Published:Updated:

ஒருங்கிணைந்த பின்னோக்கிய வணிக உத்தி... ரிலையன்ஸ் சாதித்தது எப்படி?

சகோதர்களுக்கிடையே சில பல சச்சரவுகள் எழுந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனம் ஜெட் வேகத்தில் முன்னேறவே செய்தது. அதற்குக் காரணம், முகேஷின் அதிசயிக்கத்தக்க நிர்வாகம்.

2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி காலமான பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் முகேஷ் - அனில் அம்பானி சகோதர்களின் கைகளுக்கு வந்தது. சகோதர்களுக்கிடையே சில பல சச்சரவுகள் எழுந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனம் ஜெட் வேகத்தில் முன்னேறவே செய்தது. அதற்குக் காரணம், முகேஷின் அதிசயிக்கத்தக்க நிர்வாகம்.

2009-ம் ஆண்டில் ரிலையன்ஸ் எரிசக்தித் துறையில் நுழைந்தது. கிருஷ்ணா கோதாவரி திருபாய்-6 (KGD-6) தளத்தில், ஹைட்ரோகார்பன் தயாரிப்பில் மிகச் சிறப்பாக ஈடுபட்டது. ஆழ்கடலிலிருந்து எரிபொருள்கள் எடுக்கும் புராஜெக்டை முழுக்க முழுக்க சுயமாகக் கட்டமைத்து, மிகத் துரிதமாகச் செயல்பட்டது. உலகிலேயே இதுவரை யாரும் கண்டிராத வகையில், சப்ளையர்களுடன் இணைந்து வணிக உத்தியில் சாதனை படைத்தது.

சிறப்புக் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

'ஒவ்வோர் இந்தியரின் அன்றாட வாழ்விலும் ஒரு பங்களிப்பைத் தர வேண்டும்' என்ற துடிப்பே ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சில்லறை வணிகத்திலும் ஈடுபடத் தூண்டியது. 2014-ம் ஆண்டில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ் ஃபுட்வேர், ரிலையன்ஸ் ஹைப்பர் போன்றவற்றை இந்திய வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடிய விதத்தில் அமைத்தது. இத்துடன் ரிலையன்ஸின் சில்லறை வர்த்தகப் பயணம் முடிந்து விடவில்லை. `வாங்கக்கூடிய விலை; அதிவேக இணையத் தொடர்பு’ என்பதே இந்திய மொபைல்போன் பயனாளர்களை மொத்தமாக அறுவடை செய்வதற்கான வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்டது ரிலையன்ஸ். ஜியோ (வாழ்க்கையை வாழ்) மூலமாக அதைச் சாத்தியமாக்கி, டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியது.

2017-ம் ஆண்டு 40-வது ஆண்டைத் தொட்டது ரிலையன்ஸ். ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்போலத் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ், உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் தனது பன்முகத் தன்மைவாய்ந்த தொழில் செயல்பாடுகள் காரணமாக, 'ரூ.9 லட்சம் கோடி பங்குச் சந்தை மூலதன மதிப்புடைய முதல் இந்திய நிறுவனம்' என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது.

'பாலியஸ்டர் புராஜெக்ட்' ரிலையன்ஸின் திறமையை நிரூபிக்கிறது என்றால், 'ஹைட்ரோ கார்பன் புராஜெக்ட்' அதன் வெற்றி மகுடத்தில் முக்கியமான ஓர் அங்கம். மேம்பட்ட செயல்திறன் மற்றும் சிக்கனமான செலவை எதிர்பார்க்கும் நிறுவனங்கள், சப்ளையுடன் ஒருங்கிணைந்த வணிக உத்தியைத் தொடர்கின்றன. அதுபற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> bit.ly/2MuIi5Z |

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, மூலப்பொருள்கள் உற்பத்தி, அதிலிருந்து பொருள்களைத் தயாரித்தல், இறுதியாகப் பொருள்களை விநியோகித்தல் என்பதே வணிக உத்தி. ஆனால், ரிலையன்ஸில் இந்த உத்தி சப்ளையர்களுடன் இணைந்திருந்தது. இதில், பொருள் விற்பனைச் சங்கிலியின் மையப்புள்ளியாக விநியோகத்தை எடுத்துக் கொண்டால், பொருள்களை உற்பத்தி செய்தல், மூலப்பொருள்களை விநியோகம் செய்தல் ஆகியவை இவற்றுக்குப் பிறகு ஒருங்கிணைந்து நடக்கும். இதுதான், 'ஒருங்கிணைந்த பின்னோக்கிய வணிக உத்தி' (Backward Integration).

இதில் மூலப்பொருள்கள் விநியோகம், இந்தச் சங்கிலியின் இறுதியில் மிகச்சிறிய பகுதியாக இருக்கும். ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை, பாலியஸ்டர் மற்றும் ஹைட்ரோகார்பன் புராஜெக்ட்டில் பின்னோக்கிய வணிக உத்தி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் பொருள்களின் விநியோகத்தில் இறங்கியது. பிறகு, தேவைக்கேற்ப மூலப்பொருள்களையும் சப்ளை செய்தது. இதனால் ரிலைன்ஸின் செலவு குறைந்து, வருமானம் அதிகரித்தது.

- 1966-ம் ஆண்டு, ஒரே ஒரு பணியாளருடன் வெறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது முதல் 'ரூ.9 லட்சம் கோடி பங்குச் சந்தை மூலதன மதிப்புடைய முதல் இந்திய நிறுவனம்' என்ற பெருமையை அடைந்தது வரையிலான ரிலையன்ஸ் பயணத்தை விரிவாகப் பதிந்ததுடன், லையன்ஸ் பங்கு முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அடுக்கும் சிறப்புக் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> bit.ly/2MuIi5Z |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு