Published:Updated:

பங்குச் சந்தை முதலீடு... உயரும் பெண்கள் பங்களிப்பு!

பெண்கள் பங்களிப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் பங்களிப்பு...

பங்குச் சந்தை

பங்குச் சந்தை முதலீடு... உயரும் பெண்கள் பங்களிப்பு!

பங்குச் சந்தை

Published:Updated:
பெண்கள் பங்களிப்பு...
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் பங்களிப்பு...

பங்குச் சந்தை முதலீடு குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதைத்தான் சமீபத்தில் வெளியாகும் புள்ளிவிவரங்கள் துல்லியமாக எடுத்துச் சொல்கின்றன. அதிலும் சிறிய அளவில் முதலீடு செய்யும் சில்லறை முதலீட் டாளர்களின் பங்களிப்பு கொரோனா தொற்று நோய்த் தாக்கத்துக்குப் பிறகு வேகமாக அதிகரித்து வருகிறது.

சி.டி.எஸ்.எல் மற்றும் என்.எஸ்.டி.எல் (CDSL & NSDL) தரும் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2021-ல் செயல்படும் டீமேட் கணக்குகளின் (Active Demat Accounts) எண்ணிக்கை 3.7 கோடியில் இருந்து 8 கோடியாக உயர்ந்திருக் கிறது. இந்த அளவுக்கு ஆக்டிவ்வாக இயங்கும் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை நம் நாட்டில் இதற்குமுன்பு எப்போதும் இருந்தது இல்லை.

அது மட்டுமல்ல, தனிப்பட்ட முதலீட் டாளர்கள் பங்குச் சந்தையில் செய்திருக்கும் முதலீட்டு மதிப்பானது கடந்த ஆண்டில் ஏறக்குறைய 60% வரை உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.21 லட்சம் கோடியாக இருந்த தனிநபர்களின் முதலீடு, கடந்த ஆண்டின் முடிவில் ரூ.55 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங் களில் ரூ.2 லட்சம் கோடி குடும்பச் சேமிப்பில் இருந்து பங்குச் சந்தைக்குள் வந்திருக்கிறது. ஆனால், ஒரு டீமேட் கணக்கில் முதலீடாகி இருக்கும் சராசரித் தொகை கடந்த 2020 டிசம்பரில் ரூ.7,03,565-ஆக இருந்தது, கடந்த 2021 டிசம்பரில் ரூ.6.94,907-ஆகக் குறைந்துள்ளது.

பங்குச் சந்தை முதலீடு... உயரும் பெண்கள் பங்களிப்பு!

மேலும், பங்குச் சந்தை என்றாலே அது ஆண்களுக்கான அரண் என்கிற பாரம்பரிய எண்ணத்துக்குச் சவால்விடுவது போல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்களின் பங்களிப்பு பங்குச் சந்தையில் கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த காலத்தில் பங்குச் சந்தையில் 16 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு, தற்போது 24 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அனைத்துப் பிரிவு பெண்களின் பங்களிப்பும் பங்குச் சந்தையில் உயர்ந்துள்ளதாக சொல் கின்றன புள்ளிவிவரங்கள். கடந்த ஆண்டு 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களின் பங்களிப்பு 0.4% என்றிருந்தது, தற்போது 1.5% சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2018-19 ஆண்டுக் கான பங்களிப்பு 26-45 வயதுக்கு உட்பட்ட பெண்களின் பங்களிப்பு 10.01% என்றிருந்த நிலையில், 2021-ல் அது 12.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மூன்று வருடங்களுக்குமுன் 45-60 வயதுடைய பெண்களின் பங்களிப்பு 4% என இருந்தது, தற்போது 5.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2021-ல் 60 வயதுக்கு மேற்பட் டோரின் பங்களிப்பு 2.6 சதவிகிதமாக உள்ளது.

2020-லிருந்து இதுவரை அப்டோக்ஸ் நிறுவனம், 10 லட்சம் பெண் முதலீட்டாளர் களைத் தனது கணக்கில் சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவர்களுள் 60% பெண்கள் மில்லனியல் எனக் குறிப்பிடப்படும் 20-25 வயதினர். இவர்களுள் 85% பெண்கள் நடுத்தர மற்றும் பெருநகரத்தினர். 35% குடும்பத் தலைவிகள் என்பது ஆச்சரியமான விஷயம்.

இன்றைய தேதியில், பங்குச் சந்தையை விட்டால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் வேறு எங்கும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்டுதான் பங்குச் சந்தையில் நேரடியாகவும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மறைமுகமாகவும் முதலீடு செய்து வருகிறார்கள். நீங்கள் இதுவரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை எனில், இனியாவது செய்யத் தொடங்குவது நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism