Published:Updated:

கோவிட்டுக்குப்பின் வேகமெடுக்கும் விமானத்துறை நிறுவனங்கள்!

விமானத்துறை
பிரீமியம் ஸ்டோரி
விமானத்துறை

விமானத்துறை

கோவிட்டுக்குப்பின் வேகமெடுக்கும் விமானத்துறை நிறுவனங்கள்!

விமானத்துறை

Published:Updated:
விமானத்துறை
பிரீமியம் ஸ்டோரி
விமானத்துறை

B.அன்டன் மைக்லோ

இந்திய விமானத்துறைக்கு என்று ஒரு பெருமை உண்டு. 1903-ல் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த பத்து ஆண்டுகளுக்குள் 1911-ல் இந்தியாவில் முதல் விமானம் பறந்தது. ஹென்றி பிக்கெட் என்னும் பிரெஞ்சுக்காரரால் 6,500 மைல்களைக் கடந்து, அலகாபாத் நகரிலிருந்து யமுனை நதியைக் கடந்து 9.7 கி.மீ பயணித்தது.

1932-ல் டாடா நிறுவனத்துக்குத் தபால் சேவைக்காக விமான இயக்குதல் ஒப்பந்தம் இந்தியாவில் முதன்முதலாக வழங்கப்பட்டதில் ஆரம்பமாகிறது இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் வரலாறு. டாடா ஏர் சர்வீஸ் நிறுவனத்தின் விமானங்கள் இரண்டாம் உலகப் போரில் படைவீரர்களை இங்கிலாந் துக்குக் கூட்டிச் செல்ல பயன்பட்டது என்பது கூடுதல் தகவல். அதன் பிறகு, விமானப் போக்குவரத்து ராணுவ மற்றும் சிவில் போக்குவரத்து என்று இரண்டாகப் பிரிக்கப் பட்டது.

சிவில் பிரிவில் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து என இரு வகைகள் உண்டு. விமான நிறுவனங்கள் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து என இரண்டையும் செய்து வருகின்றன. 1990-களில் மதராஸ் (சென்னை), பம்பாய் (மும்பை), கொல்கத்தா மற்றும் டெல்லி நகரங்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த விமானப் போக்குவரத்து, 90-களில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்ட பின், இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்துள்ளது.

கோவிட்டுக்குப்பின் வேகமெடுக்கும் விமானத்துறை நிறுவனங்கள்!

விமானப் போக்குவரத்துத் துறையின் போக்கு...

இந்தத் துறையில் தனியார் அனுமதிக்கப் பட்டபின் அதிவேக வளர்ச்சி அடையத் தொடங்கியது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்து விடப்பட்டதன் விளைவாக இன்னும் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது.

சர்வதேச விமானப் போக்குவரத்து அசோசியேஷன் அறிக்கையின்படி, உலகில் மூன்றாவது முக்கியமான விமானப் போக்கு வரத்துத் துறையாகவும், மிக விரைவாக வளர்ச்சி அடையும் விமானத் துறை பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த பங்குகள்...

இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளைப் பார்த்தால், இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை அதன் ஐ.பி.ஓ வெளியிடப்பட்ட நவம்பர் 2015 முதல் நவம்பர் 2021 வரையான ஆறு ஆண்டுக் காலகட்டத்தில் இரண்டு மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நகரங்கள் விரிவாக்கத்தின் காரணமாக துறை மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் முதலில் பாதிக்கப்பட்ட துறையாக இருந்தது விமானப் போக்குவரத்துத் துறைதான். நாடுகள் விமானங்களை முதலில் நிறுத்தின. எனினும், இன்று மீண்டும் விமானப் போக்குவரத்துக் கான தேவை அதிகரித்துள்ளது. பழைய நிறுவனங்கள் புதுப்பொலிவுடனும் புதிய நிறுவனங்கள் பெரிய எதிர் பார்ப்புகளுடனும் களமிறங்கத் தயாராக உள்ளன.

புதிய நிறுவனங்களில் குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தையில் மிகப் பெரும் முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஆகாசா நிறுவனம் பெரிய நிறுவனங் களுக்குப் போட்டியாக களமிறங்குகிறது. பெரும் லாபக் கணக்கீடுகள் இல்லாமல் அவர் முதலீடு செய்ய மாட்டார் என்பது மற்ற முதலீட்டாளர் களுக்கு விமானப் போக்கு வரத்துத்துறை மீது முதலீட்டு ஆர்வம் அதிகமாகக் காரணமாக அமைகிறது.

பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்...

இந்தத் துறை சார்ந்த நிறுவ னங்களின் காலாண்டு முடிவு களைப் பார்க்கையில், இண்டி கோ நிறுவனம் 35 சதவிகிதமும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 43 சதவிகிதமும் மொத்த செலவினங்களில் எரி பொருளுக்காக செலவிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் உயர்ந்துவரும் டாலரின் மதிப்பால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜெட் எரிபொருளின் விலையும் உயரும் நிலையில், நிறுவனங் களின் செயல்பாட்டு செலவுகள் (operational expenses) மேலும் அதிகரிக்கலாம்.

மேலும், கடந்த சில ஆண்டு களாக விமானங்கள் செயல் படாத நிலையில், தற்போது செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் புனரமைத்தல், பாதுகாப்பு மேம்பாடு, கடன் களுக்கான செலவுகள், உதிரிபாகத் தேய்மானம் மற்றும் ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைத்தல் ஆகியவற்றில் அதிக செலவு களை செய்ய வேண்டிய நிலைக்கு விமானப் போக்கு வரத்து நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

அதிக விலை காரணமாக விமானங்களை விலைக்கு வாங்குவது அவ்வளவு லேசான காரியம் இல்லை. எனவே, விமானங்களை வாடகை அடிப்படையில் நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றன. அந்த வகையில், குத்தகை மற்றும் வாடகை செலவினங்கள் செலவுகளை ஏற்படுத்து கின்றன. எரிபொருள் விலை யைப் பொறுத்தவரை, சமீபத்தில் 23 மாநிலங்கள் வாட் வரியை 20 - 30% குறைத் துள்ளன. மத்திய அரசு கலால் வரியைக் குறைக்கும்பட்சத் தில் விமான எரிபொருளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

என்.ஏ.பி.ஹெச் என்னும் அடுத்த தலைமுறைக்கான விமானப் போக்குவரத்தை வடிவமைக்கும் அமைப்பு 486 விமானத்தளங்களைக் கண்டறிந்து தரம் உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதில் நீர்வழி விமான நிலையங்களும் அடக்கம்.

அஹமதாபாத் நகரில் சமீபத்தில் நீர்வழி விமான நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. குஜராத் தின் கிஃப்ட் சிட்டி விமான குத்தகை முறையில் மானியங் களைப் புகுத்தி விலை குறையும் பொருட்டு ஆறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு விமானப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. குறிப்பாக, சர்வதேச விமானப் பயணிகள் எண்ணிக்கை 4.1 மில்லியனாகவும், உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 23.7 மில்லியனாகவும் கடந்த மே மாதத்தில் உயர்ந்துள்ளது என விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 80% இருக்கைகள் நிரம்பிவிடுவதாக பயணிகள் போக்கு வரத்துக்கான பொது இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்களில் 89 சதவிகிதமாக உள்ளது.

சரக்குப் போக்குவரத்து, விமான இயக்கம், பயணிகள் போக்குவரத்து என அனைத்துப் பிரிவு களிலும் சர்வதேச விமானங்களைவிட உள்நாட்டு விமான வழித்தடங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.

கோவிட்டுக்குப்பின் வேகமெடுக்கும் விமானத்துறை நிறுவனங்கள்!

கவனிக்க வேண்டிய நிறுவனப் பங்குகள்...

இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளைப் பொறுத்தவரை, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வைஸ் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கவனிக்கக்கூடியதாக உள்ளன. இண்டிகோ பங்குகள் தற்போதைய விலை 1,750-லிருந்து 3,200 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சில தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.

விமானத் துறை பங்கு கள் குறுகிய காலத்தில் தொய்வைக் கண்டாலும் இந்திய விமானத்துறை யின் மொத்த எழுச்சியால் விரைவில் நல்ல வளர்ச்சி யைக் காண வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் எதிர்பார்ப்பைவிட மக்கள் அதிக அளவில் விமானப் பயணம் செய்து வருவதாலும், இந்தத் துறையின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருவதாலும் இந்தத் துறை வளர்ச்சி நோக்கி செல்ல அதிக வாய்ப்புள்ளது.

அனைத்து விமான நிறுவனப் பங்குகளும் தற்போது தள்ளுபடி விலையிலேயே கிடைக்கின்றன. நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்து நீண்ட கால நோக்கில் முதலீடு லாபம் காணலாம்.