Published:Updated:

LIC IPO: பாலிசிதாரர்கள் டீமேட் கணக்கை இணைப்பது எப்படி?

எல்.ஐ.சி
News
எல்.ஐ.சி

எல்.ஐ.சி பங்கு முதலீட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசிதாரகள் கட்டாயம் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும் மற்றும் பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்று எல்.ஐ.சி நிறுவனமும் அறிவித்துள்ளது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்.ஐ.சி ஐ.பி.ஓ வருகிற 2022-2023-ம் நிதி ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய பங்குகள் சந்தையில் வரும்போது, பாலிசிதாரர்களுக்கு அதில் 10% இடஒதுக்கீடு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, ஐ.பி.ஓ வெளியீட்டின் போது பங்கு வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதாவது, உங்களிடம் எல்.ஐ.சி பாலிசி இருந்தால், அதன் ஐ.பி.ஓ வெளியீட்டில் நீங்கள் பங்கேற்கலாம். அந்த பங்குகளை வாங்க, மற்ற முதலீட்டாளர்களைவிட உங்களுக்கு ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை இருக்கும். உதாரணத்துக்கு, ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வெளியிடுகிறது என்றால், அதில் அதன் பாலிசிதாரர்களுக்கு 10% ஒதுக்கீட்டில் பங்குகள் கிடைக்கும்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த பங்கு முதலீட்டில் பங்கேற்க விரும்பும் பாலிசிதாரர்கள் கட்டாயம் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும் மற்றும் பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும் என்று எல்.ஐ.சி நிறுவனமும் அறிவித்துள்ளது.

முதலில், www.licindia.in என்கிற வெப்சைட்டுக்குச் சென்று, அங்கு பாலிசிதாரர்கள் தங்களின் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் முதலில் வெப்சைட்டில் உள்நுழைந்ததும், அங்குள்ள `Online PAN registration' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். பெயர், பாலினம், பான் எண், மொபைல் நம்பர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதனை பூர்த்தி செய்த பின்னர், கேப்ட்சா குறியீட்டினை பதிவு செய்ய வேண்டும். பின்னர் `Get OTP' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் மொபைல் நம்பருக்கு வரும் ஓ.டி.பி எண்ணை டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பான் கார்டை பாலிசியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

அதேபோல் பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் உடனடியாக டீமேட் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் எல்.ஐ.சி. அறிவித்துள்ளது. இந்த கணக்கு தொடங்க மற்றும் பராமரிக்க ஏற்படும் செலவுகளை பாலிசிதாரர்களே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலிசிதாரர்கள் டீமேட் கணக்குகளைத் தொடங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள (Registered Depository Participants - NSDL/ CDSL) என்கிற ஏதேனும் ஒரு தளத்துக்குச் செல்லவேண்டும்.

என்.எஸ்.டி.எல்
என்.எஸ்.டி.எல்

என்.எஸ்.டி.எல் (NSDL):

https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmId=19

சி.டி.எஸ்.எல் (CDSL):

https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmId=18

டீமேட் கணக்கு தொடங்க பாலிசிதார்களின் புகைப்படம், பான்கார்டு, முகவரி சான்று மற்றும் கேன்சல் செய்யப்பட்ட காசோலை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற முகவர்களை அணுகலாம்.