Published:Updated:

விரைவில் வெளியாகிறது எல்.ஐ.சி ஐ.பி.ஓ..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

L I C I P O

விரைவில் வெளியாகிறது எல்.ஐ.சி ஐ.பி.ஓ..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

L I C I P O

Published:Updated:
எல்.ஐ.சி
பிரீமியம் ஸ்டோரி
எல்.ஐ.சி

ஆகாஷ்

எல்.ஐ.சி நிறுவனம் ஐ.பி.ஓ வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் திருப்பதால், அடுத்த சில மாதங்களில் எல்.ஐ.சி-யின் ஐ.பி.ஓ பங்குச் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியிடும் முடிவை நிதி அமைச்சர் கடந்த ஆண்டே வெளி யிட்டாலும், கடந்த ஒரு வருடமாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐ.பி.ஓ வெளியிடுவதில் மத்திய அரசுக்கு பல சிக்கல் இருந்துவந்தது. இந்த நிலையில், இந்த ஐ.பி.ஓ வெளியீட்டை அனுமதிக்கலாமா என்பது குறித்து பொருளாதார விவகாரத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு (CCEA) கடந்த 12-ம் தேதி அன்று கூடி விவாதித்து, எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியிட ஒப்புதல் தெரிவித்துள்ளது.

விரைவில் வெளியாகிறது எல்.ஐ.சி ஐ.பி.ஓ..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

அதுமட்டுமல்லாமல், எல்.ஐ.சி பெரும் மதிப்பு கொண்ட அரசு நிறுவனம் என்பதால், அந்த நிறுவனத்தின் மதிப்பை எப்படி நிர்ணயம் செய்வது என்பதில் பல குழப்பங்கள் இருந்து வந்தன. தற்போது இந்த நிறுவனத்தின் கடைசிக் காலாண்டில் நடந்த வர்த்தகத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து, இந்த நிறுவனத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இறுதியான முடிவு எடுக்கப்பட உள்ளது. எனவே, அடுத்த சில மாதங்களில் எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ பங்குச் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism