Published:Updated:

2021-ல் புது உச்சம்: ஒரு லட்சம் கோடியைத் தாண்டிய இந்திய நிறுவனங்களின் IPO மதிப்பு!

IPO
News
IPO

இந்திய சந்தைகளில் முதல்முறையாக ஐ.பி.ஓ மூலம் 1.31 லட்சம் கோடியை முன்னணி நிறுவனங்கள் திரட்டியுள்ளன. இந்தத் தொகை 2022-ம் ஆண்டு மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது உலக பொருளாதாரச் சூழல். முன்பு போல, மீண்டும் பங்குச் சந்தை மூலம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகின்றன. 2021-ம் ஆண்டு உலக அளவில் ஐ.பி.ஓ மூலம் 594 பில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டுள்ளன. இந்த 2021-ம் வருடம் அதிக ஐ.பி.ஓ முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ மூலம் பயனடைந்தாலும் சில நிறுவனங்கள் சறுக்கல்களும் அடைந்திருக்கின்றன. உலக அளவில் தொழில்நுட்பத்துறையும் சுகாதாரத்துறையும்தான் ஐ.பி.ஓ-வில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by energepic.com from Pexels

ரெபினிட்டிவ் (Refinitiv) ஆய்வின்படி, 2021-ம் ஆண்டு மட்டும் தொழில்நுட்பத்துறையில் 426 ஐ.பி.ஓ-களும் சுகாதாரத் துறையில் 332 ஐ.பி.ஓ-களும் ஈட்டப்படுள்ளன. இது உலக அளவில், 42% அளவுக்கு ஐ.பி.ஓ-களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. இந்திய அளவில் பார்க்கும்போது, இந்திய சந்தைகளில் முதல்முறையாக ஐ.பி.ஓ மூலம் 1.31 லட்சம் கோடியை முன்னணி நிறுவனங்கள் திரட்டியுள்ளன. இந்தத் தொகை 2022-ம் ஆண்டு மேலும் உயரும் என்று சொல்லப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஐ.பி.ஓ என்றால் ஒரு தனியார் நிறுவனம் தனது பங்கை முதலீட்டாளருக்குத் தருவதன்மூலம் அதைப் பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதாகும். இதுவரை இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐ.பி.ஓ மூலம் பல முன்னணி நிறுவனங்கள் ரூ.1.31 லட்சம் கோடி வரை ஈட்டியுள்ளன. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ரூ.75,278 கோடி ஈட்டியதுதான் சாதனையாக இருந்தது. 2017-ம் ஆண்டைவிட தற்போது 74.6% ஐ.பி.ஓ மூலம் அதிக முதலீடு பெறப்பட்டுள்ளது.

Paytm
Paytm

இது குறித்து ஹெம் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பி.எம்.எஸ் பிரிவின் தலைவர் மோகித் நிகாம், ``இந்திய வரலாற்றில் ஒரு லட்சம் கோடி ரூபாயை ஐ.பி.ஓ மூலம் நிறுவனங்கள் ஈட்டியது இதுதான் முதல்முறை ஆகும். இதற்கு உலக அளவில் இந்திய சந்தைகளின் சிறந்த செயல்பாடுகளும், பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டதும், வட்டிக் குறைப்புகளும்தான் காரணம்’’ என்று சொல்லியிருக்கிறார்.

புது யுக தொழில்நுட்ப மற்றும் ஃபின்டெக் நிறுவனங்களான ஜொமேட்டோ, நைகா, மேப் மை இந்தியா போன்ற நிறுவனங்களுக்கும் இந்த ஆண்டு சிறந்த தொடக்கத்தைப் பெற்றுள்ளன.

பேடிஎம் செயலியை இயக்கும் ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.18,300 கோடியை ஈட்ட திட்டமிட்டு பின்னர் குறைத்துக்கொண்டது. இதுதான் இந்திய சந்தை ஐ.பி.ஓ வரலாற்றிலேயே ஒரு நிறுவனம் ஈட்ட திட்டமிட்ட பெரிய தொகை ஆகும். இந்த நிறுவனத்துக்கு அடுத்தபடியாக ரூ.9,375 கோடி ஜொமேட்டோ நிறுவனம் ஈட்டியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்தடுத்து இடத்தில் இன்விட் மூலம் பவர்கிரிட் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை ரூ.7,735 கோடியும், ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ரூ. 7,249 கோடியும், பி.பி ஃபின்டெக் ரூ. 5,625 கோடியும் முதலீடு பெறப்பட்டுள்ளன.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash

2021-ம் ஆண்டு ஐ.பி.ஓ சந்தை மிக வலிமையானதாகவும், துடிப்பானதாகவும் இருந்தது. இதுபோல 2022-ம் ஆண்டும் ஐ.பி.ஓ சந்தை துடிப்பாக இருக்கும். எல்.ஐ.சி ஓலா, பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் ஐ.பி.ஓ சந்தையில் அதிகமாக ஈடுபட வாய்ப்புள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். எனினும், 2022-ல் ஐ.பி.ஓ சந்தையில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கும் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சிலர் எச்சரிக்கிறார்கள்! பார்ப்போம், 2022-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்று!