Published:Updated:

பங்குச்சந்தை: விலையேற்றத்தில் புதிய 4 ஐ.பி.ஓ-க்கள்; முதலீடு செய்ய சரியான நேரமா?

IPO
IPO

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த நான்கு பங்குகளின் போக்கு எப்படி இருக்கும், இந்தப் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமா என்று விளக்குகிறார் நிபுணர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமீபத்தில் ஐ.பி.ஓ-வுக்கு வந்த தேவயானி இன்டர்நேஷனல், விண்ட்லாஸ் பயோடெக், எக்ஸாரோ டைல்ஸ், கிருஷ்ணா டயக்னாஸ்ட்டிக்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்குகளும் இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.

இதில் தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனப் பங்கு விலை வெளியீட்டு விலையான ரூ.90-லிருந்து 56% உயர்ந்து, 140 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகத் தொடங்கியது. அதே போல, கிருஷ்ணா டயக்னாஸ்ட்டிக்ஸ் இன்று வர்த்தகமாகத் தொடங்கும்போதே வெளீயீட்டு விலையான ரூ.954-லிருந்து 11.55% விலை அதிகரித்து வர்த்தகம் ஆனது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை
பங்குச் சந்தை வெற்றிக்கு போட்டுப் பாருங்கள் எதிர்நீச்சல்..! அனுபவம் தந்த பாடங்கள்...

எக்ஸாரோ டைல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, வெளியீட்டு விலையான ரூ.120-லிருந்து 5% விலை அதிகரித்து வர்த்தகம் ஆனது. ஆனால், விண்ட்லாஸ் பயோடெக் பங்கின் விலை மட்டும் தனது வர்த்தகத்தை ஆரம்பிக்கும்போது வெளியீட்டு விலையான ரூ.460-லிருந்து 8.39% விலை குறைந்து, ரூ.419-க்கு வர்த்தகமானது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த நான்கு பங்குகளின் போக்கு இனி எப்படி இருக்கும், இந்தப் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமா என்கிற கேள்விகளை பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம்.

``இன்றைய நிலையில், பங்குச் சந்தையின் போக்கு ஏற்றத்தில் இருப்பதால், தற்போது பட்டியலிடப்படும் பங்குகளின் விலையும் அதிகபட்ச விலையில் லிஸ்ட் ஆகின்றன. ஆனால் இதை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. ஏனெனில், சமீப காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரீடெய்ல் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட மாதம் 50 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் நாடு முழுவதிலிருந்து பங்குச் சந்தை முதலீட்டுக்குள் நுழைகிறார்கள்.

இவர்களின் கவனம் புதிதாக வெளியிடப்படும் ஐ.பி.ஓ-க்களின் மீதுதான் இருக்கின்றன. அதனால்தான் இன்றைய நிலையில் ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடும்போது, ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்படும் பங்கு பிரிவில் அதிக பங்குகள் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

இன்று பங்குச் சந்தையில் லிஸ்ட் ஆன, தேவயானி இன்டர்நேஷனல் , எக்ஸாரோ டைல்ஸ், கிருஷ்ணா டயக்னாஸ்ட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வெளியீட்டு விலையைவிட விலை அதிகரித்து லிஸ்ட் ஆகியிருக்கின்றன.

இதனால் இந்தப் பங்குகளின் போக்கு இனிவரும் காலத்தில் ஏற்றத்தில் இருக்கும் என சொல்லிவிட முடியாது. இது தற்போதைய சூழ்நிலைதான். ஐ.பி.ஓ வெளியிடப்பட்டபோது, பங்குகள் அதிகம் கேட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்ததும் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருக்கலாம். உண்மையான விலைப்போக்கானது, இந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரியவரும்.

IPO திருவிழா... முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! | Startup IPO | Nanayam Vikatan

வருகிற செப்டம்பர் மாதத்திலிருந்து காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிடும் என்பதால், முதலீட்டாளர்கள் அந்த முடிவுகளைப் பார்த்தபிறகு இந்த நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம்" என்றார் தெளிவாக.

புதிய பங்குகளில் முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுமையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு