Published:Updated:

முதலீட்டு எல்.கே.ஜி..!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

தொடர் -2

முதலீட்டு எல்.கே.ஜி..!

தொடர் -2

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பொதுவாக, சந்தையின் ஏற்றம் அல்லது இறக்கத்துக்குக் காரணம், மேக்ரோ காரணிகளே ஆகும். மேக்ரோ காரணிகள் என்றால்..? உலக அளவில் ஒட்டு மொத்த சந்தையின் நகர்வைத் தீர்மானிக்க வல்லது இந்த மேக்ரோ காரணி. அதாவது, உலக அளவில் பங்குச் சந்தை ஏறவும் இறங்கவும் காரணமாக உள்ள நிகழ்வுகள், அரசின் முடிவுகள். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த மேக்ரோ காரணிகளானது அமெரிக்கச் சந்தையை மட்டும் அல்லாது உலகின் வேறுவேறு நாடுகளில் செயல்படும் சந்தைகளையும் கடுமையாகப் பாதிப்படையச் செய்யக்கூடியது.

உதாரணமாக, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அந்த நாட்டின் வட்டி விகிதம் சார்ந்த ஏதாவது அறிவிப்பு செய்தால், அது ஒட்டுமொத்த உலக சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் ஏறுவதற்கு வாய்ப்புள்ளது என்று சொன்னால், அது பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைவதற்குக் காரணமாகவும், வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவித்தால், அது பங்குச் சந்தைகள் ஏற்றம் அடையவும் காரணமாக இருக்கும்.

தி.ரா.அருள்ராஜன்
பங்குச் சந்தை பயிற்சியாளர், 
www.ectra.in
தி.ரா.அருள்ராஜன் பங்குச் சந்தை பயிற்சியாளர், www.ectra.in

மேக்ரோ காரணிகளில் அடுத்த முக்கியத்துவம் பெறும் விஷயம், அமெரிக்காவும் அதன் பொருளாதாரம் சார்ந்த முக்கிய கொள்கை முடிவுகளும்தான். பொருளாதாரம் வலுவிழந்து காணப்படும் போது, அதை ஊக்குவிக்க, பொதுவாக அமெரிக்க ஃபெட் ரிசர்வ் எடுக்கும் அடுத்த நடவடிக்கை, பணம் அச்சிட்டு புழக்கத்தில் விடும் (Quantitative Easing - QE) நடவடிக்கை ஆகும். இதன் மூலம், அமெரிக்கச் சந்தையில் ஃபெட் ரிசர்வ் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும். இதன் நோக்கம் என்னவெனில், சந்தையில் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதால், சந்தை பங்களிப்பாளர் களிடம் பணம் இருக்கும். இதனால் அவர்கள் வாங்கும் திறன் கூடும். அதுவே அவர்கள் அதிக பொருள்களை வாங்கத் தூண்டும். இந்த முயற்சியால், தேவை கூடி, பொருள் களின் விற்பனை அதிகரித்தால், பொருளா தாரம் வளர்ச்சி காணும்.

இதைப் போலவே, அமெரிக்காவின் மற்ற பொருளாதாரக் காரணிகளும் உலகச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக, எல்லா நாடுகளுக்குமே பொருந்தக்கூடிய காரணிகளாக இருந்தால் அது அமெரிக்காவின் பொருளாதாரம் சார்ந்த காரணியாக இருந்தால், அது உடனடியாக அமெரிக்கப் பங்குச் சந்தையையும், அடுத்தடுத்து உலக பங்குச் சந்தைகளையும் பாதிக்கும். அவற்றில் முக்கியமான ஒன்று, அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு ஆகும். இதன் அளவு கூடினால் பங்குச் சந்தைக்கு பாதமாகவும், குறைந்தால் சாதகமாகவும் இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி யானது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்திருப் பதைப் போல, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே பங்குச் சந்தை ஏற்றம் அல்லது இறக்கம் காணும். உதாரணமாக, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, நாட்டின் மொத்த பொருள் உற்பத்தி குறையும்பட்சத்தில், பங்குச் சந்தைப் புள்ளி கள் இறக்கம் காணவே செய்யும். மாறாக, வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்கிற புள்ளி விவரங்கள் குறித்த செய்திகள் வந்தால், பங்குச் சந்தைப் புள்ளிகள் ஏற்றம் காணும்.

முதலீட்டு எல்.கே.ஜி..!

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவுகள் உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்ற, இறக்கத்தை உண்டு பண்ணுவது போல, நமது மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதம் குறித்த முடிவுகளை அறிவிக்கும் போதும் பங்குச் சந்தையில் ஏறியிறங்குவதைப் பார்க்க முடியும். நமது பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி என்னென்ன முடிவுகளை எடுக்கிறது என்பதையும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.

பணவீக்கம் என்பதும் இன்னும் ஒரு முக்கிய மேக்ரோ காரணி ஆகும். ஆனால், இதன் அளவுகோல் சற்றே விசித்திரமானது. பணவீக்கம் என்பது பொருள்களின் விலைகள் கூடுவது என்று சொல்வோம். அதாவது, அதிக அளவு பணம் குறைவான பொருள்களைத் துரத்தினால், விலை கூடும். இவ்வாறு விலைவாசி கூடினால், அது சாமானியர்களைப் பாதிப்ப துடன், பொருளாதாரத்தையும் பாதிக்கும். பணவீக்கம் குறைந்தால் இவையெல்லாம் நேர்மாறாக நடக்கும். அதே சமயம், பண வீக்கத்தை முற்றிலும் தவிர்க்கவும் முடியாது. அதாவது, பணவீக்கம் சற்றே மிதமாக இருந்தால்தான் அங்கு பொருளாதார வளர்ச்சி நடப்பதாக அர்த்தம். எனவே, அமெரிக்காவிலும் சரி, நம் நாட்டிலும் சரி, பணவீக்கம் அதிகமாக இருந்தாலும் பிரச்னை தான்; மிகக் குறைந்தாலும் பிரச்னைதான்.

வேலைவாய்ப்பு குறைவது அல்லது அதிகரிப்பதும் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கு ஒரு முக்கியமான காரணமாகும். கொரோனா நோய்த்தொற்று வந்தபோது, பொருளாதாரம் சுணங்கி, பலரும் வேலை இழந்தனர். இந்தச் செய்தி சந்தையில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதேபோல, ஏற்றுமதி, இறக்குமதி தொடர் பான தகவல்களும் பங்குச் சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்த தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

(வளரும்)

அட்வான்ஸ் அண்ட் டிக்ளைன் ரேஷியோ!

பங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் வியாபாரமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தையில் சுமார் 2,000 நிறுவனங்கள் வியாபாரம் ஆகி வருகின்றன. இவற்றில் ஒரு நாளில் எடுத்துக்கொண்டால், சில நிறுவனப் பங்கின் விலை ஏறியும் சிலவற்றின் விலை இறங்கியும் காணப்படும். இதை அட்வான்ஸ் அண்ட் டிக்ளைன் ரேஷியோ என்றும் அழைக்கப்படும். அதாவது, 1,000 பங்குகளின் விலை ஏறியும், அதே நாளில் 1,000 பங்குகள் விலை இறங்கியும் முடிந்தால், அட்வான்ஸ் அண்ட் டிக்ளைன் ரேஷியோ 1:1 என்று அழைக்கப்படும். மொத்த பங்குகளின் எண்ணிக்கையில் சில கூடுதல் ஏற்றம் அல்லது கூடுதல் இறக்கம் என்று நிகழும்போது இந்த ரேஷியோ அளவு மாறுபடும்.

இந்த அளவீடு என்பதை ஒட்டுமொத்த சந்தையின் திசையைக் காட்டுவதாக உள்ளதால், இதை ‘Breadth of the Market’ என்று அழைப்பார்கள். அதாவது, ஏற்றத்தின் அளவு கூடுதலாக இருந்தால் சந்தை அன்றைய தினம் ஏற்றத்தின் பக்கமும், இறக்கத்தின் பலம் கூடுதலாக இருந்தால் அன்றைய தினம் சந்தை இறக்கத்தின் பக்கமும் நகர வாய்ப்பு அதிகமாக உள்ளது.