏற்றத்தில் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
ஏற்றத்தில் சந்தை

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை ஆலோசகர்

செல்வத்தைப் பெருக்குவது நீண்டகால அடிப்படை யிலான ஒரு திட்டமாகும். இதைப் புரிந்துகொள்ள பின்வரும் உதாரணத்தைக் கருத்தில் கொள்ளலாம். இதுவரையிலான இரண்டு ஊரடங்கு காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள், தோட்டம் உருவாக்குவது இயற்கை விவசாயம் போன்ற நடவடிக்கைகளில் இறங்கி யிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் நாம் விரும்பிய பலனைத் தரும்போது நம் இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. நம்முடைய முதலீட்டு முடிவுகள் நம் செல்வத்தை அதிகரிக்கும் வகையில் வருமானத்தை அளிக்கும்போது இதேபோன்ற மகிழ்ச்சி நமக்கு உண்டாகிறது. நாம் இந்த இலக்கை அடைய முக்கியமான நிபந்தனைகள் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை 
ஆலோசகர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை ஆலோசகர்

1. மண் தேர்வு செய்தல் = முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்தல்.

2. பயிர் / தாவரத்தின் தேர்வு = பங்குத் தேர்வு.

3. களை எடுத்தல் & கத்தரித்தல் = போர்ட்ஃபோலியோவை மறுசீரமைத்தல்.

4. வேலி அமைத்தல் = ரிஸ்க்கைக் குறைக்கும் ஹெட்ஜிங் செய்தல்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்குத் தேவையானது பொறுமை. பயிர்கள் ஒரே நாளில் விளைவதில்லை. அதேபோல், செல்வத்தைப் பெருக்கவும் குறிப்பிட்ட காலம் தேவை. செல்வத்தை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது, லாட்டரி சீட்டு வாங்குவதற்குச் சமமானது. செல்வத்தை முறையாகவும், உத்திகள் ரீதியாகவும் பெருக்க நினைத்தால் பொறுமை நிச்சயம் வேண்டும்.

1983-ல் யாராவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தால், 35 ஆண்டுகளில் அவர் கோடீஸ்வரராக ஆயிருப்பார் என்பார்கள். ஆனால், செய்திருந்தால்... நடந்திருந்தால்... என்கிற கடந்த கால வெற்றிக் கதைகள் நமக்கு சில முக்கியமான படிப்பினைகளைத் தருகின்றன.

1. நீண்டகாலத்தில் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் ஒரு துறையிலிருந்து சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது.

2. வளர்ச்சிக்கான சாத்தியங்கள் நிலையாக இருக்கும் பங்குகளை நம்பி, சந்தை இறக்கங்களின்போது அந்தப் பங்குகளை மேலும் சேர்ப்பது.

3. அந்தப் பங்குகளை நீண்டகாலத்துக்கு வைத்திருந்து, பொறுமையுடன் காத்திருப்பது.

இனி தற்போதைய சூழ்நிலையில் நமக்குப் பயனளிக்கும், செல்வத்தை உருவாக்கும் உத்திகளைப் பார்ப்போம்.

முதலீட்டு திட்டங்களைத் தேர்வு செய்தல்...

நம்முடைய செல்வம் வளர, சரியான முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியின் முக்கியப் பங்களிப்பாளர்களாக இருக்கும் துறைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட சிறப்பான துறைகளாக தோன்றும் சில... பார்மா, ஐ.டி, நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பு & ஆடம்பரப் பொருள்கள் மற்றும் நிதிச் சேவைத் துறை. இவை வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளாக உள்ளன, மேலும், இவை பொருளாதாரத்துக்குப் பெரிய அளவில் பங்களிப்பவையாகவும், நாட்டின் அடுத்த டிரில்லியன் டாலர் வளர்ச்சியில் பங்கெடுப்பவையாகவும் உள்ளன.

நிறுவனப் பங்குகளின் தேர்வு...

வளமான மண்ணில் விதைக்கும் பயிர்களின் வீரியம் தரம் ஆகியவை பொறுத்து அவற்றின் வளர்ச்சி இருக்கும். அதேபோல, செல்வத்தைப் பெருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் இருந்து தரமான சரியான பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

அப்படியான சில பங்குகள் உங்களுக்காக: 1. பார்மா- லாரஸ்லேப்ஸ் (Laurus Labs), சிஞ்சன் (Syngene); 2. ஐ.டி- எல்டி இன்ஃபோடெக், டி.சி.எஸ், மாஸ்டெக் (Mastek); 3. நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பு - ஐ.டி.சி, இமாமி (Emami); 4. ஆடம்பர நுகர்வுகள் - வோல்டாஸ் (Voltas); 5. நிதி, காப்பீடு - ஹெச்.டி.எஃப்.சி, ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ்; 6. ஆட்டோ உதிரிபாகம்- எக்சைட், சியட் (CEAT), டி.வி.எஸ் மோட்டார், ஜி.என்.ஏ ஆக்சல்ஸ் (GNA AXLES)

ஏற்றத்தில் சந்தை... எதிர்காலத்தை வளமாக்க கைகொடுக்கும் 5 பங்குகள்! முதலீட்டுக்கு வழிகாட்டல்...

பங்குகள்... விளக்கங்கள்...

இனி சில பங்குகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. லாரஸ் லேப்ஸ் (Laurus Labs)

பார்மா சந்தையில் மிகவும் விருப்பமான பங்காக இது உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனம் வளர்ச்சி சாத்தியங்கள் அதிகமுள்ள நான்கு முக்கிய தயாரிப்புகளில் கவனம் செலுத்து கிறது. அவை, ஏ.பி.ஐ (API), எஃப்.டி.எஃப் (FDF), பார்மா உபபொருள்கள் மற்றும் சிந்தசிஸ் ஆகியவை ஆகும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்பு செய்த முதலீடுகளளிந்த நிறுவனத்தை முன்னணி பார்மா உபபொருள்களின் உற்பத்தியாள ராக மாற்றியுள்ளது. குறிப்பாக, ஆன்டி ரெட்ரோவைரல், ஹெப்பாடிட்டீஸ் சி மருந்துகள், ஆங்காலஜி ஏ.பி.ஐ மற்றும் பிற தெரபிக் மருந்துகளுக்கான தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க உணவு மற்றும் உணவுக் கழகத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. தவிர, இந்த நிறுவனம் முன்னணி பன்னாட்டு பார்மா நிறுவனங்களுடன் நீண்டகால சுமுக வர்த்தக உறவில் இருந்துவருகிறது. இதன் டாப் தொழில் கூட்டாளி நிறுவனங்கள் இதனுடன் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு களுக்கு வர்த்தக உறவில் இருந்து வருகின்றன. இவை இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 67.8% பங்கு வகிக் கின்றன. இவற்றின் மூலமான ஒருங்கிணைந்த வருவாய் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. மூலதனத்தின் மீதான வருமானம், நிகர விற்பனை, வருவாய் ஆகியவை தொடர்ந்து வலுவாக வளர்ச்சி கண்டு வருகிறது.

2. மாஸ்டெக் (Mastek)

மாஸ்டெக் உலகளாவிய தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய பசிபிக் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான டிஜிட்டல் மற்றும் மென்பொருள் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் சமீபத்திய நிதிநிலை முடிவுகள் மிக வலுவான விற்பனையால் வருவாய் மற்றும் லாபம் இரண்டும் சிறப்பான வளர்ச்சியுடன் உள்ளன. இந்தப் பங்கு ஒரு வருடத்தில் 608% விலை உயர்ந்துள்ளது. உலக அளவில் டிஜிட்டல் சேவைகளின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2021-2026 காலத்தில் இந்தத் துறை ஆண்டுக்கு 18.5% வளர்ச்சியுடன் முன்னேறும் என்பதால், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி சாத்தியங்கள் சிறப்பாக உள்ளன.

3. வோல்டாஸ் (Voltas)

இது இந்தியாவின் மிகப்பெரிய குளிர்சாதன விற்பனை நிறுவனமாகும். மேலும், உள்கட்டமைப்புத் திட்ட மேலாண்மைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் என்ற நற்பெயரும் இதற்கு உண்டு. இதனால் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், தொழில்நுட்பம், பொறியியல், கட்டுமானம், குளிரூட்டுதல் மற்றும் வென்டிலேஷன், உள்கட்டமைப்பு திட்டங்கள், டெக்ஸ்டைல், சுரங்கம், மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் நிகரற்ற நிபுணத்துவத்தை ஏற்றுமதியும் செய்துவருகிறது. இதனால் மிகவும் நம்பகமான பொறியியல் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக இது விளங்குகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 70 லட்சம் குளிர் சாதனங்கள் விற்பனை ஆகிறது எனில், சீனாவில் 9 கோடி அளவுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு, இந்தியாவின் தட்ப வெப்பம், பொருளாதாரம் போன்றவை காரணமாக இருந்தாலும் தொடர்ந்து குளிர்சாதனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சி காண வாய்ப்பிருக்கிறது.

4. ஹெச்.டி.எஃப்.சி லைஃப் (HDFC Life)

கொரோனா பெருந்தொற்று ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங் களுக்கான தேவையை அதிகரித்து உள்ளன. இதனால் ஒட்டுமொத்த துறையும் வளர்ச்சிக்கான சாத்தியங் களுடன் இருக்கிறது. இந்தியாவில் மிகக் குறைவானோர் மட்டுமே காப்பீட்டு பாலிசி எடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து காப்பீடுகளுக்கான தேவை நிலையாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தத் துறையின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும். அடுத்த 5 - 6 வருடங்களில் 12 - 15% சராசரியாக வளர்ச்சியடையும். இந்தத் துறையின் முன்னணி நிறுவன மான ஹெச்.டி எஃப்.சி லைஃப் நிலை யான வலுவான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியைக் கொண்டிருப் பதால் தொடர்ந்து கவர்ச்சிகரமான பங்காக உள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்தப் பங்கு 35% ஏற்றம் கண்டுள்ளது.

5. எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் (Exide Industrie)

இந்தியாவின் முன்னணி வாகன மற்றும் தொழில்துறைகளுக்கான லெட் ஆசிட் பேட்டரிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் இது. இந்தத் துறையில் உலகளவில் நான்காவது பெரிய நிறுவனம். இந்தப் பங்கின் தற்போதைய விலை கவர்ச்சிகரமான மதிப்பில் உள்ளது. தனிநபர் போக்கு வரத்து வாகனங்களுக்கான தேவையும், மாற்று மின்சக்திக்கான தேவையும் அதிகரித்திருப்பதால், பேட்டரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, இதன் பலனை அடையும் இந்த நிறுவனப் பங்கையும் போர்ட் ஃபோலியோவில் வைத்துக் கொள்ளலாம்.

இனி வேகமாக வளரும்...

செல்வம் பெருக்குவது குறித்து திட்டமிடுவதற்குமுன் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிய வளர்ச்சியைத் தரும் திறன் சந்தைக்கு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதாவது, இந்தியா தனது முதல் ட்ரில்லியன் டாலர் ஜி.டி.பி-யை (மொத்த உள்நாட்டு உற்பத்தி) எட்ட 58 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. அடுத்த ட்ரில்லியன் டாலர் ஜி.டி.பி-யை 7 ஆண்டுகளில் எட்டியது. அடுத்த ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியை 2023-ல் எட்டும் என்றும் 5 டிரில்லியன் டாலர் இலக்கை 2028-30-களில் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சியின் போக்கு முதலீட்டாளர்களுக்கு செல்வத்தைப் பெருக்கும் மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இதுவரை நாம் தவறவிட்டு வந்த இந்த வாய்ப்புகளை இனியேனும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சந்தையில் காணப்படும் மகத்தான வாய்ப்புகள் அந்நிய முதலீட்டாளர் களைக் கவரக்கூடியதாகவும், மற்றும் இந்தியாவுக்குள் சவரன் வெல்த் ஃபண்டுகளை ஈர்க்கக்கூடிய தாகவும் இருக்கிறது. முதலீட்டாளர் களாகிய நாம் செல்வத்தைப் பெருக்கு வது என்பது நீண்டகால உத்தி என்பதையும் இது தினசரி தலைப்பு செய்திகளின் அடிப்படையில் இயங்குவதில்லை என்பதையும் உணர வேண்டும். வளர்ச்சிக்கான சாத்தியங்கள் நீடித்திருக்கும் வரை முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கில் உண்டாகும் இறக்கங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பங்குச் சந்தையில் இறக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இந்த இறக்கங்கள் முதலீட்டாளர்களுக்கு தங்கள் போர் ட்ஃபோலியோவைச் சீரமைத்துக் கொள்ளவும் தேவை யற்றதை நீக்கவும், தேவையானதை சேர்க்கவும் உதவுகிறது. நீண்டகால அடிப்படை யில் இவற்றை மேற்கொள் வதன் மூலம் செல்வத்தைப் பெருக்கும் இலக்கை அடையலாம்.

இங்கு தரப்பட்டுள்ள பங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பங்குகள் மட்டுமே. இவை போலவே, தரமான நல்ல பங்குகள் பல உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். முன்பே கூறியதுபோல விவசாயம் செய்வதுபோலத்தான் முதலீடு மேற்கொள்வதும். சரியான துறைகளிலிருந்து நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள பங்கு களைத் தேர்வு செய்து அதன் வளர்ச்சிக்கான கால அவகாசத்தைக் கொடுங்கள். இவைதான் செல்வத் தைப் பெருக்க செய்ய வேண்டிய முக்கிய செயல்பாடுகள்.

எதை வளர்க்க வேண்டுமென்று புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத் தால், அறுவடை பற்றி கவலைப்பட வேண்டியிருக்காது.

தமிழில்: திவ்யா

ஏற்றத்தில் சந்தை... எதிர்காலத்தை வளமாக்க கைகொடுக்கும் 5 பங்குகள்! முதலீட்டுக்கு வழிகாட்டல்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism