Published:Updated:

எண்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..!

K N O W Y O U R C O M P A N Y - (NSE SYMBOL: ENDURANCE, BSE CODE: 540153)

பிரீமியம் ஸ்டோரி

அவுரங்காபாத் நகரில் சிறிய அளவில் இரண்டே இரண்டு ஹைபிரஷர் அலுமினியம் டை-காஸ்டிங் மெஷின் களைக் கொண்டு 1985-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த முயற்சி தான் இன்றைக்கு எண்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற பெயரில் 26 உற்பத்தி மையங்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. மிகப் பெரும் ஓ.இ.எம் (Original Equipment Manufacturers) நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

எண்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ்
எண்டியூரன்ஸ் டெக்னாலஜிஸ்

நிறுவனத்தின் வளர்ச்சி

இன்றைக்கு இந்த நிறுவனம் இந்தியாவில் இயங்கும் அலுமினியம் டைகாஸ்டிங் நிறுவனங்களிலேயே மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 1996-ம் ஆண்டில் இரு சக்கர வாகனங்களுக்கான சஸ்பென்ஷனை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது இந்த நிறுவனம். 1998-ம் ஆண்டில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டிரான்ஸ்மிஷன் இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

அலுமினியம் காஸ்டிங் மற்றும் மெஷினிங், சஸ்பென்ஷன், டிரான்ஸ்மிஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் என்ற நான்கு பெரும் பிரிவுகளில் இயங்கிவருகிறது இந்த நிறுவனம்.

இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான டயர்-I ஓ.இ.எம் சப்ளையராக இந்த நிறுவனம் இன்றைக்கு வெற்றிகரமாகச் செயல் பட்டு வருகிறது.

தன்னுடைய வாடிக்கையாளர்கள் இருக்கும் இடங்களுக்கு அருகேயே தன்னுடைய உற்பத்தி வசதியைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவில் 17 மற்றும் ஐரோப்பாவில் 9 என்ற கணக்கில் 26 இடங்களில் உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே புதியதாக ஒரு உற்பத்தி வசதி யைக் கட்டுமானம் செய்தும் வருகிறது.

நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் தன்னுடைய வாடிக்கையாளர்களின் தேவைகளை அனைத்து வகைகளிலும் பூர்த்தி செய்வதற்கு உதவும் வண்ணம் டிசைன் செய்தல், புதியதாக உருவாக்குதல், சோதனை செய்தல், சரிபார்த்தல், உற்பத்தி மற்றும் வாகன விற்பனைக்கு பிந்தைய தேய்மானத்தின் காரணமாக உதிரிபாகங்களை மாற்றும் சந்தைக்கு பொருள்களை உற்பத்தி செய்து தருதல் எனப் பல்வேறு படிநிலைகளில் உள்ள வர்த்தகத்தை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

புள்ளிவிவரங்கள்
புள்ளிவிவரங்கள்

பிரமாண்டமான விரிவாக்கம்

தொழில் ரீதியாகத் தனக்கு தேவைப்படும் ஆராய்ச்சிகளைச் செய்துகொள்ளும் வசதியை தன்வசத்தே கொண்டுள்ள இந்த நிறுவனம், இந்த ஆராய்ச்சி வசதிகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் 16 காப்புரிமைகளையும், எட்டு டிசைன்களுக்கான பதிவு களையும் செய்துள்ளது.

மேலும், 66 காப்புரிமை விண்ணப்பங்களும், ஐந்து டிசைன் பதிவுக்கான விண்ணப்பங்களும் தற்போது பதிவு செய்வதற்கான படிநிலைகளில் நிலுவையில் இருக்கிறது. இது தவிர, இத்தாலியில் இரண்டு டெக்னாலஜி சென்டர் களையும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதிகளில் 232 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒட்டுமொத்தப் பணியாளர்கள் என்று பார்த்தால், இந்தியாவில் 4089, ஜெர்மனியில் 220 மற்றும் இத்தாலியில் 547 என்ற அளவில் பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

29 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம், இரண்டு டிஸ்ட்ரிப்யூஷன் சென்டர்களையும், இந்தியாவில் 335 விநியோகஸ்தர்கள்/டீலர்கள் கொண்ட நெட்வொர்க்கை யும், அயல்நாடுகளில் 40 விநியோகஸ் தர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

2019-20-ம் நிதியாண்டின் நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் விற்றுவரவில் 56 சதவிகித அளவுக்கு இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங் களிலிருந்தும், கிட்டத்தட்ட 32% அளவிலான விற்றுவரவு நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனையிலிருந்தும், கிட்டத்தட்ட 11 சதவிகித அளவிலான விற்றுவரவு மூன்று சக்கர மற்றும் ஏனைய உதிரிபாகங்கள் விற்பனையிலிருந்தும் வருகிறது.

நாடுகள் ரீதியாகப் பார்த்தால் இந்தியாவில் செய்யப்படும் விற்பனையில் இருந்து கிட்டத்தட்ட 71% அளவிலான விற்றுவரவும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 29% அளவிலான விற்றுவரவும் இருக்கிறது.

இரு சக்கர வாகனங்களுக்கான அலுமினியம் காஸ்டிங் மற்றும் மெஷினிங், சஸ்பென்ஷன், டிரான்ஸ்மிஷன், பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பிரிவுகளில் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம்.

இந்தப் பிரிவுகளின் கீழ்வரும் அலாய் வீல்கள், ஷாக் அப்சர்பர்கள், ரோட்டரி டிஸ்க்குகள், சிலிண்டர் ஹெட்கள், இன்ஜின் கவர்கள், கிராங்க் கேஸ்கள், வாகனங்களின் முன்பகுதியில் இருக்கும் ஃபோர்க்குகள், பிரேக் காலிபர் அசெம்ப்ளிகள், மாஸ்டர் சிலிண்டர்கள், டிஸ்க் பிரேக் அசெம்ப்ளி காம்போனெட்கள், க்ளெச், சிலிண்டர் ப்ளாக்குகள் போன்ற உதிரிபாகங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது.

மூன்று சக்கர வாகனங் களுக்கான ஹைடிராலிக் ஷாக் அப்சர்பர், டிரம் பிரேக் அசெம்ப்ளி, டிரம் பிரேக், டான்டெம் மாஸ்டர் சிலிண்டர், க்ளெச் அசெம்ப்ளி போன்றவற்றை உற்பத்தி செய்கிறது இந்த நிறுவனம்.

நான்கு சக்கர வாகனங் களுக்கான கியர் பாக்ஸ் ஹவுஸிங், சிறிய இலகு ரக வாகனங்களுக்கான க்ளெட்ச்கள், குவாட்ரி சைக்கி ளுக்கான ஷாக் அப்சர்பர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ஐரோப்பிய நிறுவனங்களுக்காக நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டீல் வீல் ஹப்ஸ், ஹெட் ஆக்சில்ஸ், க்ராஸ் மெம்பர்ஸ், ஸ்டீரிங் ஹவுஸிங் (சஸ்பென்ஷன் மற்றும் பாடி பார்ட்ஸ்), கேம் கேரியர், எக்ஸாஸ்ட் மேனி போல்ட், ஆயில் பேன், ஸ்பெஷா லிட்டி பிளாஸ்டிக் கவர், பல்வேறு ரக ப்ராக்கெட்கள், டிரான்ஸ் மிஷன் ஹவுஸிங், டார்க் கன்வர்ட்டர் ஹவுஸிங், கியர் பாக்ஸ் ஹவுஸிங் (டிரான்ஸ்மிஷன் பார்ட்ஸ்) மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான டிரான்ஸ் மிஷன் சிஸ்டம்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 2015-ம் நிதியாண்டு நிலவரப்படி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் (விற்று வரவின் அடிப்படையில்) முதலாவது பெரிய உற்பத்தி வசதியாகவும், அலுமினியம் டை-காஸ்டிங்கில் (2016/2017/2020 நிதியாண்டு நிலவரங்களின்படி- உற்பத்தி அளவீடில்) முதலாவது பெரிய உற்பத்தி வசதிகளைக் கொண்ட நிறுவனமாகவும் திகழ்கிறது இந்த நிறுவனம்.

தொழில்நுட்பக் கூட்டணியாக ஐரோப்பாவின் முன்னணி சஸ்பென்ஷன் நிறுவனத்துடன் மோட்டார் சைக்கிள் சஸ்பென்ஷன் காம்ப்போ னென்ட்கள் தயாரிப்பில் அலுமினியம் போர்ஜிங்குகளை உற்பத்தி செய்வதற்கான கூட்டணியை வைத்துள்ள இந்த நிறுவனம், எண்ட்யூரன்ஸ் அல்டெர் எஸ்பிஏ (டிரான்ஸ் மிஷன் காம்போனென்ட்ஸ்), க்ரைமெசா  (பிரேக்குகள் சம்பந்தப்பட்ட) போன்ற நிறுவனங்களுடனும் கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளது.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி தங்களுடைய தயாரிப்புகளில் உபயோகப்படுத்தும் நிறுவனங் கள் இயங்கும் துறை ஆட்டோ மொபைல் துறை. இந்தத் துறையானது பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சியைச் சார்ந்தே விற்பனை வளர்ச்சியைச் சந்திக்க வாய்ப்பிருக்கும் துறையாகும்.

எனவே, ஏதாவது ஒரு காரணத்தால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, தேக்க நிலையைச் சந்தித்தாலோ அது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டையும் பாதிக்கும் எனலாம்.

மேலும் போட்டி, திடீரென்று வருகிற பெரிய அளவிலான தொழில்நுட்ப மாறுதல்கள், மூலப்பொருள்கள்விலை உயர்வு, அந்நிய செலாவணி மதிப்பு மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளேயாகும்.

சார்ட்
சார்ட்

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

இந்தப் பகுதி பங்குகளை பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர் களுக்கு பங்குகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம்.

பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால் எந்த ஒரு பங்கை வாங்குவதற்கு முன்பும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர் ஒருவரை கலந்து ஆலோசித்து அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவுசெய்த பின்னரே நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

பிட்ஸ்

ருகிற 21-22-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்கப்படும் என அறிவித்த மத்திய நிதி அமைச்சர், அந்த நிறுவனத்துக்கு ரூ..3,224 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்!

பிட்ஸ்

ன்லைன் மூலம் பணப் பரிவத்தனை செய்வது இன்றைக்கு வாடிக்கையான விஷயமாகி விட்ட நிலையில், அந்தத் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு