Published:Updated:

புதிய முதலீடு ரூ.65,000 கோடி... வேகமான வளர்ச்சி காணுமா டாடா குழுமப் பங்குகள்?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

புதிய முதலீடு ரூ.65,000 கோடி... வேகமான வளர்ச்சி காணுமா டாடா குழுமப் பங்குகள்?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பெரிதும் நம்புகிற பங்குகள் வரிசையில் குறிப்பிடத் தக்கவை டாடா குழும நிறுவனப் பங்குகள். இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் ஜாம்செட்ஜி டாடாவால் நிறுவனமாக 1868-ல் ஆரம்பிக்கப்பட்ட டாடா நிறுவனம். இன்று 150 நாடுகளுக்கும் மேல் செயல்படும் அளவுக்கு ஒரு பன்னாட்டு கூட்டுக் குழுமமாக வளர்ந்துள்ளது. அதன் பங்குகளில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம்; நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என பலர் சொல்லக் கேட்டிருப் போம். அது உண்மைதான் என்பதை பின்வரும் பங்கு தந்த வருமானத்தைப் பார்த்தாலே புரியும்.

டைட்டன் நிறுவனம் 1999-ல் ரூ.4 என்ற அளவில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இன்றைய அதன் ஒரு பங்கு விலை ரூ.2,500. அதாவது, 62,400% அல்லது 624 மடங்கு வளர்ச்சி. இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தர உயர்வு, கலை, பண்பாடு, தொழில்நுட்பம், இயந்திரவியல், விமானப் போக்குவரத்து என்று அனைத்துத் துறை களிலும் கால்பதித்துள்ள டாடா குழுமத்தின் 66% மூலதனப் பங்குகளை டாடா சன்ஸ் என்னும் மக்கள் உபகார அறக்கட்டளை கொண்டுள்ளது. மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களை வெற்றிகரமாகக் கையகப் படுத்தும் இந்திய நிறுவனமாக டாடா குழுமம் திகழ்கிறது.

வங்கிக் கடன் அல்லது பங்குச் சந்தை மூலம் 2023-ம் நிதியாண்டில் சுமார் ரூ.64,000 கோடி களை தனது நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டத்தில் டாடா குழுமம் உள்ளது. இதனால் டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்கு களில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

புதிய முதலீடு ரூ.65,000 கோடி... வேகமான வளர்ச்சி காணுமா டாடா குழுமப் பங்குகள்?

டாடா மோட்டார்ஸ்...

இந்த நிதியாண்டில் டாடா குழுமம் அதிகப்படியான முதலீட்டை டாடா மோட் டார்ஸ் நிறுவனத்தில் செய்ய உள்ளது. உலக அளவிலான மின்னணு சிப் தட்டுப்பாட்டை அடுத்து வாகனத்துறை கடும் பாதிப்புக்குள்ளானது.இதை அடுத்து சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜப்பானின் ரெனசாஸ் நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்து அடுத்த தலைமுறைக்கான மின்வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளது.

மின் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 650 பேருந்துகள் இந்தியாவில் ஓடுகின்றன. இவை மொத்தமாக 40 லட்சம் கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், சமீபத்தில் டெல்லி மாநில அரசு 1,500 மின் பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தை டாடாவுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் ஜூன் காலாண்டில் இந்த நிறுவனம் கடந்த இதே காலாண்டைவிட 48% வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தியாவில் நான்கு சக்கர மின் வாகன விற்பனையில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ள நிலையில் 2024-ம் ஆண்டுக்குள் மின் வாகனங்களின் விற்பனையை ஐந்து மடங்காக உயர்த்த இந்த நிறுவனம் ரூ.32,000 கோடி முதலீட்டைத் திரட்ட திட்ட மிட்டுள்ளது இந்த நிறுவனப் பங்கின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம்.

டாடா ஸ்டீல்...

உலோகத் துறையில் இந்தியா வின் இரண்டாவது மிகப்பெரும் நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனம், இங்கிலாந்தின் உருக்காலை துறையில் மிகப் பெரும் நிறுவனம் ஆகும். ஆஸ்திரேலியாவின் பி.ஹெச்.பி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து மாசில்லா உலோக உற்பத்தியில் கவனம் செலுத்த உள்ளது. அடுத்த சில ஆண்டு களில் 30% வரை மாசு வெளிப் பாட்டைக் குறைக்கவும் சில பத்தாண்டுகளில் முழுவதும் மாசில்லா உலோக உற்பத்தியை செயல்படுத்தவும் நிறுவனம் முதலீடுகளைத் திரட்ட உள்ளது. இங்கிலாந்து ஆலையில் மாசு குறைந்த உற்பத்திக்காக ஆகும் செலவில் பாதியை மானியமாக வழங்க வேண்டி அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

34 மில்லியன் டன்கள் என்னும் தற்போதைய உற்பத்தி அளவை உயர்த்தும் தேவைக் காகவும் ரூ.12,000 கோடியை முதலீட்டுக்குத் திரட்ட உள்ளது. ரூ.8,500 கோடியை இந்திய ஆலைகளுக்கும் ரூ.3,500 கோடியை ஐரோப்பிய ஆலை களுக்கும் முதலீடு செய்ய உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.

புதிய முதலீடு ரூ.65,000 கோடி... வேகமான வளர்ச்சி காணுமா டாடா குழுமப் பங்குகள்?

டாடா பவர்...

டாடாவின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமான டாடா பவர் 26 லட்சம் நுகர் வோர்களைக் கொண்ட இந்தியா வின் மிகப் பெரிய ஒருங் கிணைந்த மின் நிறுவனமாகும். இது தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நம்பர் ஒன் சோலார் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. இது 2.67 மெகாவாட் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சோலார் கூரையைக் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நிறுவியுள்ளது. ஒரு ஜிகா வாட் அளவிலான சோலார் உற்பத்தி தளவாடங் களை ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனம் இதுவாகும்.

இந்த நிறுவனத்தின் முதலீட் டுக்கு ரூ.14,000 கோடியைத் திரட்ட டாடா குழுமம் முயற்சி எடுத்து வருவது கூடுதல் தகவல். கடந்த இரு ஆண்டுகளில் நான்கு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியை முதலீட்டாளர் களுக்கு வழங்கியுள்ள இந்த நிறுவனம், சமீபத்திய சந்தைத் திருத்தங்களைத் தாண்டி இன்னும் நல்ல வளர்ச்சியைக் காணும் என நிபுணர்கள் கணித் துள்ளனர். அண்மையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் டாடா பவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய முதலீடு ரூ.65,000 கோடி... வேகமான வளர்ச்சி காணுமா டாடா குழுமப் பங்குகள்?

டாடா கெமிக்கல்ஸ்...

டாடா கெமிக்கல்ஸ் இன்று உலகில் சோடா சாம்பலை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. இது ஓர் உலகளாவிய நிறுவனமாகும். இது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இயங்குகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைகின்றன. இதன் சிறப்புத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இந்தியாவில் உள்ள 80% மாவட்டங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைகின்றனர். இந்த நிறுவனத்தில் டாடா குழுமம் சுமார் ரூ.4,000 கோடி முதலீடு செய்ய நிதி திரட்ட உள்ளது.

இதர டாடா பங்குகள்...

இவை தவிர, மற்ற டாடா பங்குகளான டி.சி.எஸ், டைட்டன், வோல்டாஸ், டிரெண்ட், டாடா கம்யூனிகேஷன்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாடா எலெக்சி போன்ற நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம் என வெவ்வேறு தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. குறிப்பாக, தொழில் நுட்ப துறையில் இயங்கும் டி.சி.எஸ் நிறுவனம் ஐரோப்பிய சந்தைக்கு மென்பொருள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங் களில் வருவாய் அடிப்படையில் நம்பர் ஒன் நிறுவனமாக மீண்டும் உயர்ந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் சந்தை மூலதன அடிப்படையில் இரண்டாவது பெரிய நிறுவனம் இதுவாகும். மேலும், நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையும் உலக அளவில் ஆறு லட்சம் என்பதாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் மற்றும் இதர சில நிறுவனங்களின் தயாரிப்புகளை வடிவமைக்கும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வை விரைவில் வெளியிட டாடா குழுமம் தயாராகி வருகிறது. இவை டாடா குழுமப் பங்குகளுக்கு பாசிட்டிவ் விஷயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது!