Published:Updated:

பங்குச் சந்தை முதலீடு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்..! நஷ்டத்தைத் தவிர்க்க டிப்ஸ்...

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

S T O C K I N V E S T I N G

பங்குச் சந்தை முதலீடு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்..! நஷ்டத்தைத் தவிர்க்க டிப்ஸ்...

S T O C K I N V E S T I N G

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com

பெரும்பாலான உலகப் பங்குச் சந்தைகள் தற்போது ஏற்றத்தில் இருக்கின்றன. பொதுவாக, உலகப் பொருளாதாரம் நன்றாக இருக்கும் நிலையில் அல்லது நம்பிக்கை பெறும் போது பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்துகொண்டுதான் இருக்கும். அதே வேளையில், பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கும்போது பங்குச் சந்தை இறங்கும்; தங்கம் போன்ற முதலீடுகளின் மதிப்பு உயரும்.

நா.சரவணகுமார் 
ஆலோசகர், 
www.
richinvestingideas.com
நா.சரவணகுமார் ஆலோசகர், www. richinvestingideas.com

பங்குச் சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்துக்கு பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே நேரம், ‘ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்துவிட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்துவிட்டது. எனது முதலீட்டில் 70-80% தொகையை இழந்துவிட்டேன்’ என நம்மில் பலர் புலம்புவதைப் பார்த்திருப்போம். இந்த அனுபவம் முதலீட்டில் உள்ள பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

கொரோனாவுக்குப் பிறகான பங்குச் சந்தை ஏற்றம் குறுகிய காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக் கிறது. பங்குச் சந்தையில் வர்த்தக மாகும் பெரும்பாலான பங்குகள் கடந்த ஆறு மாதங்களில் 100 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. இந்த ஏற்றம் நீண்டகாலத்தில் நீடிக்குமா என்பது சந்தேகமே.

பொதுவாக, நல்ல நிறுவன பங்குகளே இதுபோன்ற ஏற்றத்தை நீண்டகாலத்தில் தக்க வைத்துக்கொண்டு, முதலீட் டாளர்களுக்கு லாபத்தை அளிக் கின்றன. கடனில் தத்தளிக்கும் நிறுவனங்கள், நிர்வாகப் பிரச்னைகளைக் கொண்டுள்ள நிறுவனங்களின் பங்கு விலை மெல்ல மெல்லக் குறைந்து, கடைசியில் பென்னி பங்குகளாக (Penny Stocks) மாறிவிடுகின்றன.

உங்கள் போர்ட்ஃபோலி யோவில் நீங்கள் 10 வெவ்வேறு நிறுவனப் பங்குகள் இருந்தாலும், அனைத்துப் பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டுப் பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்கும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற இறக்கத்தைக் காணும்.

பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் முதலீடு செய்து பணப் பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெடத் தேவை யில்லை. இருப்பினும் சில அடிப்படைக் காரணிகளை, அம்சங்களை நாம் வாங்கிய அல்லது வாங்கப்போகும் நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நம் முதலீடு நஷ்டத்தைச் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு பங்கில் 10 விதமான காரணிகளை அலசி ஆராய்ந்தால், நம் முதலீடு நல்ல லாபத்தைத் தருவதுடன் நமக்கு நிம்மதியையும் தரும். அந்த 10 காரணிகள் என்னென்ன?

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

1. இ.ஐ.சி கட்டமைப்பு (Economy, Industry, Company) முறையில் ஒரு நிறுவனப் பங்கைப் புரிந்துகொள்வது.

2. நிர்வாகத் திறன் (Corporate Governance) எப்படி என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

3. நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாகக் கற்றுக்கொள்வது.

4. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

5. பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)

6. மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed).

7. ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டுக் காண்பது (PE).

8. நிறுவனத்தின் கடன் எப்படி? (கடன் - பங்கு விகிதம் - Debt to Equity)

9. நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம் (Promoter Holding & Pledging)

10. மதிப்பீடுகள் (Valuation) அவசியமானது. நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன? (Price is what you pay, value is what you get)

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றெல்லாம் ஒரு பங்கை வாங்காமல், மேலே சொன்ன 10 அம்சங்களையும் நீங்களே கொஞ்சம் அலசி ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுத்தால் உங்கள் முதலீடு உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் குறைவுதான்!