Published:Updated:

பைசா பங்குகளைத் துரத்தாதீர்கள்! முதலீட்டாளர்களே உஷார்...

பைசா பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பைசா பங்குகள்

P E N N Y S T O C K S

பைசா பங்குகளைத் துரத்தாதீர்கள்! முதலீட்டாளர்களே உஷார்...

P E N N Y S T O C K S

Published:Updated:
பைசா பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பைசா பங்குகள்

அபாயகரமான ஈர்ப்பு (Fatal Attraction) என்று ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. மலை உச்சி, ஆர்ப்பரிக்கும் அருவி, அலை மோதும் கடல் இவற்றின் மீது மனிதனுக்கு இயற்கை யிலேயே மிகுந்த ஈர்ப்பு உண்டு. அபாயகரமான இந்த ஆதி உணர்வு, அறிவுபூர்வமாகச் செயலாற்ற வேண்டிய பங்குச் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துவதை பைசா பங்குகள் (Penny Stocks) விஷயத்தில் பார்க்க முடிகிறது. அபாயகரமான ஈர்ப்பை உருவாக்கும் சில பங்குகளைப் பார்ப்போம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ருசி காட்டிய ருச்சி சோயா

2019-ல் ருச்சி சோயா கம்பெனியை பதஞ்சலி நிறுவனம் கையகப்படுத்தி டீலிஸ்ட் செய்தபோது, ஒரு பங்கின் விலை ரூ.3.32-ஆக இருந்தது. 2020 ஜனவரியில் அது ரூ.17-க்கு ரீலிஸ்ட் ஆனது. ஜூன் 2020-ல் பங்கு விலை 8,929% ஏற்றம் அடைந்து, ரூ.1,535-க்கு விற்பனை ஆனது. 2020 ஜனவரியில் ஒரு முதலீட்டு நிறுவனம் ரூ.13 கோடி மதிப்புள்ள ருச்சி சோயா பங்குகளை வாங்கியது. ஆறே மாதங்களில் அதன் மதிப்பு ரூ.1,300 கோடியாக மாறியது. இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளை மனதில்கொண்டு மக்கள் பென்னி ஸ்டாக்கு களையும், டீலிஸ்ட் ஆகும் பங்குகளையும் துரத்துவது ஒரு அபாயகரமான ஈர்ப்புதான்.

திவான் ஹிவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட்

கடந்த ஜூன் மாதம் திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) கம்பெனியின் பங்குகள் தொடர்ந்து அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமானதும் இந்த அபாயகரமான ஈர்ப்பின் காரணமாகத்தான். வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் இருந்து கடன், சில்லறை முதலீட்டாளர்களிடம் இருந்து ஃபிக்ஸட் டெபாசிட் என்று பலரிடமும் வாங்கிய ரூ.90,000 கோடியைத் திருப்பி அளிக்க இயலாமல் தத்தளித்தது டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம். அதை பிரமல் குழுமம் பலவித நிபந்தனை களுடன் கையகப்படுத்தியது. வங்கி களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய பணத்தில் 40% மட்டுமே தரப்படும்; பங்குகள் டீலிஸ்ட் செய்யப்படும்.

பங்குதாரர்களுக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை என்.சி.எல்.டி (National Company Law Tribunal) உறுதி செய்துள்ளது. ‘இது எந்த நிமிடமும் வெடித்துச் சிதறக்கூடிய டைம் பாம்’ என்று ஜெரோதா நிறுவனம் எச்சரித் துள்ளது. பல்வேறு அனலிஸ்ட்டுகளும் “லாபமோ, நஷ்டமோ, பங்குகள் டீலிஸ்ட் ஆகும்முன் விற்று வெளியேறுங்கள்” என்று அறிவுறுத்துகிறார்கள். இவ்வளவுக் குப் பின்பும் கடந்த ஒரே மாதத்தில் இந்தப் பங்கின் விலை 55% ஏற்றம் காணும் அளவு வியாபாரம் நடை பெற்றுள்ளது எனில், அபாயகரமான ஈர்ப்புதானே காரணமாக இருக்க முடியும்?

பைசா பங்குகளைத் துரத்தாதீர்கள்! முதலீட்டாளர்களே உஷார்...

அதூனிக் மெடாலிக்ஸ்

அதூனிக் மெடாலிக்ஸ் நிறுவனத்தை வாங்கிய லிபர்டி ஹவுஸ் நிறுவனம், பங்கு தாரர்களுக்கு வழங்கும் தொகை ஒரு பங்குக்கு ஒன்பது பைசா. பங்குச் சந்தை யில் இந்தப் பங்கின் வியாபாரம் நிறுத்தப்பட்டு விட்டதால், பங்குதாரர் களுக்கு வேறு போக்கில்லை – ஒன்பது பைசாவுக்குத்தான் விற்றாக வேண்டும்.

உத்தம் வேல்யூ ஸ்டீல்

உத்தம் வேல்யூ ஸ்டீல் கம்பெனியில் 54% பங்குகள் சிறு முதலீட்டாளர்கள் வசம் இருந்தது. 2020 நவம்பர் மாதம் அதன் பங்குகள் டீலிஸ்ட் ஆனதில் முதலீட்டாளர்களுக்கு பைசா கிடைக்கவில்லை. ஆனால், இன்னும் பல முதலீட்டாளர்கள் விஷயமே தெரியாமல் அந்தப் பங்குகள் விலையேறும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒருவர் திடீரென விழித்துக் கொண்டு, தான் 94.11 லட்சம் பங்குகள் வைத்திருப்பதாகவும், அவற்றின் கதி என்ன என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்னும் சிலர், பங்குகள் ரீலிஸ்ட் ஆகி, ருச்சி சோயா போல் விலை யேறும் என்ற குருட்டு நம்பிக்கை யுடன் காத்திருக்கிறார்கள்.

குரலற்ற சிறு முதலீட்டாளர்கள்...

அழிவின் விளிம்பில் நிற்கும் கம்பெனிகளை ஒழுங்குமுறை ஆணையங்கள் மீட்க முற்படும் போது நஷ்டத்தைச் சுமப்பது அந்த கம்பெனிகளுக்குக் கடன் கொடுத்த வங்கிகளும், சிறு முதலீட்டாளர்களும்தான். இது போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, சிறுமுதலீட் டாளர்கள் குரலற்றவர்கள். பெரும் வங்கிகளே தாங்கள் கடனாய் அளித்த பணத்தில் 99% குறைப்பை (Hair cut) ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும்போது சிறு முதலீட் டாளர்கள் பற்றி யார் யோசிப் பார்கள்?

யெஸ் பேங்க்கின் ஏடி-1 பாண்டுகள், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பங்குகள் மற்றும் எஸ்.டி.எம் ஸ்டெர்லிங் ட்ரீ மேக்னம், லயலா டெக்ஸ்டைல், பன்யம் சிமென்ட், ஆஸ்தா பிராட்காஸ்டிங் போன்ற பல கம்பெனிகள் – இவை யாவும் ரிசர்வ் வங்கி மற்றும் என்.சி.எல்.டி-யின் கண் முன்னே பல சிறு முதலீட்டாளர்களின் சேமிப்பைத் தின்று தீர்த்துள்ளன.

தப்பிக்கும் வழிகள் என்ன?

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அதிகம் இரையாவது புதிதாக பங்குச் சந்தைக்குள் வரும் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் தான். சுசேதா தலால் போன்ற பொருளாதார வல்லுநர்கள் இவர்களுக்கு வழங்கும் ஆலோசனைகளைப் பார்ப்போம்:

1. கடந்த ஓராண்டில் பங்குச் சந்தைக்குள் வந்தவர்களுக்கு அதன் மறுபாதியான கோரமுகம் இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பங்குச் சந்தை மேலே மேலே ஏறிக்கொண்டே இருக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கைவிட வேண்டும்.

2. வாரன் பஃபெட்டின் ‘வாங்கு; மறந்துவிடு’ என்ற புகழ் வாய்ந்த மேற்கோள் நம்மில் பலருக்கும் சரிப்பட்டு வராது. பங்குச் சந்தையில் அபரிமித லாபமும் பார்க்கலாம்; தலைதூக்க இயலாத அளவு நஷ்டத்தையும் சந்திக்க நேரலாம். நாம் வைத்திருக்கும் பங்குகளின் விலை, அதன் காலாண்டு முடிவுகள், அவை குறித்த தகவல்கள் போன்றவற்றை அடிக்கடி பார்த்து, கண்காணிக்க வேண்டும். அது இயலாதவர்கள் பங்குச் சந்தையைவிட்டு விலகியிருப்பதே நல்லது.

3. பைசா பங்குகளின் விலை மிகக் குறைவாக இருப்பதால், ஆயிரம் பங்குகள், இரண்டாயிரம் பங்குகள் என்று வாங்க முடிவது போதை தரும். ஆனால் அழிந்து போகும் நிலையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது தற்கொலைக்கு சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

4. பைசா பங்குகளைத் துரத்தாமல், 60 - 70% உரிமையாளரின் முதலீடு, ஓரளவு அயல்நாட்டு நிறுவனங்களின் முதலீடு, மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு ஆகியவை இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பை உறுதி செய்யும்.

லாக்டெளன் முடிந்து, வழக்கம்போல் வேலைக்குத் திரும்புபவர்கள், பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட ஓரளவாவது நேரம் ஒதுக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியாதவர்கள் இந்தக் கொம்புத் தேனுக்கு ஆசைப்படாமல் மியூச்சுவல் ஃபண்ட் வழியைத் தேர்ந்தெடுத்து, இந்த அபாயகரமான ஈர்ப்பின் பிடியிலிருந்து தப்பிப்பதே புத்திசாலித்தனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism