Published:Updated:

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரும்போது முதலீடு செய்யலாமா? ஸோமேட்டோ கற்றுத் தரும் பாடங்கள்

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

S T A R T U P I P O

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரும்போது முதலீடு செய்யலாமா? ஸோமேட்டோ கற்றுத் தரும் பாடங்கள்

S T A R T U P I P O

Published:Updated:
ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

ஸோமேட்டொ ஐ.பி.ஓ வெற்றிகரமாக முடிந்த, முதல் நாளிலேயே 100% லாபம் தந்தது. இதைத் தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் ஐ.பி.ஓ வருவது குறித்த பரபரப்புத் தொடங்கிவிட்டது. பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதால், இன்னும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரவுள்ளன. இந்த ஐ.பி.ஓ-களில் முதலீடு செய்ய சிறுமுதலீட்டாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

வி.விஜயகுமார்
நிறுவனர், ZEBU
வி.விஜயகுமார் நிறுவனர், ZEBU

ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்பவர் களின் முக்கிய இலக்கே அடுத்த இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், விப்ரோ போன்றவை கிடைக்காதா என்னும் ஏக்கத்தில்தான் பலர் முதலீடு செய்து வருகிறார்கள்.

ஐ.பி.ஓ-வில் ஒரு பங்கை வாங்கி வைத்துவிட்டால், காலத்துக்கும் பெரிய சொத்து எனக் கருதும் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். இது பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு காலத்துக்கு முன்பு வரை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் வெளியான ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் திரும்பிக் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. சிறிய நிறுவனங்களின் பங்குகள் மட்டுமல்லாமல், பல பெரிய நிறுவனங்களின் பங்குகளும் முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன.

என்ன வித்தியாசம்?

தற்போது வெளியாகி வரும் புதிய தலைமுறையில் இருக்கும் ஐ.பி.ஓ-க்களுக்கும் இதற்கு முன்பு வெளியான ஐ.பி.ஓ-க்களுக்கும் என்ன வித்தியாசம்? மிக முக்கியமான வித்தியாசம், தொழில்நுட்பம்தான். இதுவரை பாரம்பர்யமான நிறுவனங்களின் ஐ.பி.ஓ-க்கள் வெளியாகி வந்தன. தற்போது அதிக முதலீட்டைப் பெற்றிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெளியாக இருக்கின்றன. அதனால் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் முதலீட் டாளர்கள் வெளியேறுவதற்கான வழியாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஐ.பி.ஓ-க்கள் பிரீமியம் விலையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஐ.பி.ஓ மீதுள்ள ஆர்வம் காரணமாக முதலீட் டாளர்கள் பெரும் தொகையை இழக்கிறார்கள்.

இதைவிட முக்கியக் காரணம், பங்குச் சந்தையில் பணம் திரட்டுவது என்பது தேவைக்காக அல்ல, சந்தையில் சாதக மான சூழல் நிலவுகிறது. அதைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் நோக்கமே காரணம் என்று சொல்பவர் களும் இருக்கிறார்கள். உதாரணமாக, பேடிஎம் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் அந்த நிறுவனம் திரட்டும் நிதியில் பாதிக்கும் மேற்பட்ட நிதி ஏற்கெனவே செய்த முதலீட்டாளர் களுக்கு வெளியேறும் வாய்ப்பாக இருக்கிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரும்போது முதலீடு செய்யலாமா? ஸோமேட்டோ கற்றுத் தரும் பாடங்கள்

லாபம் முக்கியமா?

ஒரு பங்கில் முதலீடு செய்யும் முன் பல காரணிகளைக் கவனிக்க வேண்டும். பிரதானமாக லாபம், வளர்ச்சிக்கான வாய்ப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை முக்கியம். சில நிறுவனங்களில் லாபம் இருக்கும். ஒரு நிறுவனத்தில் சீரான லாபம் இருக்கும். அந்த நிறுவனத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்காது. ஆனால், புதுயுக நிறுவனங்களில் லாபம் இல்லை. எதிர்கால வாய்ப்பிருக்கிறது.

புதுயுக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் விரல்விட்டு எண்ணும் நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் செயல்படுகின்றன. மற்றவை நஷ்டத்தில் உள்ளன. லாபத்தில் இல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்யக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது.அமேசான் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் லாபம் ஈட்டிய தில்லை. ஆனால், பெரும் வளர்ச்சியையும் புதுப்புதுத் தொழில்களிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அமேசான் பங்கும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

அதேபோல, புதுயுக நிறுவனங்கள் தள்ளுபடி தருவதன் மூலமே வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துகொண்டிருக்கின்றன. ஒருவேளை, தள்ளுபடியில்லை எனில், இதே எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முடியாது. நீடித்த வளர்ச்சி இருக்க முடியாது என்பதையும் கவனிக்க வேண்டும்.

