Published:Updated:

LIC-யின் பங்கு முதலீடு 10 ஆண்டு களில் இல்லாத அளவு குறைவு; என்ன செய்கிறது LIC?

அதிக சொத்து மதிப்புடன் இயங்கிவரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எல்.ஐ.சி பங்கு வெளியீட்டின் மூலம் மட்டும் 90,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

எல்.ஐ.சி நிறுவனம் இன்னும் சில மாதங்களில் ஐ.பி.ஓ வரும் நிலையில், பிற நிறுவனங்களில் அது செய்துள்ள முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதைக் கண்டு பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்!

எல்.ஐ.சி நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது. அந்த முதலீட்டின் அளவு 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்திருப்பதாக `Primeinfobase' தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் எல்.ஐ.சி நிறுவனம் செய்த முதலீடு 2009-ம் ஆண்டு ஜூன் காலாண்டில் 4.44 சதவிகிதமாக இருந்தது. இந்த முதலீடு, கடந்த செப்டம்பர் காலாண்டில் 3.69 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாத காலாண்டில் இது 3.74 சதவிகிதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ
விரைவில் வெளியாகும் LIC IPO; போட்டி போடும் 16 வியாபார வங்கிகள்; என்ன காரணம்?

மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் 2021-22-ம் நிதி ஆண்டில் ரூ.1.72 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாகக் கடன் இல்லாமல், அதிக சொத்து மதிப்புடன் இயங்கிவரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தை மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எல்.ஐ.சி பங்கு வெளியீட்டின் மூலம் மட்டும் 90,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதன்மூலம் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐ.பி.ஓ வெளியீடாக இது இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நிலையில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து, எல்.ஐ.சி நிறுவனம் தனது பங்கு முதலீடுகளை விற்று வெளியேறுவது குறித்த செய்திகள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு விதமான கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு முதலீடு ஏன் குறைந்தது, என்ன காரணம் என பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.நாராயணனிடம் கேட்டோம்.

``எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு முதலீடு குறைந்து வருகிறதே என்று முதலீட்டாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ நன்றாகவே இருக்கிறது. இந்த நிறுவனம் எப்போதுமே நல்ல தரமான, தகுதி வாய்ந்த நிறுவனப் பங்குகளில்தான் முதலீடு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஏ.கே.நாராயண்,
ஏ.கே.நாராயண்,

சில்லறை முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரை அனைவரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு எப்போது இருக்கும் என்றுதான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் அதிகாரபூர்வமான தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் ஐ.பி.ஓ வெளியீடு இருக்கும் என முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக, ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுகிறது என்றால், தனது நிதி சார்ந்த, முதலீடு சார்ந்த அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர வேண்டும். பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு அந்தத் தரவுகளுடன்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐ.பி.ஓ வெளியிடத் தயாராக இருக்கும் எல்.ஐ.சி நிறுவனமும் இந்த ஆவணங்களை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதன் காரணமாகக்கூட, தான் முதலீடு செய்திருக்கும் சின்னதும் பெரியதுமான நிறுவனங்களில் இருந்து எல்.ஐ.சி நிறுவனம் தனது முதலீட்டை விற்று வெளியேற நினைத்திருக்கலாம்.

LIC Building in Chennai
LIC Building in Chennai
Photo: Vikatan / Kalimuthu.P
எல்.ஐ.சி-யிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியா? என்ன நடக்கிறது?

அதுமட்டுமல்லாமல், இன்றைய சந்தையின் போக்கில், புராஃபிட் புக் செய்வது என்பது சாதாரணமான விஷயம்தான். அந்த வகையில் எல்.ஐ.சி நிறுவனமும் லாபம் பார்க்கும் நோக்கில்தான் முதலீடு செய்திருக்கும்; பங்குகளை விற்றிருக்கலாம். மேலும், இந்திய பங்குச் சந்தை புள்ளிகள் கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கிற மாதிரி, எல்.ஐ.சி நிறுவனம் செய்திருக்கலாம்.

எல்.ஐ.சி நிறுவனம் தற்போது எந்தப் பங்குகளில், எவ்வளவு முதலீடு செய்திருக்கிறது என்கிற விவரங்கள் முழுமையாகத் தெரியவில்லை. ஐ.பி.ஓ வெளியீட்டுக்குப் பிறகு, இந்த விவரங்கள் அனைத்தும் முழுமையாகத் தெரியவரும்" என்றார் தெளிவாக.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் எல்.ஐ.சி செய்திருக்கும் முதலீடு, பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இதில் எத்தனை லட்சம் கோடிக்கு முதலீட்டை எடுத்தது, இனி அந்த முதலீட்டை எப்போது பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடு செய்யும் என்பதே முக்கியமான கேள்வி...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு