Published:Updated:

ரிலையன்ஸ் பங்கில் இப்போது முதலீடு செய்யலாமா? டெக்னிக்கல் பார்வை...

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

R E L I A N C E

ரிலையன்ஸ் பங்கில் இப்போது முதலீடு செய்யலாமா? டெக்னிக்கல் பார்வை...

R E L I A N C E

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

இந்தியப் பங்குச் சந்தையின் பயணத்தில் வளர்ச்சி கண்ட மகத்தான பங்குகள் என்று பட்டியல் தயார் செய்தால் அதில் ரிலையன்ஸ் பங்கு நிச்சயம் முன்னணியில் இருக்கும். இந்த நிறுவனம் இதுவரை கண்டுவந்துள்ள மாற்றங்கள் அதன் வளர்ச்சியை மட்டும் சாத்தியப்படுத்தாமல் அதன் பங்குதாரர்களுக்கும் செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகளை வழங்கி வந்துள்ளது.

ரெஜி தாமஸ்
பங்குச் சந்தை 
நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

பங்கு முதலீட்டு உலகம், எப்போதெல்லாம் ரிலையன்ஸ் குறித்த செய்திகள் வருகிறதோ, அப்போது உடனடியாகக் கவனத்தைத் திருப்பும். சமீபத்தில் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் முதலீட்டாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளன. இந்தப் பங்கின் எதிர்காலம் எப்படி இருக்கும், இப்போது இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வி களையும் எழுப்பியுள்ளது.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பின்வரும் விஷயங்களை ஆராய்வதன் மூலம் பெற முடியும்.

1. மாற்றம்

காலத்துக்கேற்ப அவசியமான மாற்றங்களைச் செயல்படுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் அவ்வப்போது தன்னை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. நூற்பாலை தொழிலிலிருந்து முந்தைய கால ஒருங்கிணைப்பு கலாசாரம், எண்ணெய் சுத்திகரிப்பு, டெலிகாம், சில்லறை வர்த்தகம், தற்போது எரிசக்தி உற்பத்தி வரை தொடர்ந்து மாற்றங்களை நிகழ்த்தி வந்திருக்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் மாற்றங்களுக்கு உட்படுத்துவதில் அதன் திறன் அசாத்தியமானது. அதனால் தொடர்ந்து வளர்ச்சியின் பாதையில் இருந்துவருகிறது.

2. வேகம்

திட்டத்தைச் செயலாக்கும் வேகத்தில் ரிலையன்ஸின் எந்தத் திட்டமும் இதுவரை 36 மாதங்களைத் தாண்டியதில்லை. தற்போது பசுமை எரிசக்தி துறையில் களம் இறங்கி யுள்ளது. இதையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் என்று சந்தேகம் இல்லாமல் நம்பலாம். ரிலையன்ஸின் வெற்றிப் பயணத்தில் அதன் திட்ட செயலாக்க வேகம் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த நிறுவனம் இதுவரை களம் கண்ட அனைத்திலும் வெற்றி அடைய இது ஒரு முக்கியக் காரணம்.

3. தொழில் பரவல் மற்றும் தாக்கம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழில்களை ஆய்வு செய்தால் அதன் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ள அம்சங்கள், நுகர்வோரை மையமாகக் கொண்டு செயல்படுதல், தேவை மற்றும் வாங்கும் திறன் ஆகியவைதான். ஜியோவாக இருக்கட்டும் அல்லது ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஹைபர் மார்க்கெட் எதுவாக இருந்தாலும் நுகர்வோர் மையமாக இருக்க வேண்டும், அவர்களை எளிதில் சென்றடையும் வகையிலும், பரவலாக நுகரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அதன்படி, தற்போது அடியெடுத்து வைத்துள்ள ஆற்றல் துறை உலக இயக்கத்தின் இன்றியமையாத ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. நிதிநிலை

நிதிநிலையை ஸ்திரமாக வைத்திருக்க நிலையான வருவாய் உருவாக்கம், குறைந்த செலவில் நிதி திரட்டுதல் போன்ற திறன்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் தொழிலை விரிவுபடுத்த வும், புதிய தொழில் திட்டங்களை வகுக்கவும் முடியும். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த இரண்டிலும் வெற்றிகர மாகச் செயல்பட்டுவருகிறது.

கொரோனா முதல் அலை தாக்கத்தின் போதுகூட ரிலையன்ஸ் நிறுவனம் அதன் மொத்தக் கடனையும் அடைக்கும் வகையில் ரூ.70,000 கோடியை சில தொழில் ஒப்பந்தங்கள் மூலம் திரட்டியது. மேலும், உத்திசார் தொழில் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டதுடன், ரிலையன்ஸில் முதலீடு செய்தது சரியான முடிவு என்று நம்பும் அளவுக்கு நிரூபித்தும் காட்டியிருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள கூட்டாளி நிறுவனங்கள் அதன் வளர்ச்சிக் கனிகளை சுவைக்க காத்திருக்கும் போது முதலீட்டாளர்களாகிய நாம் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கலாமா?

ரிலையன்ஸ் பங்கில் இப்போது முதலீடு செய்யலாமா? டெக்னிக்கல் பார்வை...

டெக்னிக்கல் பார்வை சொல்வது என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் பங்கின் விலை ரூ.500 என்ற நிலையிலிருந்து தற்போதைய விலை ரூ.2,100-க்கு உயர்ந்து உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நான்கு மடங்கு வளர்ச்சி. இது மகத்தான ஏற்றமும்கூட. இரண்டாவது, இந்தப் பங்கின் தற்போதைய விலை வரம்பு ரூ.1,840 - 2,300 என்ற நிலையில் உள்ளது. இந்தக் கட்டுரை வெளியாகும்போது பங்கு விலை இந்த வரம்பின் உச்ச நிலையில் கூட இருக்கலாம்.

இந்த விலை ஏற்றம் நம்மில் பலரை லாபத்தை எடுக்க உந்தவும் வாய்ப்புள்ளது. ஆனால், இதன் பேட்டர்ன் நகர்வுகள் ஒரு புதிய சுவாரஸ்ய மான நகர்வுக்கான அறிகுறியைக் கொண்டிருக்கிறது. பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.2,060 என்ற நிலைக்குக்கீழ் இறங்காமல் இருந்தால், இந்தப் பங்கில் புதிதாக முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பதற்கான அறிகுறியாகும். ரூ.2,460 மற்றும் அதற்கும் மேல் இலக்கு விலையை நிர்ணயிக்கலாம்.

இப்போது நாம் ஆரம்பத்தில் கேட்டுக்கொண்ட கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். பதில்... ஆம். இந்தப் பங்கை நீண்டகால முதலீட்டு நோக்கில் வாங்கலாம்.

தொழில் அளவு, விரிவாக்கம் மற்றும் வேகம் போன்றவற்றில் வலுவான நம்பிக்கை கொண்ட இந்த நிறுவனம் தற்போது தொடங்கியுள்ள பசுமை எரிசக்தி துறையிலும் மற்றொரு மைல்கல்லைப் பதிக்கும். அதற்கான பெரிய கனவு, லட்சியம், ஆழமான ஈடுபாடு, அர்ப்பணிப்பான விடாமுயற்சி அதனிடம் உள்ளது. அது கால் பதித்துள்ள துறைகளில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி அதன் பலன்களை அனுபவிக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கும். எனவே, அதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் மகத்தான வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: திவ்யா