புதுயுக டெக்னாலஜி ஐ.பி.ஓ-வில் பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பதை ஓர் அளவீடாக எடுத்துக்கொண்டு முதலீடு செய்யக் கூடாது. காரணம், நிறுவன முதலீட் டாளர்களுக்கு அவர்களின் போர்ட்ஃபோலியோவில் இந்த முதலீடு ஒரு சிறு பகுதிதான். ஆனால், சிறுமுதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் முதலீட்டுத் தொகை பெரும் பங்காக இருக்கும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வரும்போது முதலீடு செய்யலாமா? ஸோமேட்டோ கற்றுத் தரும் பாடங்கள்

முதல் நாள் கிடைக்கும் லாபம்..?

கோவிட்டுக்குப் பிறகு லட்சக் கணக்கான புதிய முதலீட் டாளர்கள் சந்தைக்கு வந்திருக் கிறார்கள். அவர்கள் தொழில் நுட்பம் மூலம் சந்தையில் முதலீடு செய்து பழகியிருப்பதால், இது போன்ற டெக்னாலஜி நிறுவனங் களின் ஐ.பி.ஓ-க்களை அவர்கள் பெரிதும் நம்பலாம். அவர்களைப் போன்றவர்களை நம்பித்தான் இவ்வளவு ஐ.பி.ஓ-க்கள் வரவிருக் கின்றன என்றும் கருத வேண்டி யிருக்கிறது.

தவிர, வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்வோம். பங்குகள் கிடைத்தால், முதல் நாளில் விற்று லாபத்தை எடுக்கலாம் என்னும் மனநிலையிலும் ஐ.பி.ஓ-வை பல முதலீட்டாளர்கள் அணுகுகிறார்கள்.

மாறிவரும் தொழில்நுட்பம்...

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொருள் அல்லது சேவை நமக்குக் கிடைக்க பல கட்டங் களை நாம் தாண்டி வர வேண்டி யிருக்கும். தற்போது அக்ரி கேட்டர் நிறுவனங்கள் மூலமாக நமக்கு கிடைத்துவருகின்றன. இன்னும் சில காலத்தில் உற்பத்தி நிறுவனங்களே நேரடியாக நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கலாம். தொழிலின் முறைகளும் அடிப்படைத் தத்துவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

பங்குச் சந்தை ஆவணத்தைப் படிக்க வேண்டும், பிசினஸ் மாடலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் இப்போது வெறும் தியரியாக மாறிவிட்டது. ஆனால், யாரும் அதைப் பின்பற்றப் போவதில்லை.

‘ஐ.பி.ஓ-வில் இருந்து விலகி இருங்கள். பங்குகள் பட்டியலான சில மாதங் களுக்குப் பிறகு, செயல்பாட்டைப் பார்த்து வாங்கிக்கொள்ளலாம்’ எனச் சொல்லப்போவதில்லை. காரணம், தற்போது உள்ள இந்தியப் பங்குச் சந்தைச் சூழலில் முதலீடுகள் குவிந்துவருவதால், பட்டியலான பிறகு, பெரிய சரிவு வருவதில்லை. (முறைகேடு, சர்ச்சையைத் தவிர, தற்போது பங்குகள் சரிவதில்லை) இதனால் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும் என முதலீட்டாளர்கள் கருதலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

புதுயுக டெக்னாலஜி நிறுவனங்களுக்கு சந்தையில் பெயர், விளம்பரம் உள்ளிட்ட பல சாதகங்கள் உள்ளன. இருந்தாலும் ஒரு முதலீட்டாளராக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்னும் தெளிவு இருக்க வேண்டும்.

ஒரு துறையில் மாற்றத்தை நிகழ்த்தும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர் கள் பரிசீலனை செய்யலாம். ஆனால், முன்பெல்லாம் ஒரு துறையில் முன்னணி நிறுவனமாக ஒரு நிறுவனம் இருக்கும் பட்சத்தில், பெரும்பான்மையான சந்தையை அந்த நிறுவனமே வைத்திருக் கும். ஆனால், தற்போது வாய்ப்பு உருவாகும்பட்சத்தில் அதே வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேறு நிறுவனங் கள் உருவாகின்றன. அந்த நிறுவனங்களுக் குத் தேவையான முதலீடும் கிடைக்கிறது. அதனால் எந்த நிறுவனம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.

புதிதாக ஆரம்பிக்கும் தொழிலுக்கு இருக்கும் ரிஸ்க் பட்டியலிடப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளராகிய உங்களுக்கும் உண்டு. இது மாதிரியான பங்குகளில் போதுமான லாபம் கிடைத்தால் வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism