Published:Updated:

சந்தை திடீர் இறக்கம்... இன்னும் இறங்குமா?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

சந்தை திடீர் இறக்கம்... இன்னும் இறங்குமா?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை கள் வேகமாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை அன்று திடீரென்று இறக்கத்தைச் சந்தித்தது.

அன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 1150 புள்ளிகள் அளவுக்கு இறக்கம் கண்டு, 59,417 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி குறியீடு 180 புள்ளிகள் இறக்கம் கண்டு, 17,887 என்ற நிலையில் வர்த்தகமானது. இந்த இறக்கத்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. வியாழன் அன்றும் சந்தை இறக்கத்திலேயே வர்த்தகமானது.

இந்தத் திடீர் இறக்கத்துக்கு என்ன காரணம், சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் விளக்க மான பதிலைத் தந்தார்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

‘‘சந்தையின் திடீர் இறக்கத் துக்குக் காரணம் பணவீக்கம். பணவீக்கம் பங்குச் சந்தைக்கு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து வந்த பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனால் பண வீக்கம் கட்டுக்குள் வரும் என எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கப் பணவீக்கம் 8.1 சதவிகிதமாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்தார்கள். ஆனால், அவர்கள் கணித்திருந்த அளவைவிடவும் அதிகமாக 8.3 சதவிகிதமாக பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்தது. இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகளில் பங்கு விற்பனை அதிகமாக இருந்தது. இதனால் பங்குச் சந்தைகளில் திடீர் இறக்கம் காணப்பட்டது.

எப்போதும் குறிப்பிடுவது போல சர்வதேச நிகழ்வுகள் இந்தியப் பங்குச் சந்தைகளில் சிறிய தாக்கங்களை உண்டாக்கும். ஆனால், அது அந்த நேரத்துக்கானதாகவே பெரும்பாலும் இருக்கும்.

கடந்த வாரம் உண்டான இறக்கமும்கூட அப்படியான ஒன்றுதான். அதனால்தான் புதன்கிழமை காலையில் 1100 புள்ளிகளுக்குமேல் இறக்கம் கண்ட சந்தை அதன் பிறகு மீண்டது. வர்த்தக முடிவில் 300 புள்ளிகள் அளவில் இறக்கத்துடன் நிறைவு செய்தது.

வியாழன் அன்றும் இறக்கத்தின் போக்கிலேயே சந்தை வர்த்தகமானது. எனவே, இந்த இறக்கம் தொடர்ந்து இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

பணவீக்கம் உயர்வாக இருப்பதால், அமெரிக்க ஃபெடரல் வங்கி வரும் 21-ம் தேதி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என்று தெரிகிறது. சிலர் 75 புள்ளிகள் உயர்த்தலாம் என்கிறார்கள்; இன்னும் சிலர் 100 புள்ளிகள் வரை உயர்த்தலாம் என்கிறார்கள். வட்டி விகிதம் எத்தனை சதவிகிதம் உயர்த்தப்படும் என 21-ம் தேதி அன்றுதான் தெரியும்.

சந்தை திடீர் இறக்கம்... இன்னும் இறங்குமா?

இந்தியாவிலும் பணவீக்கம் ஜூலையில் 6.71 சதவிகிதமாக இருந்தது, ஆகஸ்ட்டில் 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

அமெரிக்காவில் உயர்த்தப்படும் அளவுக்கு நம் நாட்டில் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இல்லை என்றாலும், இந்த முறை வட்டி விகித உயர்வு கணிசமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

இந்த வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் இருக்கும் வரை பங்குச் சந்தையில் விற்பனை அதிகமாகவே இருக்கும். இதனால் இறக்கத்தின் போக்கு தொடர்வதற்குக்கூட வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது குறுகிய காலத்துக் கானதாகவே இருக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், அங்கு ஏற்படும் நெருக்கடி காரணமாக ஐ.டி போன்ற துறைகள் பாதிக்கப்படலாம். அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிவாயு விலை உயர்ந்து வருவதால், பரவலாக பல துறைகளில் பாதிப்பை உண்டாக்கலாம்.

எனவே, குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் கவனமாக சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

சந்தையானது குறுகிய காலத்தில் ஏற்ற, இறக்க மாக இருந்தாலும், நீண்ட காலத்தில் ஏற்றத்தின் போக்கிலேயே இருக்க வாய்ப்பு இருப்பதால், 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய நினைப்ப வர்கள், தற்போது ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்யலாம்!