Published:Updated:

பங்குச் சந்தையையும் விட்டுவைக்காத ஏ.ஐ... இந்தியாவில் 'ஆல்கோ' நிலை என்ன?

ஆல்கோ
ஆல்கோ

பங்குச் சந்தையில் ஏ.ஐ-யின் செயல்பாடுகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. தனிமனிதர்களாக நாம் ஏ.ஐ.யின் பயன்களைப் பெறுவது கடினம்.

நீல் ஆம்ஸ்ட்ராங் எனும் தனிமனிதன் நிலவில் எடுத்துவைத்த ஒரு அடி, ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் அசுரப் பாய்ச்சல் என்று கூறுவார்கள். அப்படி மனிதக்குலம் எடுத்த இன்னொரு பாய்ச்சல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence, சுருக்கமாக, AI). இன்று இதன் தாக்கம் நம் வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் பிரதிபலிக் கிறது. எல்லாவிதமான உபகரணங்களிலும் இது நீக்கமற நிறைந்திருந்தாலும், அலெக்ஸா போன்ற அறிவுஜீவிகளில் பளிச்சென வெளிப்பட்டு நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2mjlfSc

இவ்வளவும் செய்யும் ஏ.ஐ, பங்குச் சந்தையை மட்டும் விட்டு வைக்குமா என்ன? கற்கால மனிதனுக்குக் கிடைத்த வரம் நெருப்பு என்பது போல, ஸ்டாக் டிரேடிங்கிற்குக் கிடைத்த வரம் செயற்கை நுண்ணறிவு என்று சொல்லும் அளவுக்கு, அல்கோரித்மிக் டிரேடிங்மூலம் பங்குச் சந்தையை ஆளுகிறது ஏ.ஐ.

தனிமனிதர்களாக நாம் ஏ.ஐ.யின் பயன்களைப் பெறுவது கடினம். காரணம் அதற்காகும் அதீத செலவு.

அது என்ன அல்கோரித்மிக் டிரேட்டிங் என்று கேட்கிறீர்களா? ஒரு சிறிய ஆனால், கடினமான கம்ப்யூட்டர் புரோகிராம்தான் அது. மனித உதவியின்றி, வெறும் கணக்குகளின் அடிப்படையில் பங்குகளை வாங்குகிறது, விற்கிறது – அதுவும் லட்சங்களில், கோடிகளில்! இதுதான் பங்குச் சந்தையின் ஆல்கோ டிரேடிங் எனப்படுகிறது.

இந்தியாவில் ஆல்கோ

இந்தியாவைப் பொறுத்தவரை, 37% ஃபைனான்ஷியல் கம்பெனிகள் ஏ.ஐ-யை உபயோகிக்கின்றன. பொதுவாக, பி.எம்.எஸ் எனப்படும் போர்ட்ஃபோலியோ சர்வீஸ் தரும் நிறுவனங்களுக்கு ஏ.ஐ இன்றியமையாதது. ஐ.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனம் ஏ.ஐ-யின் செயல்பாடு களை உபயோகிப்பதால், போர்ட்ஃபோலியோ வருமானம் அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும், இன்னும்கூட அதன் லகான் இருப்பது ஃபண்ட் மேனேஜர்களின் கையில்தான். ஏ.ஐ ஆராய்ந்து அளித்த யோசனைகளைக் கூர்மைப் படுத்தி, செயல்படுத்துவது அவர்கள்தான்.

பங்குச் சந்தையில் ஏ.ஐ-யின் செயல்பாடுகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. தனிமனிதர்களாக நாம் ஏ.ஐ.யின் பயன்களைப் பெறுவது கடினம். காரணம் அதற்காகும் அதீத செலவு. ஆனால், ஏ.ஐ.யைப் பயன்படுத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன்மூலம் நாமும் இந்தப் பகாசுரன் பகிர்ந்தளிக்கும் லாபத்தில் பங்குபெற இயலும்.

பங்குச் சந்தையையும் விட்டுவைக்காத ஏ.ஐ... இந்தியாவில் 'ஆல்கோ' நிலை என்ன?

ஆல்கோ டிரேடிங் பற்றிச் சாதாரண முதலீட்டாளர்கள் இப்போதைக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. அது நம்முடைய பங்குச் சந்தையில் வருவதில்லை இன்னும் சிலபல ஆண்டுகள் ஆகலாம். அதற்குப்பிறகு, பங்குச் சந்தையின் செயல்பாடுகளைப் பெரிய அளவில் நிர்ணயம் செய்யும் வேலையை இந்த பகாசுரன் செய்வான் என்பதே நிஜம்!

- சரி, உலக அரங்கில் நடக்கும் பங்குச் சந்தை வியாபாரங்களில் 70% அளவு ஏ.ஐ-யால் நடத்தப்படுவதன் பின்னணி, யாருக்கு நன்மை? நான்கு விதமான செயல்பாடுகள் எவை? - ஆல்கோ டிரேடிங் குறித்து முழுமையாக அறிய உதவும் நாணயம் விகடன் சிறப்புக் கட்டுரையை வாசிக்க > ஆல்கோ டிரேடிங்... பங்குச் சந்தை பகாசுரன்! https://www.vikatan.com/business/share-market/algorithmic-trading-is-the-talk-of-the-town

அடுத்த கட்டுரைக்கு