Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

B U Y & S E L L
பிரீமியம் ஸ்டோரி
B U Y & S E L L

B U Y & S E L L

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

B U Y & S E L L

Published:Updated:
B U Y & S E L L
பிரீமியம் ஸ்டோரி
B U Y & S E L L

கடந்த வாரத்தில் வியாழன் அன்று நிஃப்டி ஃப்யூச்சர் 15000 என்ற நிலையைத் தாண்டிய போது சமீபத்திய வரம்புகளிலிருந்து பிரேக் அவுட் ஆகி ஏற்றமடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், காளையின் போக்கு அந்த நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்கவில்லை. அன்றைய வர்த்தக முடிவில் நகர்வு இறக்கத்தில் முடிந்தது. அதே சமயம், பாசிட்டிவ் விஷயம் என்னவெனில், திங்கள் அன்று கண்ட இறக்கத்திலிருந்து உடனடியாக மீண்டுவந்தது. ஏனெனில், நிஃப்டியில் ஏற்பட்ட இறக்கம் அதை 14460 என்ற நிலைக்குத் தள்ளியதால், பெரும்பாலானோரின் நம்பிக்கையைப் பதம் பார்த்தது. அதிலிருந்து மீண்டு வந்தது சந்தையில் மீண்டும் நம்பிக்கையைக் கொண்டுவந்தது. அப்போது காணப்பட்ட வலுவான போக்கும் சந்தையின் சென்டிமென்டை மேம்படுத்தியது.

கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கைக் கூட்டம் அமைந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களும் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், பெரும்பாலானோர் ரிசர்வ் வங்கி கவர்னரின் கருத்துக்காகக் காத்திருந்தார்கள். அவரும் ஏமாற்றமளிக்கவில்லை. அரசுப் பத்திரங்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனால் கடன் பத்திரச் சந்தை உற்சாகமடைந்திருக்கிறது. ரூபாய் மதிப்பு வெகுவாக வலுவிழந்திருக்கிறது. ஆண்டின் மிகக் குறைந்தபட்ச நிலைக்குச் சரிந்திருக்கிறது. ஆனால், பங்குச் சந்தை ரிசர்வ் வங்கியின் பணவீக்கம் மற்றும் ஜி.டி.பி வளர்ச்சி உள்ளிட்ட அறிவிப்புகளால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. இது சந்தையை ஏற்றத்தை நோக்கி நகர்த்தியது. வெளிநாடு களிலிருந்து வரும் முதலீடு நிலையாக இருந்துவருகிறது. இது சந்தையில் தொடர்ந்து குறைந்தபட்ச அளவிலாவது நகர்வு வரம்புகளை உருவாக்கி வருகிறது. இது தினசரி வர்த்தகர்களுக்குச் சாதகமாக அமைந்தது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

குறிப்பிடத்தக்க சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஸ்மால் மற்றும் மிட்கேப் குறியீடுகள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருந்துவருகின்றன. நகர்வின் அகலம் பாசிட்டிவ்வாக இருப்பது சந்தையில் பங்கெடுப்பது மீண்டும் அதிகரித்திருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. காலாண்டு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளியாக இருக்கின்றன. அது சந்தையின் மீதான ஆர்வத்தைக் கணிசமாக உண்டாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வர்த்தகர்களுக்கு சாதகமான துறைகளாக விளங்கும் மெட்டல், இன்ஃப்ரா பிரிவு பங்குகளின் செயல்பாடு நன்றாக இருப்பதுடன், நகர்வின் போக்கும் சிறப்பாக இருந்தது. பெரும்பாலான துறை யில் வர்த்தகம் சிறப்பாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதுவும் சந்தையின் நகர்வை அதிகப்படுத்தியதற்கான காரணி யாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோன்ற அறிகுறிகள் எப்போதுமே தொடர் ஏற்றத்தின் போக்கை ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும். தற்போது வங்கிகள் தொடர்ந்து நிலையான போக்கில் இருப்பதுதான் சந்தையின் நகர்வில் பாசிட்டிவ் போக்கை உண்டாக்கும்.

மீண்டும் நிஃப்டி 15000 என்ற நிலையை எட்டுவதும் அந்த நிலையில் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் சந்தையின் போக்கு சிறப்பாக இருப்பதற்கு வழிவகுக்கும். சந்தையின் செயல்பாடு ஸ்மால் மற்றும் மிட் கேப் பிரிவுகளுக்கு விரிவடையும் போதுதான் மொமென்டம் இன்வெஸ்டிங்கை கொண்டுவரும்.

சார்ட்
சார்ட்

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் (METROPOLIS)

தற்போதைய விலை ரூ.2,382.05

வாங்கலாம்

கோவிட் பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் மெட்ரோ பொலிஸ் ஹெல்த்கேர் போன்ற நோய் பரிசோதனை நிறுவனங்களின் தேவையும் சேவையும் அதிகமாக இருக்கும். இது இந்த நிறுவனப் பங்கின் செயல்பாட்டுக்கு நல்ல அறிகுறி. இதனால் விலைநகர்வு அதன் செவ்வக வடிவ பேட்டனில் இருந்து பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடைவதைப் பார்க்க முடிகிறது. இந்தப் போக்கு அதன் இலக்கு விலையை ரூ.2,600 என்ற நிலைக்கு நகர்த்தியிருக்கிறது. ஸ்டாப்லாஸ் ரூ.2,100-வுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பல்ராம்பூர் சீனி மில்ஸ் (BALRAMCHIN)

தற்போதைய விலை ரூ.235.50

வாங்கலாம்

இந்தப் பங்கு தொடர்ந்து நமக்கு விருப்பமான பங்காக இருந்துவருகிறது. பலமுறை இந்தப் பங்கை பரிந்துரை செய்திருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இது நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி யிருக்கிறது.

சர்க்கரை மற்றும் எத்தனால் சார்ந்த நிறுவனப் பங்குகள் தொடர்பான பாசிட்டிவ் செய்திகள் வருவதால், மீண்டும் இந்தப் பங்கை பரிந்துரைக்கலாம். இந்தப் பங்கில் உருவாகியிருக்கும் புதிய ஏற்றத்தின் போக்கு குறுகிய காலத்தில் ரூ.280 - 290 என்ற நிலைக்குக் கொண்டு செல்லும். ரூ.220-க்குக்கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் (RCF)

தற்போதைய விலை ரூ.81.15

வாங்கலாம்

சர்க்கரை சார்ந்த பங்குகள் போலவே, உரம் சார்ந்த நிறுவனப் பங்குகளும் அவ்வப்போது சாதக மான செய்திகள் வரும்போது செயல்பாட்டுக்கு வருவதுண்டு. தற்போது உரப் பங்குகளின் பேட்டர்ன்களில் காளையின் போக்கு உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனப் பங்கை நாம் தேர்ந்தெடுக்கலாம். ராஷ்ட்ரிய கெமிக்கல் நிறுவனப் பங்கில் பிப்ரவரி 2021 இறுதியில் அதிக வால்யூமில் ஏற்றத்தைப் பார்க்க முடிந்தது. இந்தப் போக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சொல்லப்போனால், மேலும் புதிய உச்சங்களை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தப் பங்கை ரூ.73 ஸ்டாப்லாஸ் வைத்து வாங்க லாம். ரூ.105 வரை உயர வாய்ப்புள்ளது.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.