Published:Updated:

பங்குச் சந்தை, ஃபண்ட், காப்பீடு, தங்கம்... எந்தப் புகார், எங்கு தெரிவிக்க வேண்டும்?

 புகார்
பிரீமியம் ஸ்டோரி
புகார்

புகார்

பங்குச் சந்தை, ஃபண்ட், காப்பீடு, தங்கம்... எந்தப் புகார், எங்கு தெரிவிக்க வேண்டும்?

புகார்

Published:Updated:
 புகார்
பிரீமியம் ஸ்டோரி
புகார்
ஆர்.வெங்கடேஷ்,  
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்,   நிறுவனர்,  www.gururamfinancialservices.com

வங்கி தொடர்பான புகார்களை முதலில் வங்கிக் கிளை மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவரிடமிருந்து ஒரு மாதக் காலத்துக்குள் பதில் வரவில்லை எனில் அல்லது புகாரை வங்கியானது தள்ளுபடி செய்தால் அல்லது வங்கியின் பதிலில் திருப்தி இல்லையெனில், வங்கி குறை தீர்ப்பாயத்தை அணுக வேண்டும்.

உங்கள் முதலீடு பற்றி உங்களுக்குப் பல்வேறு சிக்கல்கள், பிரச்னைகள் இருக்கலாம். இதைச் சரியான அமைப்பிடம் தெரிவித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நீங்கள் எந்தப் புகாருக்கு எந்தக் குறை தீர்க்கும் அமைப்பிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பாண்டுகள் போன்ற பத்திரங்கள் தொடர்பான புகார்கள்..!

பத்திரங்கள் (Securities) சார்ந்த புகார்கள் அல்லது மோசடி குறித்து முதலில் தொடர்பு டைய நிறுவனத்திடம் எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். இங்கே பத்திரங்கள் என்பவை நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் போன்றவற்றைக் குறிக்கும்.

நிறுவனத்தின் பதில் மற்றும் நடவடிக்கை நிறைவு அளிப்பதாக இருந்தால், அத்துடன் பிரச்னை முடிந்துவிடும். அப்படி இல்லை, பதில் மற்றும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லையெனில், உயர் அதிகாரிகளுக்குப் புகாரைக் கொண்டு செல்லலாம். அங்கும் நடவடிக்கை திருப்தியில்லை எனில், செபி அமைப்பை அணுக வேண்டும். https://scores.gov.in/scores/Welcome.html என்கிற இணைய தளத்தில் புகார் செய்ய வேண்டும். தேவைப் பட்டால் கட்டணமில்லா எண்களான 1800 266 7575, 1800 22 7575 அழைத்துப் பேசலாம்.

ஆனால், எந்தப் புகாரையும் எடுத்த எடுப்பிலேயே செபியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிடக் கூடாது. மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

பங்குச் சந்தை, ஃபண்ட், காப்பீடு, தங்கம்... எந்தப் புகார், எங்கு தெரிவிக்க வேண்டும்?

2. வங்கி தொடர்பான புகார்கள்

வங்கி தொடர்பான புகார்களை முதலில் வங்கிக் கிளை மேலாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவரிடமிருந்து ஒரு மாதக் காலத்துக்குள் பதில் வரவில்லை எனில், அல்லது புகாரை வங்கியானது தள்ளுபடி செய்தால் அல்லது வங்கியின் பதிலில் உங்களுக்குத் திருப்தி இல்லை எனில், ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) உருவாக்கி இருக்கும் வங்கி குறை தீர்ப்பாயத்தை (Banking Ombudsmen) அணுக வேண்டும்.

ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்க நினைத் தால், https://cms.rbi.org.in/cms/indexpage.html#eng என்கிற இணையதளத்திலும், எழுத்து மூலம் புகார் தெரிவிக்க நினைத்தால், RBI Ombudsmen,C/o Reserve Bank of India, Fort Glacis, Chennai 600 001 என்கிற முகவரிக்குப் புகாரை அனுப்பலாம். 044-2539 5964 என்கிற போன் நம்பருக்கு போன் மூலம் புகார் செய்யலாம். அல்லது 044-25395488 என்கிற எண்ணுக்கு ஃபேக்ஸ் அனுப்பலாம். crpc@rbi.org.in என்கிற மின்னஞ்ச லுக்கும் புகார் அனுப்பலாம்.

வங்கி குறை தீர்ப்பாயம், வங்கி வாடிக்கையாளர்கள் புகாரைப் பதிவு செய்ய கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை. மேலும், பிரச்னையைத் தீர்த்து வைக்க கட்டணம் எதையும் வசூல் செய்வதில்லை.

3. காப்பீட்டு தொடர்பான புகார்கள்

காப்பீடு சார்ந்த புகார்கள் அல்லது மோசடிகள் குறித்து முதலில் தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திடம் மெயில் அல்லது எழுத்து மூலம் புகார் தெரிவிக்க வேண்டும். உங்கள் புகாருக்குத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ குறை தீர்ப்பு கால்சென்டருக்கு (IRDAI Grievance call centre - கட்டணமில்லா எண்கள் 155255 அல்லது 1800 4254 732, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை) மூலம் புகார் தெரிவிக்கலாம். அல்லது ஐ.ஜி.எம்.எஸ் இணையதளம் (Integrated Grievance Management System - IGMS PORTAL - https://igms.irda.gov.in/loginph.aspx) மூலம் புகார் தெரிவிக் கலாம். அப்படியும் திருப்தியான நடவடிக்கை இல்லை எனில், காப்பீட்டுத் தீர்ப்பாயம்/ நுகர்வோர் நீதிமன்றம் / உரிமையியல் நீதிமன்றம் (OMBUDSMAN/CONSUMERFORUM/CIVIL COURT) அணுகி புகார் தெரிவித்து பிரச்னைக்குத் தீர்வு காணலாம். உங்கள் புகாரை அனுப்ப வேண்டிய முகவரி: Insurance Ombudsman, Office of the Insurance Ombudsman, Fathima Akhtar Court, 4th Floor, 453 (old 312), Anna Salai, Teynampet, Chennai - 600 018.

Tel.:- 044-2433 3678, 044-2433 5284. Mobil : 95001 37175,

Email: chennaiinsuranceombudsman@gmail.com

4. ஓய்வூதியம் தொடர்பான புகார்கள்...

ஓய்வூதியம் தொடர்பான புகார்கள் அல்லது மோசடிகள் குறித்து பி.எஃப்.ஆர்.டி.ஏ (PFRDA) அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம். https://www.npstrust.org.in/grievance-redressal என்கிற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். இதன் சென்னை முகவரி வருமாறு: NPSCRA NSDL, 6A, 6th Floor, Kences Towers, #1 Ramkrishna Street, North Usman Road, T. Nagar, Chennai - 600 017. Tel.044 2814 3917, 044 2814 3918,

Fax : 044 2814 4593.

தலைமை அலுவலகத்துக்கு எழுத்து மூலம் புகார் தெரிவிக்க நினைத்தால், Grievance Redressal Cell, PFRDA, B-14/A, Chatrapati Shivaji Bhawan, Qutab Institutional Area, Katwaria Sarai, New Delhi - 110 016. Email id: grc@pfrda.org.in

பங்குச் சந்தை, ஃபண்ட், காப்பீடு, தங்கம்... எந்தப் புகார், எங்கு தெரிவிக்க வேண்டும்?

5. தங்கச் சேமிப்புத் திட்டங்கள்

தங்க நகைக் கடைகளால் நடத்தப்படும் தங்கச் சேமிப்புத் திட்டங்கள் குறித்த புகார்களை நிறுவன விவகார அமைச்சகம் (MCA) அல்லது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் தெரிவிக்க வேண்டும். தங்க நகையின் தரம் தொடர்பான புகார்களை https://www.bis.gov.in/index.php/consumer-overview/consumer-overviews/online-complaint-registration/ என்கிற இணைப்பில் தெரிவிக்கலாம்.

6. ரியல் எஸ்டேட்

வீடு, மனை வாங்குவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ரெரா அமைப்பிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

நீண்ட காலமாக ஒப்படைக்கப் படாமல் இருக்கும் வீடு, அதிக தொகை கேட்பது போன்றவை குறித்து இந்த அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.

Tamil Nadu Real Estate Regulatory Authority (TNRERA), No.1A,

1st Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai – 600008.

Complaint Registration: 044- 2888 7912, 044-2888 7914; 044-2888 7919; Email: contact.tnrera@tn.gov.nWebsite: https://www.rera.tn.gov.in

சிட் ஃபண்ட், புதிய பென்ஷன் திட்டம், வீட்டு வசதி உள்ளிட்ட நிதிச் சார்ந்த புகார்களுக்கு எங்கே முறையிடுவது என்பதை மேலே உள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism